Today TNPSC Current Affairs January 18 2020

We Shine Daily News

ஜனவரி  18

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • அசாம் உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இந்திய அரசு (Gol), அசாம் அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 88 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • கடன் ஒப்பந்தம் அசாமின் பயணிகள் படகுத் துறையை உள்கட்டமைப்பு மற்றும் அதன் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நவீனமயமாக்க முயல்கிறது.
  • அரசாங்க படகுகள் அசாம் ஷிப்பிங் நிறுவனத்தால் (Assam Shipping Company (ASC)) இயக்கப்படுகின்றன. டெர்மினல்கள் மற்றும் முனைய சேவைகள் அசாம் மாநிலத்தில் உள்ள அசாம் துறைமுக நிறுவனம்(Assam Ports Company (APC)) வழங்குகின்றன.
  • செய்தி துளிகள்
   • புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (International Bank for Reconstruction and Development (IBRD)) அசாம் உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டத்தின் நவீனமயமாக்கலுக்காக 88 மில்லியன் கடன் தொகையை வழங்கும். கடனின் இறுதி முதிர்வு5 ஆண்டுகள், 5 ஆண்டுகால அவகாசம்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா கொரு ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) ஜிசாட்-30 தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோள், திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • 2020- ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஏரியன் 5 விஏ -251 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனுடன் பிரான்ஸை சேர்ந்த இடெல்சாட் நிறுவனத்தின் இடெல்சாட் கனெக்ட் செயற்கைக்கோளும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
  • செய்தி துளிகள்
   • இந்த அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் அதிலுள்ள கே.யு.பேன்ட் அலைவரிசை மூலமாக இந்தியா மற்றும் அதன் தீவுகளுக்கு மட்டுமின்றி வளைகுடா நாடுகள் உள்ளிட்ட ஏராளமான ஆசிய நாடுகளுக்கும் தகவல்தொடர்பு சேவையை வழங்க உள்ளது.
   • மேலும், செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டடிருக்கும் சி-பேன்ட் மூலம் ஆஸ்திரேலியாவுக்கும் தகவல்தொடர்பு சேவையை அளிக்க உள்ளது என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்;துள்ளார்.
   • ஜிசாட் – 30 தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாகும்.

 

 

 • அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 2030 ஆம் ஆண்டளவில் கார்பன் எதிர்மறையாக” (“Carbon Negative”) மாறும் என்று அறிவித்துள்ளது.
  • காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் அதிகரித்த முயற்சிகளின் வடிவத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து நிறுவனம் உருவாக்கிய அனைத்து கார்பன் உமிழ்வுகளையும் அகற்றுவதாக சபதம் செய்வதாக நிறுவனம் அறிவித்தது.
  • செய்தி துளிகள்
   • மைக்ரோசாப்ட் கார்பன் பிடிப்பு மற்றும் அகற்றுவதற்கான தொழில்நுட்பத்திற்கான காலநிலை கண்டுபிடிப்பு நிதியில்” (Climate innovation fund) 1 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்துள்ளது.
   • கார்பன் வாயு வெளியேற்றம் தான் காற்று மாசுக்கும். பருவநிலை மாற்றத்துக்கும் முதன்மையான காரணங்கள் என அறிவியலாளர்கள் கண்டறிய, இனி வரும் காலங்களில் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும்‘Kyoto Protocol’-லில் கையொப்பமிட்டன. அதன்படி ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியேற்றும் கார்பன் அளவை குறைத்து வருகின்றன.

