Today TNPSC Current Affairs January 04 2020

We Shine Daily News

ஜனவரி  04

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கடல் பாதுகாப்பு மற்றும் கடல் ஆய்வு மேம்பாடு குறித்த சர்வதேசப் பயிலரங்கம் சென்னையில் வரும் 6 – ஆம் தேதி முதல் 10 – ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிலரங்குகள் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஓடி) நடைபெற உள்ளன.
    • செய்தி துளிகள்:
      • ‘கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பிராந்தியரீதியில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள்’ என்ற தலைப்பிலும், ‘ஐ.நா. இலக்கின்படி கடல்சார் அறிவியல் – ஆராய்ச்சி நடவடிக்கையில் நீடித்த வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் இரு பயிலரங்குகள் நடைபெறவுள்ளன.
      • முதலாவது பயிரலங்கு வரும் 6 மற்றும் 7 – ஆம் தேதிகளில் நடைபெறும். இதற்கு அடுத்த மூன்று நாள்களுக்கு மற்றொரு தலைப்பில் பயிலரங்கு நடைபெறும் என்று என்ஐஓடி இயக்குநர் ஆத்மானந்த் தெரிவித்துள்ளார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிரா அரசு பெண்களுக்கான இணைய பாதுகாப்பு’ (‘Cyber Safe Women’) முயற்சியைத் தொடங்கியுள்ளது, இதன் கீழ் இணைய பாதுகாப்பு குறித்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். சமூக விரோத சக்திகள் மற்றும் குழந்தை வேட்டையாடுபவர்களால் இணைய வலை எவ்வாறு பல்வேறு வகையான குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க இந்த முயற்சி உதவும்.
    • செய்தி துளிகள்
      • மகாராஷ்டிரா முதல்வர்: உத்தவ் தாக்கரே
      • ஆளுநர்: பகத் சிங் கோஷ்யரி
      • தலைநகர்: மும்பை

 

 

  • குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உலகின் 2வது உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அகமதாபாத்தில் திறந்து வைத்தார்
    • அகமதாபாத்தில் வைஷ்ணோதேவி வட்டம் அருகே சர்தர்தம் வளாகத்தில் 70 ஆயிரம் கிலோகிராம் எடை கொண்ட 50 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • சர்தார் படேலின் சிலையை ஒற்றுமை சிலையை வடிவமைத்த அதே சிற்பி பத்ம பூசன் ராம் வி.சுதரும் வடிவமைத்துள்ளார். ஒற்றுமை சிலையை வடிவமைத்த அதே சிற்பி பத்ம பூஷண் ராம் வி.சுதார் சர்தார் படேலின் சிலையை வடிவமைத்துள்ளார்.
      • குஜராத் முதல்வர் : விஜய் ரூபானி
      • ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வ்ரத்
      • தலைநகரம்: காந்திநகர்

 

 

