Today TNPSC Current Affairs January 08 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 08

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் முதல் 12 மாவட்டங்கள்
    • குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகமானது 10 நாட்கள் நடைபெறும் (நவம்பர் 09 முதல் 19) போட்டியினை உலக கழிப்பறைத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்தது.
    • இந்த அமைச்சகமானது முதல் பத்து இடங்களைப் பிடித்த 12 மாவட்டங்களின் (கூட்டுவெற்றியாளர்கள் உட்பட) பட்டியலை வெளியிட்டது.
      • Bankura, West Bengal
      • Ganderbal, Jammu and Kashmir
      • Ghaziabad, Uttar Pradesh
      • Hazaribagh, Jharkhand
      • Jehanabad, Bihar
      • Kandhamal, Odisha
      • Kodagu, Karnataka
      • Lohardaca, Jharkhand
      • Murshidabad, West Bengal
      • Salem, Tamil Nadu
      • Sangli, Maharashtra
      • South West Khasi Hills, Meghalaya
    • தமிழ்நாட்டின் சேலம் மாவட்டமானது உலக கழிப்பறை தினப் போட்டியில் முன்னணி 12 மாவட்டங்களில் இடம் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனமான 1 HMCL மற்றும் BPCL, HPCL மற்றும் 10CL போன்ற முன்னணி எண்ணெய் நிறுவனங்களுக்கிடையே FASTag முறையில் அவர்களின் குழாய்கள் மூலம் பெட்ரோலை விற்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
    • FASTag என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இயக்கப்படும் ஒரு மின்னனு கொள்முதல் முறையாகும். இதன் மூலம் டோல் ப்ளாஸாவில் தடையின்றி செல்ல இயலும்
    • FASTag ரேடியோ அதிர்வெண் அடையாளம் கண்டறிதல் (FRID – Radio Frequency Identification) தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உள்நாட்டு தொழிலாளர்கள் பற்றிய தேசிய கொள்கை வரைவை அறிவித்துள்ளது. (National Policy for domestic workers)
    • இது தனியார் குடும்பங்களில் வேலை செய்யும் 39 லட்ச தொழிலாளர்களுக்கும், வீடுகளில் வேலை செய்யும் 26 லட்சம் பெண் தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இது ஒழுங்குபடுத்தபடாத தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டம், 2008 இன் கீழ் (Unorganised workers social security Act, 2008) மத்திய அரசு, வாழ்க்கை பாதுகாப்பு, சுகாதார மற்றும் மகப்பேறு நலன்கள், வயதானவர்களுக்கான பாதுகாப்பு போன்ற நலன்களை ஒழுங்குபடுத்தாத வீட்டு தொழிலாளர்களுக்கு வழங்க உள்ளனர்.

TNPSC Current Affairs: January 2019 – National News Image

  • ஆந்திர பிரதேச முதல்வர், சமீபத்தில் குப்பம் நகரில் சித்தூர் போலீசாரால் வடிவமைக்கப்பட்ட பிராண ரக்சா இணையதள செயலியை வெளியிட்டிருக்கின்றார்.
    • இந்த செயலியானது சிக்கல்களில் உள்ள பெண்களை தொடர்பு கொள்ளவும் சாலை விபத்துகளில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • அரசானது உலகளாவிய சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் சிக்கலான பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக இந்திய வேளாண்மையை மாற்றுதல் எனும் திட்டத்தினை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.
    • இந்த திட்டமானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இணைந்து, உயர் பாதுகாப்பு மதிப்புடைய கீழ்க்காணும் 5 மாநிலங்களின் நிலப்பரப்புகளில் செயல்படுத்தப்படும்.
      • மத்தியப் பிரதேசம் – சம்பல் நிலப்பரப்பு
      • மிசோரம் – தம்பா நிலப்பரப்பு
      • ஒடிசா – சிம்லிபால் நிலப்பரப்பு
      • ராஜஸ்தான் – பாலைவன தேசியப் பூங்கா நிலப்பரப்பு
      • உத்தரகாண்ட் – கார்பெட் ராஜாஜி நிலப்பரப்பு
    • இந்த பசுமை AG திட்டமானது பல்லுயிர்த்தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த நில மேலாண்மை குறிக்கோள்கள் மற்றும் நடைமுறைகளை இந்திய வேளாண்மையுடன் ஒருங்கிணைக்க முற்படுகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • POCSO சட்டத்தில் திருத்தம்
    • 2012ம் ஆண்டின் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த திருத்தங்களானது குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
    • இந்த திருத்தங்களானது குழந்தைகள் மீதான மோசமான உடல் ரீதியாக ஊடுருவும் தன்மை கொண்ட பாலியல் வன்கொடுமை தாக்குதல்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது.
    • பிரிவு எண் 9ன் திருத்தமானது பேரிடர் மற்றும் இயற்கைப் பேரழிவு காலங்களிலும் குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்குவா மாகாண அரசானது பெஷாவரில் உள்ள பண்டைய இந்து சமய தளமான பஞ்ச் தளத்தை தேசிய பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
    • பக்துன்க்குவா மாகாண (KP – Khyber Pakhtunkhwa) தொல்லியல் இயக்குநரகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை KP 2016 தொல்பொருளியியல் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
    • இந்த கோயிலில் உள்ள 5 குளங்களின் மூலமாக பஞ்ச் தீர்த் எனும் இந்த பெயரை அத்தளம் பெற்றது.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சீனா வெற்றி
    • ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக அல் ஐனில், திங்கள் கிழமை கிர்கிஸ்தானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா வென்றது.

