Today TNPSC Current Affairs February 24 2020

We Shine Daily News

பிப்ரவரி 24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மும்பை விமான நிலையம் சமீபத்தில் வேளாண் மற்றும் மருந்து தயாரிப்புகளை சேமித்து வைக்கும் உலகின் மிகப்பெரிய வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தொடங்கப்பட்ட ஏற்றுமதி குளிர் மண்டலம்’ (“Export Cold Zone”)700 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை வைத்திருக்கும் திறன் கொண்டது.
  • மும்பை விமான நிலையம் உலகின் சில விமான நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டில் முதல் மற்றும் ஆசியாவில் மூன்றாவது விமானம் IATA CEIV PARMA அங்கீகாரத்தைப் பெற்றது.
  • செய்தி துளிகள்
   • IATA CEIV PARMA என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தால் (International Air Transport Association- IATA)வழங்கப்பட்ட அங்கீகாரமாகும்.
   • இந்த அங்கீகாரம் மருந்து தயாரிப்புகளை கையாளுவதில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் இணக்கம் ஆகியவற்றை நிறுவுகிறது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பிப்ரவரி 29, 2020 அன்று தலிபான் படைகளுடன் அமெரிக்கா சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தார்.
  • ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான் படைகளும் கையெழுத்திட உள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் பின்னர், தற்போது ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள 12,000 அமெரிக்க படைகள் அமெரிக்காவிற்கு திரும்ப உள்ளனர்.
  • செய்தி துளிகள்
   • தலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் போரை நடத்தி வரும் சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாதிகள். 1996 மற்றும் 2001க்கு இடையில் தலிபான்கள் ஆட்சியைக் கொண்டிருந்தனர்.
   • அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாக உருவெடுத்தனர்.

 

 

 • சுவீடனின் ஸ்டாக்ஹோமில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் சாலை விபத்துகளற்ற அணுகுமுறையானது” அதிக அளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது,
  • சாலை விபத்துகளினால் எந்தவொரு நபரும் கொல்லப்படக் கூடாது அல்லது வாழ்நாள் முழுவதும் காயமடையக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • செய்தி துளிகள்
   • “சாலை விபத்துகளற்ற அணுமுறை” என்ற கருத்தாக்கமானது சுவீடன் நாடாளுமன்றத்தினால் 1997ஆம் அண்டில் முடிவு செய்யப்பட்டது.
   • இந்த அணுகுமுறையால் சுவீடன் நாடானது சாலை இறப்புகளை பாதியாகக் குறைத்துள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஜோத்பூர் சர்வதேச டென்னிஸ் சங்கம் (ஐடிஎப்) சார்பில் ஜோத்பூரில் நடைபெற்ற போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை அங்கிதா ரெய்னா பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை(23.02.20) நடைபெற்ற இறுதிச் சுற்றில் 7-ஆம் நிலை வீராங்கனை பெர்பு செங்கிஸை 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார்.
  • செய்தி துளிகள்
   • ஏற்கெனவே இரட்டையர் பிரிவில் சினேகல் மாஹேவுடன் இணைந்து இரண்டாவது இடம் பெற்றார்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி பிப்ரவரி 24 அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள்: 118

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி

விளக்கம்: முன் சமமாக நின்று, பின் தன்னிடத்தில் வைக்கப்பட்ட பொருளின் அளவை காட்டும் துலாக்கோல் போல, நடுவு நிலைமையிலிருந்து தவறாதிருத்தல் அறிவுடையோர்க்கு அழகாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami announced 5 schemes for children living in government-run homes on the birth anniversary of former Tamil Nadu CM J. Jayalalithaa.
  • The aim is to honour the late leader CM J. Jayalalithaa’s birthday.
  • RELATED KEYS
   • Formed on: 1 November 1956
   • Governor: Banwarilal Purohit
   • Chief Minister: Edappadi K. Palaniswami
   • Capital: Chennai

 

 

 • Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) celebrated the first anniversary of the new Central Sector Scheme on 24 February 2020. The Central Government has released more than Rs.50850 crores so far.
  • The total number of beneficiaries covered under the scheme, based on estimates of the Agriculture Census 2015-16, is about 14 crore.
  • RELATED KEYS
   • The scheme was aimed to augment the income of the farmers, with less than 2 hectares of land, by providing income support to all landholding farmers’ families across the country.

 

 

INTERNATIONAL NEWS

 • The US President Donald Trump recently announced that the United States of America will sign a peace agreement with the Taliban forces on February 29, 2020.
  • The US and the Taliban forces are to sign peace agreement to end the war of 18 years in Afghanistan. After the agreement, 12,000 US troops that are currently deployed in Afghanistan are to return to US.
  • RELATED KEYS
   • The Talibans are sunni Islamic fundamentalists that are currently waging war in Afghanistan. The Taliban held power between 1996 and 2001.

 

 

 • An international conference on “Ensemble Methods in Modelling and Data Assimilation (EMMDA)” began on 24 February 2020 at NCMRWF, Noida, India. The conference will be held from 24-26 February.
  • It was inaugurated by Dr.Harsh Vardhan, Union Minister for Health and Family Welfare, Science and Technology, Earth Sciences.
  • RELATED KEYS
   • The three-day conference is organized by the National Centre for Medium-Range Weather Forecasting (NCMRWF) that functions under the Ministry of Earth Sciences, GoI.

 

 

AWARDS

 • Niti Kumar has received the SERB Women Excellence Award 2020. The award will be conferred by the President of India Ram Nath Kovind during National Science Day Celebrations on 28 February 2020 in Vigyan Bhawan, New Delhi.
  • The award is presented to women scientists below 40 years of age who have received recognition from national academies.
  • RELATED KEYS
   • Niti Kumar is a Senior Scientist from Division of Molecular Parasitology and Immunology, Council of Scientific & Industrial Research (CSIR)-Central Drug Research Institute (CDRI), Lucknow.
   • Her research group is trying to understand the protein quality control machinery in the human malaria parasite for the exploration of alternative drug targets for malaria intervention.

 

 

WORDS OF THE DAY

 • Plight: a dangerous, difficult, or otherwise unfortunate situation
  • Similar Words: perplexity, condition, extremity, predicament, trouble
  • Antonyms: advantage, solution, benefit

 

 • Constraint: a limitation or restriction.
  • Similar Words: pressure, restraint, duress, suppression
  • Antonyms: permission, freedom, allowance.

 

 


Call Us