Today TNPSC Current Affairs February 28 2020

We Shine Daily News

பிப்ரவரி 28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியார் நிறுவனங்கள், தனியார்அமைப்புகள் இணையதளம் மூலம் இதுவரை ரூ.127 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
  • செய்தித் துளிகள்
   • முன்னாள் மாணவர்கள், தனியார் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியோர் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு நிதிவழங்க பிரத்யேக இணையதளத்தை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியது. இதில் இதுவரை ரூ.127 கோடி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டத்துக்காக உத்திரப்பிரதேச மாநிலம் சித்திர கூடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 29 அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
  • உத்தரப்பிரதேச அரசால் கட்டப்படும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அந்த மாநிலத்தின் சித்திரகூடம், பாண்டா, ஹமீர்பூர், ஜலான் மாவட்டங்களின் ஊடாகச் செல்கிறது. இந்த விரைவுச்சாலை, ஆக்ரா-லக்னௌ விரைவுச்சாலை மற்றும் யமுனை விரைவுச்சாலை ஆகியவற்றின் வழியாக புந்தேல்கண்ட் பகுதியை தலைநகர் தில்லியுடன் இணைக்கிறது.
  • செய்தித் துளிகள்
   • கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்தியஅரசு அறிவித்த உத்தரப்பிரதேச பாதுகாப்பு தளவாட தொழிலக வழித்தட திட்டத்துடன் இணைந்த வகையில் இந்த விரைவுச்சாலை இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 • இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை என்றழைக்கப்படும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் (இஸ்ரோ) மகேந்திரகிரி மையம் சார்பில் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விண்வெளி அறிவியல் கண்காட்சி பிப்ரவரி 27 அன்று தொடங்கியது. மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மகேந்திரகிரி விண்வெளி மையத்தின் இயக்குநர் கே.அழகுவேலு தலைமை வகித்தார்.
  • செய்தித் துளிகள்
   • இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவை 2019 ஆகஸ்ட் 12 முதல் அறிவியல் விழாவாக இஸ்ரோ கொண்டாடி வருகிறது. நாடு முழுவதும் 100 இடங்களில் விண்வெளிக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் ஓர பகுதியாக தமிழகத்தில் 6 இடங்களில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • செய்தித் துளிகள்
   • ஏற்கெனவே, ‘2006 ஆர்ஹெச் 120’ என்ற குறுங்கோள் பூமியைச் சுற்றிவரும் நிலையில், தற்போது அதேபோன்ற 2-ஆவது குறுங்கோள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

நியமனங்கள்

 

 • சட்டத்துறை செயலாளராக சி.கோபி ரவிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சட்டத்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த அவர் செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்த நிலையில்,அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 27 அன்று வெளியிட்ட உத்தரவில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள்                             :122

குறள் பால்                   :அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    :நடுவுநிலைமை

காக்கபொருளாஅடக்கத்தைஆக்கம்

அதனினூஉங் கில்லைஉயிர்க்கு.

விளக்கம் : மிக்கஉறுதியுடன் காக்கப்படவேண்டியதுஅடக்கமாகும். அடக்கத்தைவிடஆக்கம் தரக்கூடியதுவேறொன்றும் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The duty-free revenue per passenger for Indira Gandhi International Airport is highest in India at 10 to 11 dollars per passenger. According to a report by Knight Frank India, retailers do two times the business compared to some of the most successful city malls.
  • The share of non-aeronautical revenue of the joint venture airport in New Delhi is at 70 per cent, well above the global average of 40 per cent.
  • Related News
   • Indira Gandhi International Airport was the 12th busiest airport in the world and 6th busiest airport in Asia by passenger traffic handling nearly 70 million passengers.
   • Indira Gandhi International Airport Operator – Delhi International Airport Pvt Ltd (DIAL)

 

 

 • On February 26, 2020 The Union Cabinet approved 3 MoU (Memorandum of Understanding) for cooperation between India and Myanmar on combating timber trafficking, conservation of tigers & other wildlife, and in the fields of petroleum products and communications.
  • Related News
   • Myanmar Capital- Naypyidaw.
   • Myanmar Currency- Kyat.

 

 

INTERNATIONAL NEWS

 • Carbon more than 8,000 years old has been found inside the world’s deepest blue hole ‘the Yongle Blue Hole (YBH)’ which was recently discovered in the South China Sea.
  • Blue holes are marine caverns filled with water and are formed following dissolution of carbonate rocks, usually under the influence of global sea level rise or fall.
  • Related News
   • It is 300m deep blue hole located in Xisha Islands region.
   • It is the deepest blue hole in the world.

 

 

BANKING NEWS

 • With respect to micro and small enterprises, floating rate loans are already linked with external benchmarks. In a circular issued on Wednesday RBI said it has now been decided that all new floating rate loans to the medium enterprises extended by banks from April 1, 2020, “shall be linked to the external benchmarks”.
  • The external benchmarks will include Reserve bank’s repo rate, Treasury bill (T-bill) yields of 3 months or 6 months /any other benchmark published by the Financial Benchmark India Private Ltd (FBIL).
  • Related News
   • RBI Governor– Shaktikanta Das
   • RBI Deputy Governors– 4 (BP Kanungo, N S Vishwanathan, Mahesh Kumar Jain, Michael Debabrata Patra)

 

 

IMPORTANT DAYS

 • National Science Day is celebrated in India on 28 February each year to mark the discovery of the Raman effect by Indian physicist Sir C. V. Raman on 28 February 1928.
  • Theme for the National Science Day 2020 is “Women in Science”.

 

 

WORDS OF THE DAY

 • Turbulent – characterized by conflict, disorder, or confusion; not stable or calm.
  • Similar Words – stormy , unstable , unsettled
  • Antonyms – calm , quiet , glassy

 

 • Tyro – beginner
  • Similar Words – Fresher, New Comer
  • Antonyms – Senior , Experienced

Call Us