Today TNPSC Current Affairs January 23 2020

We Shine Daily News

ஜனவரி  23

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியுள்ள 49 சிறார்களுக்கு பால சக்தி புரஸ்கார் விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
  • செய்தி துளிகள்
   • புதுமைக் கண்டுபிடிப்புகள், சமூகசேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, வீரதீரச் செயல்கள் உள்ளிட்டவற்றில் சாதனை படைத்துள்ள 5 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு ஆண்டுதோறும் பால சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு பதக்கம் ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
   • சிறுவயதிலேயே அறிவியல் துறையின் எழுத்தாளராகி உலக சாதனை புரிந்துள்ள ஓம்கார் சிங் என்ற சிறுவனும் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

 

 

 • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அசை;சகம் தேசிய ஸ்டார்ட்டப் ஆலோசனைக் குழுவை (National Startup Advisory Council) அமைத்துள்ளது.
  • நாட்டில் வலுவான தொடக்க நிலைகளை உருவாக்குவதற்கான வழிகளை சபை பரிந்துரைக்கும்.
  • செய்தி துளிகள்
   • உலக வங்கியின் “ஒரு வணிகத்தைத் தொடங்குதல்” (“Starting a Business”) தரவரிசையில் இந்தியா 136வது இடத்தில் உள்ளது.
   • உலகளவில் இந்தியாவின் தரத்தை மேம்படுத்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
   • இந்த சபைக்கு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தலைமை தாங்க உள்ளார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • உலக பொருளாதார மன்றத்தில் (WEF) ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் (United Nations AIDS (UNAIDS) Programme UNAIDS) திட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
  • திட்டத்தின் கருப்பொருள்: அனைவரும் அணுக: ஆரோக்கியத்திற்காக புதுமைகள், முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகளை மேம்படுத்துதல்
  • Theme: Access for all: Leveraging Innovations, Investments and Partnerships for Health
  • செய்தி துளிகள்
   • UNAIDS திட்டம் : எய்ட்ஸ் நோய் குறித்த உலகளாவிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து அதன் தாக்கத்தைத் தணிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
   • இது 1994 இல் நிறுவப்பட்டுத
   • இந்தியாவில் எய்ட்ஸ் திட்டத்தை NACO (National AIDS Control Organization –தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு) செயல்படுத்துகிறது.
   • உலகில் எச்.ஐ.வி தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய நாடு இந்தியா என்றும் UNAIDS கூறுகிறது.

 

 • பொருளாதார புலனாய்வு பிரிவு 2019ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீட்டை வெளியிட்டது. இந்த குறியீட்டை நார்வே முதலிடம் பிடித்தது.
  • நார்வே முறையே ஜஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் இரண்டாமிடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
  • முந்தைய தரவரிசையுடன் ஒப்பிடும்போது இந்தியா 10 இடங்களை இழந்து 51வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
  • செய்தி துளிகள் :
   • அறிக்கையின்படி, இந்தியாவின் தரவரிசை சரிவதற்கு முக்கியமாக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) எதிர்ப்பு மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததே காரணமாகும்.
   • இந்தியா 2019ல் இந்த முறை மிகக் குறைந்த மதிப்பெண்9 ஐப் பெற்றுள்ளது.
   • 2018ஆம் ஆண்டில், இந்தியா23 ஐப் பெற்றது.
   • இந்தியாவின் அதிகபட்ச மதிப்பெண் 2014இல்91 ஆக இருந்தது, அதன் பின்னர் குறைந்துவிட்டது.
   • இந்த ஆண்டு உலக சராசரி44 ஆக இருந்தது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா (விண் தோழன்) எனப்படும் பெண் ரோபோ அனுப்பி வைக்கப்படும். இந்த ரோபோ, விண்வெளியில் மனிதச் செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
  • பெங்களுரில் நடைபெற்ற ‘மனித விண் பயணம் முற்றாய்வின் தற்கால சவால்கள் மற்றும் எதிர்காலப் போக்குகள்’ என்ற கருத்தரத்தைத் தொடக்கி வைத்தார்.
  • செய்தி துளிகள்
   • விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதனை முதல் முறையாக விண்ணுக்கு அனுப்புவது தவிர, விண்வெளியில் தொடர்ந்து மனிதச் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில், புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முயற்சியாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது.
   • இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக சோதனை முயற்சியாக, நிகழாண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு (2021) டிசம்பரில் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் ‘ககன்யான்’ விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகளில் மகாராஷ்டிரம் இரண்டாவது முறையாக ஒட்டு மொத்த சாம்பயின் பட்டத்தைக் கைப்பற்றியது.
  • செய்தி துளிகள்
   • மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் குவாஹாட்டியில் 3-வது கேலோ இந்தியா போட்டிகள் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 6800-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 17, 21 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற்றன.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 86

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : விருந்தோம்பல்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு.

விளக்கம் : வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, இனிவரும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவன், தேவர்கட்கு நல்ல விருந்தினனாவான்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • President of Brazil Jair Messias Bolsonaro will arrive in New Delhi on a four-day state visit to India. President Bolsonaro will be the chief guest at the 71st Republic Day Parade at RajPath in the national capital on January 26.
  • He will be accompanied by a delegation consisting of seven Ministers, Chairman of Brazil-India Friendship Group in the Brazilian Parliament.
  • Related Keys
   • Brazil Capital: Brasilia
   • Brazil Official language: Portuguese

 

 

BANKING NEWS

 • The Reserve Bank of India (RBI) said that it has cancelled the Certificate of Authorisation (CoA) of Vodafone m-pesa on account of voluntary surrender of authorisation.
  • Following the cancellation of the CoA, the company cannot transact the business of issuance and operation of prepaid payment instruments.
  • Related Keys
   • The Reserve Bank of India Headquarters: Mumbai
   • The Reserve Bank of India Founded: 1 April 1935

 

 

SCIENCE AND TECH UPDATES

 • France will train Indian flight surgeons to enable them to monitor the health of astronauts selected for the ambitious human space mission Gaganyaan. The two-week training is a critical aspect of the Gaganyaan project that is aimed at sending three Indians to space by 2022.
  • The flight surgeons, who will be Indian Air Force doctors specialising in aviation medicines and responsible for the health of astronauts before, during and after flight, will be shortlisted soon.
  • Related Keys
   • Gaganyaan crewed vehicle is planned to be launched on ISRO’s GSLV Mk III in December 2021.
   • Gaganyaan Manufacturer – HAL and ISRO

 

 

SPORTS

 • Qatar and FIFA published the first jointly issued legacy planning strategy ahead of the football World Cup in 2022. FIFA and the Qatari Supreme Committee organisers said in a statement in Doha that it contains pledges on labour and LGBT rights alongside protections for activists and journalists.
  • A total of 22 objectives have been described in detail.
  • Related Keys
   • Qatar Capital: Doha
   • Qatar Currency: Qatari riyal

 

 

 • Indian shooters Divyansh Singh Pawar and Apurvi Chandela have clinched a gold medal each in Meyton Cup in Innsbruck, The Meyton Cup is a private tournament where shooters go on their own to participate to gain experience before international events.
  • While Divyansh won the gold in the men’s 10m air rifle event with an effort of 249.7, Auprvi bagged the yellow metal in the 10m air rifle women’s category with a 251.4.

 

 

WORDS OF THE DAY

 • Rapport – a relationship of mutual understanding between people
  • Similar Words – affinity , bond
  • Antonyms – alienation, disaffection

 

 • Ravage – cause severe and extensive damage to.
  • Similar Words – devastate , ruin
  • Antonyms – spare, conserve.

 

 


Call Us