Today TNPSC Current Affairs January 21 2020

 

We Shine Daily News

ஜனவரி  21

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

தமிழக நிகழ்வுகள்

 

  • தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், பெரிய வகை சரக்கு கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு பனாமா நாட்டு கொடியுடன்52 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும், 12.23 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய வகை சரக்குக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) வந்தடைந்தது.
    • தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு 93,353 டன் சரக்குகளுடன் பெரிய வகை கப்பல் வந்தது புதிய சாதனை ஆகும்.
    • செய்தி துளிகள்:
      • இதற்குமுன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி எம்.வி. என்பிஏ வேர்மீர் என்ற கப்பலின் மூலம் 89,777 டன் நிலக்கரி கையாளப்பட்டது.
      • தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், இந்த ஆண்டு மகளிர் சிஆர்பிஎஃப் வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகளும் முதல் முறையாக இடம்பெற உள்ளது.
    • ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் மகளிர் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 65 பேர் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.
    • செய்தி துளிகள்:
      • சிஆர்பிஎஃப் 1986ம் ஆண்டு முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மகளிர் படைப்பிரிவை உருவாக்கியது.
      • தற்போது இதில் 6 படைப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தலா ஆயிரம் மகளிர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள 2020ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி ஜனவரி 24ஆம் நாள் நடைபெற உள்ளது. 170 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 460 ஊடகங்கள், நடப்பு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி பற்றிய செய்திகளை வெளியிடும்.
    • இந்தியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட 20க்கும் மேலான நாடுகளின் திரையரங்கு மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில், வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் காணொலி ஒளிபரப்பப்படும்.
    • செய்தி துளிகள்:
      • இந்நிகழ்ச்சி 1983ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளை தாக்கும் கே-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
    • இந்த சோதனை ஆந்திர மாநில கடற்பகுதியில் நடைபெற்றது என்றும், இந்த ஏவுகணை ஆனது சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த ஏவுகணையை உருவாக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.
      • 700கி.மீ தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் பிஓ-5 ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • கேலோ இந்தியா யூத் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • கேலோ இந்தியா போட்டியில் இறுதி ஆட்டத்தில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது தமிழகம். தமிழக வீராங்கனை நிவேதா ஸ்ரீ அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்
    • செய்தி துளிகள்:
      • தமிழக அணி ஏற்கெனவே கடந்த 2019 கேலோ இந்தியா, யூத் தேசியப் போட்டி இறுதிச் சுற்றில் வெள்ளிப் பதக்கமே வென்றிருந்தது.

 

 

திருக்குறள்

 

குறள் : 84

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

விளக்கம் :முகம் மலர்ந்து விருந்தினரை உபசரிப்பவனது வீட்டில், திருமகள் மனம் மகிழுந்து வாழ்வாள்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On January 20, 2020, the APEDA (Agricultural and Processed Food Products Development Authority) has added 135 laboratories to the existing 51 laboratories. With this initiative, the total number of agricultural product testing laboratories in the country has increased to 186.
    • Related Keys
      • Agricultural sector today employs more than 60% of the population.
      • India is one of the highest-ranking countries in terms of rice, dairy, cotton, fruits, meat, vegetables and seafood.

 

 

  • Aam Aadmi Party national convener and Chief Minister of Delhi Arvind Kejriwal launched party’s Guarantee Card ahead of upcoming assembly elections in the national capital.
    • This card lists 10 promises that AAP will deliver on if it is elected to rule Delhi again.
    • It included free bus services, electricity, water supply, pollution, etc.
    • Related Keys
      • Delhi the second-highest populated city in India after Mumbai,
      • Delhi Literacy (2011) 21%[17]

 

 

INTERNATIONAL NEWS

  • Myanmar and China signed 33 bilateral deals including agreements, MoUs, exchange letters and protocols on the concluding day of the two day visit by the Chinese President Xi Jinping to Myanmar. A large number of these deals relate to the implementation of the China Myanmar Economic Corridor (CMEC) under the Belt and Road Initiative (BRI) launched by
    • The two countries signed a concession agreement and shareholders’ agreement for the Kyaukphyu Special Economic Zone (SEZ) deep seaport project.
    • Related Keys
      • Myanmar President Win Myint
      • Myanmar Currency: Burmese kyat

 

 

SCIENCE AND TECH UPDATES

  • India has successfully test-fired a 3,500 kilometre range nuclear capable missile that can be launched from a The test of the K-4 ballistic missile was conducted off the Vizag coast in Andhra Pradesh on January 19.
    • With this test, India has moved one more step towards the induction of this ballistic missile on the INS Arihant class of nuclear submarines. The missile was developed by Defence Research and Development Organisation (DRDO).
    • Related Keys
      • DRDO Founded: 1958
      • DRDO is under the administrative control of the Ministry of Defence, Government of India.

 

 

SPORTS

  • In wrestling, India has returned with seven medals from the Rome Ranking Series. Bajrang Punia and Ravi Kumar Dahiya claimed gold medals in the tournament.
    • The 25-year-old Bajrang staged a comeback to secure a 4-3 win against USA’s Jordan Michael Oliver in the 65kg freestyle category.

 

 

WORDS OF THE DAY

  • Obtuse – annoyingly insensitive or slow to understand.
    • Similar Words – dull , slow-witted
    • Antonyms – Fast Learner, Intelligent

 

  • Omnipotent – having unlimited power.
    • Similar Words – all-powerful , almighty
    • Antonyms – powerless