Today TNPSC Current Affairs January 02 2020

We Shine Daily News

ஜனவரி  02

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • புதுவை மாநிலத்தின் அனைத்து பொதுமக்களுக்கும் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என புதுவை மாநில முதல்வர் அறிவிப்பு.
    • இந்த திட்டத்தின் கீழும் ஆயூஷ்மான் பாரத் திட்டம் போல ரூ.5 லட்சம் வரை பொது மக்கள் மருத்துவ காப்பீடு பெற முடியும்.
    • புதுச்சேரியில் ஆயூஷ்மான் பாரத் திட்டம் மூலம்03 லட்சம் பேர் பயனடைகின்றனர்.
    • செய்தி துளிகள் :
      • பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயூஷ்மான் பாரத்) உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாகும்.
      • ஆயூஷ்மான் பாரத் திட்டத்துடன் ஏற்கனவே ஒடிஸா மாநிலம் பிஜீ ஸ்வத்ய கல்யாண் யோஜனா மற்றும் தெலுங்கான அரசின் ஆரோக்யஸ்ரீ திட்டமும் பெண்களுக்கு கூடுதலாக 2 லட்சம் மருத்துவ வசதிகளை செய்கிறது.

 

 

  • தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
    • சிறிய செயற்கைக் கோள் ஏவுகலன்களை விண்ணில் செலுத்துவதற்காக தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சந்திராயன் – 3 திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • 2019 – ம் ஆண்டில் மட்டும் 6 ராக்கெட், 7 செயற்கைகோள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
      • 2019 – ம் ஆண்டு இஸ்ரோ – வால் பள்ளிக் குழந்தைகளுக்கு விண்வெளி தொழில் நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க “இளம் விஞ்ஞானிகள்” திட்டம் தொடங்கப்பட்டது.
      • மனிதர்களை விண்ணில் செலுத்தவிருக்கும் “ககன்யான்” திட்டம் 2022 – ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

  • தூய்மையான நகரம் பட்டியல் வெளியீடு
    • தொடர்ந்து 4 முறையாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • தூய்மைக்கான நகரங்கள் குறித்த “தூய்மை சர்வே லீக் 2020” முடிவுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார்.
    • செய்தி துளிகள் :
      • 10 லட்சத்துக்கும் அதிகமானோரை கொண்ட நகரங்களை மத்திய அரசு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
      • இந்தப்பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா கடைசி இடத்தில் உள்ளது.
      • தூய்மை சர்வே லீக் 2020 மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வசதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலக பிளிட்ஸ் செஸ் போட்டி மாக்னஸ் கார்ல்ஸன் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • ரஷியா தலைநகர் மாஸ்கோவில் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
    • மகளிர் பிரிவில் ரஷிய வீராங்கனை லாக்னோ கட்ரேயனா சாம்பியன் பட்டம் வென்றார்.
    • செய்தி துளிகள் :
      • மாக்னஸ் கார்ல்ஸன் நடப்பு செஸ் உலக சாம்பியன் ஆவார்.
      • உலக சாம்பியன்ஷிப், ஸ்டான்ட்டர்ட், ரேபிட், பிளிட்ஸ் பட்டங்களை ஒரு சேர வைத்துள்ள வீரர் ஆவர்.
      • மாக்னஸ் கார்ல்ஸன் ஃபீடே தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

 

 

நியமனங்கள்

 

  • சி.ஆர்.பி.எப் தலைவராக இந்தோ – தீபெத் எல்லை காவல் படை தலைவர் எஸ்.எஸ் தேஸ்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • எஸ்.எஸ் தேஸ்வாஸ் இந்தோ திபெத்திய காவல் படையின் தலைவராக உள்ளார்
    • செய்தி துளிகள் :
      • துணை இராணுவப் படைகளுள் ஒன்றான சி.ஆர்.பி.எப் படையில்25 பணியாளர்கள் உள்ளனர்.
      • நக்ஸல் தடுப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • எஸ் எஸ் பி தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சசஸ்திர சீம பால் நேபாளம், பூடான் நாடுகளுடனான எல்லைப் பகுதிகளை பாதுகாக்கின்றனர்.
    • அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக எஸ்எஸ்பி அலுவலகத்திற்கு ஆய்வு மேற்கொண்டார்.
    • செய்தி துளிகள் :
      • எஸ் எஸ் பி தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது.
      • எஸ் எஸ் பி தலைமை இயக்குநர் குமார் ராஜேஷ் சந்திரா
      • எஸ் எஸ் பி இந்தியா – நேபாளம் இடையே 1,751கி.மீ நீள எல்லையையும், இந்தியா – பூடான் இடையே 699 கி.மீ நீள எல்லையிலும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 65

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : மக்கட்பேறு

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

விளக்கம் : குழந்தைகள் தம் பெற்றோரின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தரும். அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டல் காதுக்கு இன்பம் தரும்.

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Ministry of Railway has accorded Organised Group ‘A’ status to Railway Protection Force (RPF) and renamed it Indian Railway Protection Force Service.
    • “Consequent upon grant of Organised Group ‘A’ status (OGAS) to RPF in the light of cabinet decision arising from Hon’ble Court’s orders, it is hereby informed that RPF will be known as Indian Railway Protection Force Service,”
    • Related Keys
      • Ministry of Railways Founded: 16 April 1853.
      • Ministry of Railways Headquarters: Rail Bhavan, New Delhi.

 

 

  • On January 1, 2020, the Election Commission of India launched an online system that will allow political parties to track their applications. The system is called Political Parties Registration Tracking Management System (PPRTMS).
    • The system will track applications registered by political parties. The status of the application shall be obtained through SMS or e-mail.
    • Related Keys
      • Election Commission of India Formed: 25 January 1950.
      • Election Commission of India Headquarters: New Delhi.

 

 

 

  • The Government of Delhi on 31st Dec ’19 , announced the renaming of Pragati Maidan metro station as the Supreme Court metro station.
    • Addressing a press conference, Deputy chief minister Manish Sisodia said the Delhi government’s naming committee has decided to rename the Pragati Maidan metro station as Supreme Court metro station.
    • Related Keys
      • Delhi Chief minister: Arvind Kejriwal.
      • Delhi Literacy (2011) 21%.

 

 

BANKING NEWS

  • Reserve Bank of India, RBI has launched a mobile app, MANI, Mobile Aided Note Identifier, to help visually challenged people to identify denomination of currency notes.
    • The app, which is available both on Android and iOS operating systems, was launched by RBI Governor Shaktikanta Das in Mumbai
    • Related Keys
      • Reserve Bank of India Established – 1 April 1935
      • Reserve Bank of India Governor – Shaktikanta Das

 

 

SPORTS

  • 6500 athletes from 37 teams will take part in the 3rd Khelo India youth games in Guwahati beginning from 10th of January. Talking to AIR , Chief Executive Officer of the event, Avinash Joshi said that lawn bowls and cycling will be included in the Khelo India for the first time.
    • The CEO added that cultural events from Assam, North East and rest of the country will be held from 13th to 15th January.

 

 

WORDS OF THE DAY

  • Accord – give or grant someone with power, status, or recognition.
    • Similar Words – tender , present ,award.
    • Antonyms – withhold , remove

 

  • Advocacy – public support for or recommendation of a particular cause or policy.
    • Similar Words – recommendation , assistance
    • Antonyms – Discouragement , Opposition