 

 

 • வரும் 2025 –ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் அனைத்து எஸ் -400 அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் ஒப்படைக்கப்படும் என்று ரஷியா தெரிவித்தது.
  • இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து 5 அதிநவீன எஸ் – 400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொள் முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்டது.
  • அக்டோபர் 2018-இல், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா 5 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • செய்தி துளிகள்
   • எஸ் -300 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான எஸ் -400 முன்னர் ரஷ்ய பாதுகாப்புப் படைகளுக்கு மட்டுமே கிடைத்தது. இது அல்மாஸ்-ஆன்டே என்பவரால் தயாரிக்கப்பட்டு 2007 முதல் ரஷ்யாவில் சேவையில் உள்ளது.
   • மத்திய பாதுகாப்பு அமைச்சர் : ராஜ்நாத் சிங்

 

 

 • சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 1949-க்கும் பிந்தைய குறைந்தபட்ச எண்ணிக்கை எட்டியுள்ளது. அந்த நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகமாகி, உழைக்கும் இளைஞர்களின் விகிதம் குறைந்து வருவதால், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை 2016-ல் அரசு தளர்த்தியது. எனினும், கடந்த ஆண்டில் 1,000 பேருக்கு48 குழந்தைகளே பிறந்துள்ளது அதிகாரிகளைக் கவலையடையச் செய்துள்ளது.
  • செய்தி துளிகள்
   • ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, ‘எதிர்கால உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2019’ (World Population Prospects 2019’), இந்தியா வெறும் எட்டு ஆண்டுகளில், அதாவது 2027க்குள் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

திருக்குறள்

 

குறள் : 81

பால் : அறத்துப்பால்

இயல் : இல்லறவியல்

அதிகாரம் : விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கம் : மனைவியோடு வீட்டில் இருந்து, பொருளைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரை உபசரித்து, அவர்கட்கு உதவி செய்வதற்கே யாகும்

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The state of art- new Tejas Express train between Ahmedabad and Mumbai Central has been flagged off by Gujarat Chief Minister Vijay Rupani at Ahmedabad Railway Station.
  • On the inaugural run, the Train No. 09426 which left Ahmedabad at 09.30 A.M. reached Mumbai at 04.00 P.M.
  • Related Keys
   • The Tejas Express is India’s first semi-high speed fully air-conditioned train Introduced by Indian Railways.
   • The inaugural run of Tejas Express was on 24 May 2017 from Mumbai Chhatrapati Shivaji Maharaj Terminus

 

 

 • Indian Railways’ South Central Railway(SCR) zone has signed a Memorandum of Understanding (MoU) with State Bank of India (SBI) for ‘doorstep banking’. The signed MoU will help in direct pickup of earnings covering all 585 Railway stations over SCR Zone.
  • With the facility of direct pick up of cash from all the railway stations it will save the tedious and complex activity of movement of cash earnings through ‘cash safes’ by train.
  • Related Keys
   • The South Central Railway Founded: 2 October 1966
   • The South Central Railway Headquarters location: Secunderabad.

 

 

 • The first Session of India-Norway Dialogue on Trade & Investment (DTI) was convened in New Delhi on 15-16 January, 2020. The session was based on the Terms of Reference (ToR) signed between India and Norway on 8th January, 2019 in New Delhi, during the visit of Prime Minister of Norway.
  • Related Keys
   • Norway Capital: Oslo
   • Norway Currency: Norwegian krone

 

 

INTERNATIONAL NEWS

 • Brazil has inaugurated a new US$100 million Antarctic base, built by Chinese company CEIEC to replace a research station destroyed by fire almost seven years ago.
  • The new 48,375 sq ft facility was bigger and safer, with 17 laboratories, a heliport, and other advances. Scientists will use the base to study microbiology, glaciers, and climate, among other areas.
  • Related Keys
   • Brazil Capital: Brasilia
   • Brazil Currency: Brazilian real

 

 

ECONOMY

 • On January 17, 2020, one of the world’s largest retailer Amazon announced that it has planned to invest 1 billion USD in India and generate 1 million jobs. Globally Amazon has increased its employee base four times.
  • In order to involve small and medium businesses, a mega summit called the smBhav was organized by Amazon in the capital on January 14, 2020.
  • Related Keys
   • Amazon Founder: Jeff Bezos
   • Amazon Founded : July 5, 1994

 

 

WORDS OF THE DAY

 • Malapropism – misuse of a word by confusion with one that sounds similar.
  • Similar Words – solecism , error , misuse
  • Antonyms – praise

 

 • Malice – the desire to see others suffer
  • Similar Words – spite , malevolence
  • Antonyms – benevolence , Kind – Hearted

FaceBook Updates

Call Us