Today TNPSC Current Affairs January 14 2020

We Shine Daily News

ஜனவரி  14

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழுவின் இரண்டாவது கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
    • ரூ. 6,608 கோடியில் 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6763 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    • செய்தி துளிகள் :
      • முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழு தமிழக முதல்வரின் தலைமையில் செயல்படுகிறது.
      • முதலீட்டு வழிகாட்டுதல் முதல் கூட்டம் நவம்பர் 1 –ம் தேதி நடைபெற்றது.
      • தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரிய சிறப்புமிக்க கட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.
    • பழைய கரன்ஸி கட்டடம், பெல்வடேர் இல்லம், மெட்கஃபே இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவை நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.
    • விழாவில் பேசிய பிரதமர் மோடி கலாச்சார பாரம்பரிய மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள, இந்திய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
    • செய்தி துளிகள் :
      • கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சகத்தில் “நாணயங்கள் & வர்த்த” அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
      • கொல்கத்தாவில் தற்போது ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் 200 – ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
      • இந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றான “இந்திய அருங்காட்சியகம்” கொல்கத்தாவில் அமைந்துள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ரெய்சினா மாநாடு” தில்லியில் இன்று தொடங்குகிறது.
    • சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான,ரெய்சினா பேச்சுவார்த்தை” மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது.
    • இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவருடன் 7 நாடுகளின் முன்னாள் பிரதமர் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • செய்தி துளிகள் :
      • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சர்வர்ரிசர்க்ஃ பவுண்டேஷனும் இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.
      • 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
      • சர்வதேச வர்த்தகம் தொடர்பான விவாதம், அரசியல், பொருளாதாரம் , ராணுவ வலிமை, சர்வதேச வளர்ச்சி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து விவாதங்கள் நடைபெற உள்ளன.

 

 

நியமனங்கள்

 

  • சிஆர்பிஎஃப் தலைவராக ஏ.பி.மகேஷ்வரியை மத்திய பணியாளர் அமைச்சகம் நியமித்துள்ளது.
    • மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
    • ஏ.பி. மகேஷ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலராக பதவி வகித்து வந்தார்.
    • செய்தி துளிகள் :
      • உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படை சிஆர்பிஎஃப் ஆகும்.
      • மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை நாடு முழுவதும் உள்நாட்டு பாதுகாப்பு பணியிலும், நக்ஸல் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
      • சிஆர்பிஎஃப் – ல்25 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

 

 

விளையாட்டுச் செய்திகள்

 

  • ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னீஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • தே போன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
    • செய்தி துளிகள் :
      • சாம்யின் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
      • ஆக்லாந்து போட்டியில் வென்ற 30 லட்சம் பரிசுத் தொகையை ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார் செரினா.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • சாஹியோக் – கைஜின்” – 2020 கூட்டு பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.
    • இந்திய கடலோர காவல் படையும், ஜப்பான் கடலோர காவல்படையும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
    • ஜப்பான் கடலோரக் காவல் படையின் “எச்சிகோ” ரோந்துக் கப்பல் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது.
    • செய்தி துளிகள் :
      • இந்திய, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல்படையினர் கடந்த 2000 – ஆவது முதல் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
      • இந்தியா – ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி “தர்மா கார்டியன்” எனப்படும்.
      • “தர்மா கார்டியன்” கூட்டு ராணுவப் பயிற்சி 2019 – ஆம் ஆண்டு மிசோராமில் நடைபெற்றது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 77

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : அன்புடைமை

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்

விளக்கம் : எலும்பு இல்லாத புழுக்கள் முதலியவற்றை வெயில் காய்ந்து வருத்துவதுபோல, அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Indian Institute of Food Processing Technology (IIFPT), Bathinda signed Memorandum of Understanding (MoU) with 8 different reputed institutes of the region in the states of Punjab and Haryana.
    • The MoU was aimed to increase the income of small farmers. It also aims to open new opportunities for the benefit of farmers
    • Related Keys:
      • IIFPT was organized in 1967
      • IIFPT was located in Thanjavur

 

 

  • The Special National Vendor Development Program (NVDP) on Petroleum and Steel sectors for SC/ST Entrepreneurs was held on 13 January 2020.
    • It was organized by the Dalit Indian Chamber of Commerce and Industry (DICCI). The measures taken by GoI for the SC/ST community including National Infrastructure Pipeline and Ujjwala connections were discussed.

 

 

  • Assam’s Dibrugarh district won the Plastic Waste Management Award 2020. It was awarded for being the best district of India in the plastic waste management category during Swachhta Hi Sewa 2019.
    • The award was received by Pallav Gopal Jha, Deputy Commissioner from renowned Bollywood actor Amir Khan at a function held at Pride Plaza, Aerocity in Delhi.
    • Related Keys:
      • Swachhta hi Seva 2019 is a nationwide awareness and mobilization campaign on Swachhta.
      • It was launched by Prime Minister Narendra Modi at Mathura on 11 September 2019.

 

 

  • Tata Power Solar Systems Ltd bagged a megaproject from NTPC for a 250-megawatt solar project under the Central Public Sector Undertakings (CPSU) scheme.
    • The cost of the project is Rs.1,505 crore. It has been estimated to be completed in a period of 20 months.
    • Related Keys:
      • The CPSU scheme aims to set up 12,000 MW of solar capacity by government companies by the financial year 2022-23.
      • The Cabinet already sanctioned a viability gap funding support of Rs.8,580 crore towards the scheme capped at Rs.70 lakh per MW.

 

 

AWARDS

  • Ishwar Sharma from the UK has been honoured with the Global Child Prodigy Award 2020. The award recognized for the achievements in spiritual discipline yoga.
    • He received his Certificate of Achievement at a special event attended by Nobel Laureate Kailash Satyarthi and Dr. Kiran Bedi, Lieutenant Governor of Puducherry, in New Delhi in January 2020.
    • Related Keys:
      • The award is a Global Talent Recognition for Child Prodigies.
      • The award recognizes the kids below 15 years who are extraordinary in their own way.

 

 

WORDS OF THE DAY

  • Scourge – a source of persistent trouble, pain, suffering
    • Synonym – menace, pestilence
    • Antonym – blessing, happiness

 

  • Malaise – a general feeling of discomfort, illness, or unease whose exact cause is difficult to identify.
    • Synonym – despair, doldrums
    • Antonym – cheer, comfort