 

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • மூளைக்கான பேஸ்மேக்கர் – வாண்ட் (WAND)
    • அறிவியலாளர்கள் ‘கம்பியில்லா குளறுபடியற்ற நரம்பு செயல்பாடு மாற்றக் கருவி (Wireless artifact-free neuro modulation device – WAND) எனும் பெயரிடப்பட்ட வலிப்பு மற்றும் பர்கின்சன் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
    • இது மூளையின் மின்செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மூளையின் மின்னோட்டத்தைத் தூண்டுவதற்காகவும் மூளைக்கான பேஸ்மேக்கர் கருவியைப் போன்று செயல்படுகிறது.
    • இந்த சாதனமானது கம்பியில்லாத மற்றும் தன்னிச்சையாக செயல்படக் கூடியது ஆகும். மேலும் ஒரே நேரத்தில் இது மின்னோட்டத்தினைத் தூண்டி மின் சமிக்ஞைகளை மூளையில் பதிவு செய்கிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – Science and Technology News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • MSME துறையைப் புதுப்பிப்பதற்கான RBI குழு
    • இந்திய ரிசர்வ் வங்கியானது செபியின் முன்னாள் தலைவரான U.K. சின்ஹாவின் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவினை அமைத்துள்ளது.
    • இந்த குழுவானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME – Micro, Small and Medium) பிரிவின் பொருளாதார மற்றும் நிதிநிலைத் தன்மைக்கான நீண்ட காலத் தீர்வுகளை வரிவாக பரிசீலித்து முன்மொழியும்.
      MSME பிரிவானது பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST நடைமுறைப்படுத்தலின் காரணமாக சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கின்றது.

 

 TNPSC Current Affairs: January 2019 – Economic News Image

 

 

English Current Affairs

 

National News

 

  • The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi approved 10 pc quota in jobs and educational institutions for economically weaker sections in general category.
    • For the implementation of the quota, Articles 15 and 16 of the Constitution will have to be amended.

 

  • The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi cleared the redrafted Citizenship Amendment Bill thus providing Indian citizenship to non-Muslims from Bangladesh, Afghanistan and Pakistan.
    • First introduced in Parliament in 2016, the bill seeks to amend the Citizenship Act 1955.

 

  • Prime Minister of Norway Erna Solberg has arrived in New Delhi on a three-day state visit to India. She was accompanied by senior officials from her government and a large business delegation. She will participate in the Indo-Norwegian Business Conference.

 

  • The North Central Railway, NCR has launched a mobile application to help people navigate through Prayagraj city during Kumbh Mela starting from January 15. The ‘Rail Kumbh Seva Mobile App’ will also provide information regarding all the ‘Mela special’ trains that will be run during the period.
    • Additionally, the app will provide a link to the user to buy both unreserved and reserved train tickets.

 

  • The Polavaram irrigation project in Andhra Pradesh created two Guinness world records for ‘pouring the highest amount of concrete’ and ‘largest continuous concrete pour in 24 hours’.
    • The Polavaram irrigation project is located in West Godavari district of Andhra Pradesh.

 

International News

 

  • Egypt opened West Asia’s largest cathedral in its New Administrative Capital, 45 kms away from its capital, Cairo.
    • President Abdul Fattah al-Sisi inaugurated the newly-built Cathedral of Nativity on the eve of Coptic Christmas.

 

  • China passed law to make Islam compatible with socialism and ‘sinicize’ it within next five years. The law was passed after Chinese government officials met representatives from eight Islamic groups.

 

Economy

 

  • The Group of States’ Finance Ministers (GoFM) led by Deputy Chief Minister of Bihar, Sushil Kumar Modi approved levy of 1%‘calamity cess’ by Kerala for a period of two years to fund rehabilitation work in the state of Kerala. It will recommend the same to the GST council meeting which will be held in January 10, 2019.

 

Awards

 

  • The Vice President of India, Shri M Venkaiah Naidu conferred awards on 17 persons for their outstanding contribution in different fields of textiles sector during the day long ‘National Conclave on Accomplishments and Way Forward for Textiles Sector’ in New Delhi.
    • The conclave was a part of a two-day event, on 5th – 6th January 2019 in New Delhi, to highlight the achievements of the textiles sector. The event was inaugurated with a textiles fashion show “Artisan Speak” at Red Fort.

 

  • The Bimal Roy Memorial and Film Society announced that it would honour veteran actors Asha Parekh and Farooque Shaikhat the event on January 8, 2019, commemorating 52nd death anniversary of the renowned filmmaker.

 

Sports

 

  • Indian fast bowler Jasprit Bumrah finishes 2018 as the highest international wicket-taker of 2018 with 78 wickets after taking 9 wickets in the 3rd Test Match against Australia held in Melbourne Cricket Ground, Australia.
    • South African fast bowler Kagiso Rabada ranked 2nd in the list of Highest International wicket taker of 2018 with 77 wickets.

 

  • India’s top-ranked doubles players Rohan Bopanna and Divij Sharan won the Tata Open Maharashtra ATP 250 tournament in Pune after beating a British pairing of Luke Bambridge and Jonny O’Mara in straight sets.