Today TNPSC Current Affairs January 24 2020

We Shine Daily News

ஜனவரி  24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. விரைவில் பிற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக 16 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
    • உரிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றவும் சட்ட அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
      • மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதில், தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஆதார் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் இது மொத்த உற்பத்தியில்4 சதவீதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இலங்கை பேரழிவில் இருந்து எதிர்பாராத சுமை ‘Contingent Liabilities from Natural Disasters Sri Lanka’ என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • சுமார் 32 பில்லியன் ரூபாய் இழப்பு வெள்ளத்தினால் ஏற்படுகின்றது. கடும் காற்றின் காரணமாக 11 பில்லியன் ரூபாய் இழப்பும் வறட்சி மற்றும் மண் சரிவினால்2 பில்லியன் ரூபாயும் சேதங்களுக்காக 1.8 பில்லியன் ரூபாயும் இழப்பு ஏற்படுகின்றது.

 

 

  • பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
    • வரும் ஜன.31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    • செய்தி துளிகள்:
      • 28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • இந்தியன் சூப்பர் லீக் தொடரில் 10 கோல்கள் அடித்து, அதிக கோல் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் வல்ஸ்கிஸ்.
    • 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 65-வது லீக் ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி 23 அன்று இரவு நடைபெற் றது
    • செய்தி துளிகள்:
      • சென்னை அணியில், நட்சத்திர வீரர் வல்ஸ்கிஸ் 13, 75-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியன் சூப்பர் லீக் தொடரில் 10 கோல்கள் அடித்து, முன்னிலையில் உள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுகிறது.
    • இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 87

குறள் பால்   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம் : விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

விளக்கம் : விருந்து உபசரித்தலாகிய அறத்தின் பயன் இன்ன அளவினது என்று கூற முடியாது  விருந்தினரின் தகுதியளவுக் கேற்றவாறு அஃது அமையும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Cabinet gave approval to the Election Commission of India to enter into MoU with the Independent High Authority for Elections of Tunisia and the Papua New Guinea Election Commission.
    • The MoU has been signed for elections for cooperation in the field of electoral management and administration.
    • Related Keys
      • Election Commission of India Formed: 25 January 1950
      • Election Commission of India Headquarters: New Delhi

 

 

  • External Affairs Minister S. Jaishankar and President of Niger Mahamadou Issoufou on 21st January jointly inaugurated the first convention centre established in Africa by India to honour the memory of Mahatma Gandhi.
    • The External Affairs Ministry said in a statement that the establishment of the Mahatma Gandhi International Convention Centre (MGICC) is a landmark for India-Niger friendship, as also a symbol of India’s firm commitment towards Africa.

 

 

  • Ministry of Environment, Forest and Climate Change (EFoCC) recently announced that India has achieved the complete phase out of ozone depleting Hydro Chloro Fluoro Carbons (HCFC). The achievement has its route to the Montreal Protocol.
    • Related Keys
      • Ministry of Environment, Forest and Climate Change Formed – 1985
      • Ministry of Environment, Forest and Climate Change Headquarters – New Delhi.

 

 

  • On January 22, 2020, the Defence Acquisition Council approved the Procurement of defence equipment that are of worth Rs 5,100 crores. The equipment are to be purchased from indigenous sources.
    • The equipment to be purchased include electronic Warfare systems that are manufactured by DRDO.
    • Related Keys
      • Ministry of Defence Formed 1776;
      • Ministry of Defence Headquarters- New Delhi

 

 

AWARDS

  • President Ram Nath Kovind presented the Pradhan Mantri Rashtriya Bal Puraskar, 2020 at Rashtrapati Bhavan. The Bal Puraskar is given by the government every year to recognize exceptional achievements of children in various fields.
    • These fields are innovation, scholastic achievements, social service, arts and culture, sports and bravery.
    • Related Keys
      • The Bal Shakti Puraskar is given to children in the fields of innovation, social service, scholastic, sports, art and culture, and bravery. the award carries a medal, a cash prize of Rs 1 lakh, a certificate and a citation.

 

 

WORDS OF THE DAY

  • Scornful – feeling or expressing contempt or derision.
    • Similar Words – contemptuous , derisive
    • Antonyms – admiring , respectful.

 

  • Secede – withdraw formally from membership
    • Similar Words – leave , quit.
    • Antonyms – join