Today TNPSC Current Affairs February 25 2020

We Shine Daily News

பிப்ரவரி 25

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    • சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 14 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டு தொகைக்கான பத்திரங்களை முதல்வர் வழங்கினார்.
    • செய்தி துளிகள்:
      • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம், மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

  • திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனமானது “திருமதிகார்ட்” என்ற பெயர் கொண்ட சுய உதவிக் குழுக்களால் (SHG – Self Help Group ) தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது.
    • இந்தச் செயலியானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • இந்தச் செயலியானது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் சந்தை வாய்ப்புகளை அவர்கள் (பெண்கள்) தடையின்றி அணுக உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் டெல்லி கன்டோண்ட்மென்ட்டில் ஒரு புதிய இராணுவ தலைமையகத்தை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்திற்கு தல் சேனா பவன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்த கட்டிடம் ; GRIHA-5 மதீப்பீட்டு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டது.
    • செய்தி துளிகள்:
      • GRIHA என்பது ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீடு ஆகும்.
      • இந்த கட்டிடங்கள் நகராட்சி கழிவுகளிலிருந்து அல்லது மறைமுகமாக மின்சார உற்பத்தியில் இருந்து வளங்களை பயன்படுத்துகின்றன.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தியா – அமெரிக்கா இடையே ரூ.21,000 கோடியில் (300 கோடி டாலர்) பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படவுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
    • இரண்டு நாள் பயணமாக தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ள அதிபர் டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
    • செய்தி துளிகள்:
      • 1991-இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இந்தியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளினுடனான தனது வெளியுறவுக் கொள்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக இந்திய வர்த்தகம், பொருளாதாரம், கணினி நிறுவனங்களின் இணைப்பு ஆகியவை மேம்படத் தொடங்கியது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • வரும் 2022 இல் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் வில்வித்தை போட்டிகளை இந்தியாவின் சண்டீகரில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சி.ஜி.எப்) ஒப்புதல் அளித்துள்ளது.
    • வரும் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து பர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கவுள்ளன.
    • செய்தி துளிகள்:
      • பர்மிங்ஹாம் நகரில் வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு கட்டமைப்பு வசதி இல்லாததால் இவை இரண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளன.

 

 

திருக்குறள்

 

குறள்: 119

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

விளக்கம்: நடுவுநிலையாவது ஒருவனது சொல்லில் குற்றம் இல்லாதிருத்தல் அவனது உள்ளம் நடுவு நிலைமையில் இருக்குமானால், சொல்லில் குற்றம் இல்லாத நிலைமை உண்டாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The first anniversary of the iconic National War Memorial (NWM) will be observed on 25 February. Prime Minister Narendra Modi dedicated the monument to the nation on 25 February 2019.
    • The memorial is a tribute to the fallen heroes in the line of duty during various wars and internal security challenges since Independence.
    • RELATED KEYS
      • National War Memorial has names of 25,942 soldiers martyred after Independence engraved.
      • The Memorial is spread over 40 acres in the India Gate complex in Delhi. It was built at a cost of around 176 crore in a record time of one year.

 

 

  • Secretary of Ministry of Corporate Affairs (MCA) Injeti Srinivas has launched the new company incorporation “Spice+” Webform on 24 February. It is a part of a comprehensive package to make life easier for someone starting a business.
    • The move is in line with India’s Ease of Doing Business (EODB) initiatives.
    • RELATED KEYS
      • Spice+ form will replace the existing Spice form. It has been estimated that on average, the name reservation takes around 3 hours.

 

 

AWARDS

  • Union Human Resource Development Minister Ramesh Pokhriyal ‘Nishank’ presents Vishwakarma Awards 2019 to the winners in New Delhi. It was organized in the All India Council for Technical Training.
    • 23 groups were awarded the Chatra Vishwakarma Awards (CVA).
    • RELATED KEYS
      • Vishwakarma Awards was instituted by the All India Council for Technical Education (AICTE) since 2017.
      • The awards were instituted for the growth of society by means of the stakeholders of its accepted institutes.

 

 

  • Ms.Jiya was awarded a Certificate and Trophy for her record-breaking achievement by creating a world record.
    • She was felicitated by Mr. Abhay Dadhe, Associate Vice President of Swimming Federation of India at an award ceremony held at K R Kama hall, Mumbai on 23 February.
    • RELATED KEYS
      • Jiya Rai is an eleven-year-old daughter of Madan Rai, Master Chief at Arms II, posted in INS Shikra.
      • She is studying VI standard in Navy Children School (NCS), Mumbai.

 

 

IMPORTANT DAYS

  • Central Excise Day is celebrated on 24 February in India. The day recognizes the contribution of the Central Board of Excise and Customs (at present Central Board of Indirect Taxes and Customs).
    • The day marks the enactment of the Central Excise and Salt Act in 1944.
    • Aim: The day aims honours the contribution of the Central Board of Excise and Custom to India’s economy. The day recognizes the hard work and accomplishments of its employees.

 

 

WORDS OF THE DAY

  • Remit: cancel or refrain from exacting or inflicting
    • Synonym: assign, forward, consign
    • Antonym: hold, keep, receive.

 

  • Assassination: to kill suddenly or secretively
    • Synonym: bloodshed, massacre, carnage
    • Antonym: birth.