Today TNPSC Current Affairs January 10 2020

We Shine Daily News

ஜனவரி  10

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சட்டப் பேரவைகளிலும், மக்களவையிலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
    • தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
    • இந்தத் தீர்மானத்தில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு வழங்கப்பட்ட நியமன உறுப்பினர் பதவியை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தமிழக சட்டப்பேரவையில் ஒரு நியமன உறுப்பினர் பதவி ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
      • தமிழக சட்டப்பேரவை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏ – நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ்.

 

               

தேசிய நிகழ்வுகள்

 

  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கும் “தாய்மடி” (அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
    • இதன் மூலம் 42 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 82 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைய உள்ளனர்.
    • இதற்காக அரசு ரூ.6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ஆந்திர அரசு “அன்று – இன்று” என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
    • ஆந்திர அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயமாக்கியுள்ளது.
    • இந்தியாவில் அம்ம வொடி (தாய்மடி) திட்டத்தின் மூலம் பிள்ளைகளுடைய தாயின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது.

 

 

  • மூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருள் விநியோகம் திட்டத்தை மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
    • தனிமையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 83 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவதாக தெரிவித்துள்ளது மாநில அரசு.
    • செய்தி துளிகள் :
      • மத்திய பிரதேச அரசு பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்த “எம்ரேஷன் மித்ரா” மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
      • மத்திய பிரதேச மாநில கவர்னர் லால்ஜி டான்டன்
      • மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்.

 

 

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் “நிதி ஆயோக்” கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
    • நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்கள், தொழில்துறை தலைவர்கள், வேளாண்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
    • நாட்டின் பொருளாதாரத்தை வரும் 2024 – ம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • நிதி ஆயோக் என்பது மத்திய அரசின் கொள்கை குழுவாகும்.
      • நிதி ஆயோக் ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவை குழுவின் தீர்மானத்தின் மூலமாக அமைக்கப்பட்டது.
      • நிதி ஆயோக் தலைவராக பிரதமரும், துணைத் தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • 3-ஆவது கேலோ இந்தியா யூத் போட்டிகள் குவாஹாட்டியில் இன்று (10.01.2020) தொடங்குகிறது.
    • மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் 19 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.
    • 37 மாநில, யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 17 வயது மற்றும் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • செய்தி துளிகள் :
      • கேலோ இந்தியா போட்டிகள் முதல் பதிப்பு டெல்லியிலும், இரண்டாவது பதிப்பு புனேயிலும் நடைபெற்றன.
      • சுற்றுச் சூழலை பேணும் வகையில் மின்சார வாகனங்கள் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ளன.

 

 

முக்கிய தினங்கள்

 

  • வெளிநாடு வாழ் இந்தியர் தினம் – ஜனவரி 9
    • காரணம் : தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த காந்தியடிகள் 1915 – ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நாடு திரும்பியதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
    • செய்தி துளிகள் :
      • வெளிநாடு வாழ் இந்தியர் என்பது இந்தியக் கடவுச் சீட்டினை பெற்று வெளி நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் ஆவர்.
      • இத்தினம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் பிரவாசி பாரதிய தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் : 73

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : அன்புடைமை

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

விளக்கம் : அரிய உயிருக்கு, உடம்போடு பொருந்திய தொடர்பு யாதெனின், அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையே என அறிஞர் கூறுவர்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Indian Railways has enhanced security in major railway hubs by installing IP based video surveillance system. The surveillance has been installedin parking areas, entrance and exit platforms, waiting hall and over bridges.
    • The surveillance system is to be installed in 983 stations at a budget of Rs 250 crores. The budget is being allocated from Nirbhaya funds.
    • RELATED KEYS
      • Indian Railways
      • Founded- April 16, 1853
      • Headquarters- New Delhi
      • Ministry of Railway- PiyushGoyal
      • Chairman of Railway Board- Vinod Kumar Yadav

 

 

  • Maharashtra Chief Minister Uddhav Thackeray inaugurated the Advantage Maharashtra expo 2020 in Aurangabad.The four-day mega industrial exhibition has been organised by the Marathwada Association of Small Scale Industries and Agriculture (MASSIA).
    • Growth of Marathwada industries in technology and innovation and the products produced and exported from the region will be showcased in this exhibition.
    • RELATED KEYS
      • Governor – Bhagat Singh Koshyari
      • Chief Minister – Uddhav Thackeray

 

 

INTERNATIONAL NEWS

  • India continued to be the top sourcing market for Sri Lankan tourism with Indian tourists constituting maximum 19 percent of total tourist arrivals to the island nation in 2019.The latest data released by Sri Lankan tourism revealed that 3,55,002 Indian tourists visited Sri Lanka last year against total arrival of around 1.91 million.
    • Sri Lankan tourism suffered a setback following Easter Sunday attacks last April and the annual tourist arrival dropped by 18 percent since 2018 figures.
    • RELATED KEYS
      • President – GotabayaRajapaksa
      • Prime Minister – MahindaRajapaksa

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On January 9, 2020, Ministry of New and Renewable Energy released its year end review. According to the report, over 150 GW of renewable energy has been installed so far in India.
    • Under KUSUM initiative, around 17 lakh solar powered agricultural pumps were installed.
    • Related Keys
      • The scheme to set up solar PV power plants in compliance with the WTO was approved. Thiswas launched to encourage Make in India solar PV manufacturing.

 

 

IMPORTANT DAYS

  • PravasiBharatiya Divas is celebrated every year to mark the contribution of overseas Indian community in the development of India. It also commemorates the return of Mahatma Gandhi from South Africa to India on 9 January 1915.
    • Established in 2003 the celebratory event is organised by the Ministry of External Affairs every year on this day.
    • RELATED KEYS
      • The PravasiBharatiyaSamman is being presented to honour exceptional NRIs (Non-ResidentIndians) for their contribution towards the country.

 

 

WORDS OF THE DAY

  • Imbroglio – an extremely confused, complicated, or embarrassing situation.
    • Synonym – complication,predicament,plight,muddle
    • Antonym – simplicity,ease,agreement

 

  • Dismantling – take (a machine or structure) to pieces.
    • Synonym – deconstruct,disassemble
    • Antonym – build,construct,restore