  • ஆந்திர மாநிலத்தில் திஷா சட்டம் 2019அமல்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரிகளாக ஆந்திர அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் கிருத்திகா சுக்லா மற்றம் ஐ.பி.எஸ் அதிகாரி எம்.தீபிகா ஆகியோரை நியமித்துள்ளது. இந்த சட்டம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் விரைவாக நிறைவேற்றுவதற்கும் நோக்கமாக உள்ளது.
    • செய்தி துளிகள்:
      • இதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவர்களுக்கு 21 வேலை நாள்களில் மரண தண்டனை வழங்க முடியும். பெண்கள் மற்றம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கைள விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மற்றொரு மசோதாவுக்கும் ஆந்திர சட்டப் பேரவை ஒப்புதல் வழங்கியது.
      • பெண்கள் மற்றம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 7 வேலை நாள்களில் நிறைவுசெய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 14 வேலை நாள்களில் நீதிமன்ற விசாரணையை நிறைவு செய்யவும் வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டை 6 மாதங்களில் விசாரிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்தது.
      • ஆந்திராவின் முதல்வர்: ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் ஆளுநர்: பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 23 வயது பிரிவு சர்வதேச டேபிள் டென்னிஸ் தர வரிசையில் இந்தியாவின் இளம் வீரர் மானவ் தாக்கர் முதல்நிலை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • மானவ் தாக்கர் கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் மார்கம் பகுதியில் நடைபெற்ற ஐடிடிஎப் சேலஞச்; பிளஸ், வட அமெரிக்க ஓபன் போட்டியில் பட்டம் வென்றார். ஆர்ஜென்டீனாவின் மார்ட்டின் பென்டாகோரை வென்றிருந்தார் மானவ்.
    • செய்தி துளிகள்:
      • ஏற்கெனவே இந்தியாவின் ஹர்மீத் தேசாய், ஜி.சத்யன், சௌம்யஜித் கோஷ் ஆகியோர் இந்த சிறப்பைப் பெற்றிருந்தனர்.
      • மானவ் தாக்கர் 18 வயது பிரிவிலும் கடந்த 2018 – இல் உலகின் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றிருந்தார்.
      • கடந்த 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியிலும் மானவ் இடம் பெற்றிருந்தார்.
      • ஏனைய இந்திய வீரர்களான ஜி.சத்யன் 30, சரத்கமல் 33, மகளிர் பிரிவில் மனிகா பத்ரா 61- ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக பிரெய்லி தினம் (World Braille Day) ஆண்டுதோறும் ஜனவரி 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. பார்வையற்ற மற்றும் ஓரளவு பார்வையுள்ள மக்களுக்கான மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்வதில் தகவல்தொடர்பு வழிமுறையாக பிரெயிலின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 4 அன்று உலக பிரெயில் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • செய்தி துளிகள்
      • பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்குப் பயன்படுத்தப்படும் பிரெய்லியின் கண்டுபிடிப்பாளரான லூயிஸ் பிரெயிலின் பிறந்த நாளை நினைவு கூறுகிறது. லூயிஸ் பிரெய்ல் 1809 ஜனவரி 4ஆம் தேதி வடக்கு பிரான்சில் கூப்வ்ரே நகரில் பிறந்தார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண்: 67

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: மக்கட்பேறு 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்

விளக்கம்: தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • World Health Organization designated 2020 as the Year of the Nurse and the Midwife to honor the 200th birth anniversary of Florence Nightingale an English Social reformer born in 1820.
    • It aims to improve health globally by raising the status and profile of nursing and enabling nurses to maximize their contribution to achieve Universal Health Coverage. WHO( World Health Organization) is to launch the reports prior to 73rd session of WHO which is to be held in Geneva between Feb 3-8.
    • Related Keys
      • World Health Organization Founded: 7 April 1948
      • World Health Organization Headquarters: Geneva, Switzerland

 

 

  • Maharashtra Government has launched a ‘Cyber Safe Women’ initiative under which awareness camps will be held across all the districts of the state regarding cyber safety.
    • Chief Minister Uddhav Thackeray has said the initiative will help in educating women about how the web is used by anti-social elements and child predators to commit various types of crimes.
    • Related Keys
      • Maharashtra Governor: Bhagat Singh Koshyari
      • Maharashtra Formation: 1 May 1960

 

 

INTERNATIONAL NEWS

  • 18y/o Malavath Poorna, who has became the youngest girl in the world to achieve the feat of conquering Mt. Vinson Massif, the Antarctica continent’s highest mountain peak (4,987m).
    • At the age of 13 years she became the world’s youngest girl who scaled Mt. Everest.
    • Related Keys
      • Vinson Massif was discovered in January 1958 by U.S. Navy aircraft
      • Mount Vinson is the highest peak in Antarctica.

 

 

BANKING NEWS

  • RBI announced that Foreign Exchange Reserves of India has swelled by 2.52 billion USD in the week that ended on December 27, 2019. The Central Bank also said that the country’s special drawing rights with the IMF (International Monetary Fund) dipped by 2 million USD and the reserve position increased by 58 million USD.
    • Currently, India SDR with the IMF is 1.4441 billion USD and the reserve is 3.7 billion USD.
    • Related Keys
      • RBI Founder: British Raj
      • RBI Founded: 1 April 1935

 

 

IMPORTANT DAYS

  • World Braille Day is annually celebrated on January 4, the birthday of Braille inventor, Louis Braille.The day recognizes the contributions of Louis Braille in helping blind and visually impaired people to read and write.
    • In November 2018, the General Assembly decided to proclaim 4 January as World Braille Day.

 

 

WORDS OF THE DAY

  • Compelling – evoking interest, attention, or admiration in a powerfully irresistible way.
    • Similar Words – Enthralling , Captivating.
    • Antonyms – tedious.

 

  • Concord – agreement or harmony between people or groups.
    • Similar Words – agreement , harmony.
    • Antonyms – disagreement , discord.