Today TNPSC Current Affairs February 22 2020

We Shine Daily News

பிப்ரவரி 22

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மின்துறைக்கு வழங்கிய நிலக்கரி8சதவீதம் குறைந்து 37.78கோடி டன்னாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 40.56கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
    • செய்தித் துளிகள்
    • இருப்பினும் ஜனவரியில் மின்துறை நிறுவனங்களுக்கு கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை9சதவீதம் உயர்ந்து 4.32கோடி டன்னாக இருந்தது. 2019 ஜனவரி மாதத்தில் நிலக்கரி சப்ளை 4.20 கோடி டன்னாக காணப்பட்டது.
      • ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் பொதுத்துறையைச் சேர்ந்த சிங்கரேணி கொலிரிஸ் நிறுவனத்தின் (எஸ்சிசிஎல்) நிலக்கரி சப்ளை6 சதவீதம் குறைந்து 4.40 கோடி டன்னாக இருந்தது. முந்தைய காலகட்டத்தில் நிலக்கரி வழங்கல் 4.52 கோடி டன்னாக காணப்பட்டது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் எட்வர்டு பார்பியர், கொலம்பியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் ரிகார்டோ லொஸானோ, கோஸ்டா ரிகாவினுடைய சுற்றுச்சூழல் அமைச்சரான கார்லோஸ் ரோட்ரிகஸ் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர். நேச்சர் என்ற ஆய்விதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியானது. அந்த ஆய்வு, புவியின் வெப்பமண்டலப் பகுதிகளிலுள்ள நாடுகள் கரிம வரியைக் (Carbon tax) கட்டாயமாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.
    • அதாவது, வெளியிடுகின்ற கரிம வாயுவின் அளவைக் கணக்கெடுத்து அதற்கேற்றவாறு வரி கட்ட வேண்டும்.
    • செய்தித் துளிகள்
      • பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதில் உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த வரி விதிப்பால் புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதில் கவனம் செல்லும் என்றும் கூறுகின்றனர்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கெலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 22 அன்று தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
    • இப்போட்டிகள் பிப்ரவரி 22 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை புவனேஸ்வர், கட்டாக் ஆகிய நகரங்களில் பத்து இடங்களில் நடைபெறுகின்றன.
    • செய்தித் துளிகள்
      • ‘கெலோ இந்தியா திட்டம்’ என்பது அனைத்து இந்திய கலாச்சார விளையாட்டுகளுக்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி, இந்தியாவை ஒரு சிறந்த விளையாட்டு நாடாக நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட சிந்தனையில் உருவானது. விளையாட்டை அடிமட்டத்திலிருந்து கொண்டுவர வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

  • தேசிய சீனியர் பூப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியன் ரயில்வேயும், மகளிர் பிரிவில் கர்நாடக அணிகளும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.
    • தமிழ்நாடு மாநில பூப்பந்து சங்கம், செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் சார்பில் 65-ஆவது தேசிய சீனியர் பூப்பந்து சாம்பியன் போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 21 அன்று நடைபெற்றன.
    • செய்தித் துளிகள்
      • ஆடவர் பிரிவில் இந்தியன் ரயில்வே 24-35, 35-28, 35-21 என்ற கேம் கணக்கில் தமிழகத்தை போராடி வென்று பட்டத்தைக் கைப்பற்றியது.
      • மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் கர்நாடக அணி 35-31, 27-35, 35-24 என்ற கேம் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.
      • வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்ஸன், நீச்சல் வீரர் வில்ஸன் செரியன், செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் தலைவர் பி.பாபு மனோகரன் ஆகியோர் பரிசளித்தனர்.

 

 

 

நியமனங்கள்

 

  • பிரதமர் மோடிக்கு இரண்டு புதிய ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் குல்புலே மற்றும் அமர்ஜித் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாஸ்கர் குல்புலே, அமர்ஜித் சின்ஹா ஆகியோரை பிரதமரின் தனி ஆலோசகர்களாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது
    • செய்தித் துளிகள்
      • 1993 ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற இரு அதிகாரிகளில் குல்புலே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே பிரதமர் அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சின்ஹா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள்: 116

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

அதிகாரம்: நடுவு நிலைமை

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்

விளக்கம்:  ஒருவன் மனம் நடுவுநிலையிலிருந்து நீங்கி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைத்தால், ‘நான்கெட்டு விடுவேன்’ என்பதை அறிவானாக.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Ministry of Food Processing and Ministry of Women and Child Development jointly inaugurated the National Organic Food Festival in New Delhi. The festival aimed at strengthening organic food produce in the country.
    • It also aimed at encouraging women entrepreneurs in manufacturing organic produce.
    • Related Keys
      • Ministry of Food Processing Founded: 1988
      • Ministry of Food Processing Headquarters: New Delhi
      • Ministry of Women and Child Development Founded: 30 January 2006
      • Ministry of Women and Child Development Headquarters: New Delhi

 

 

  • India will switch to the world’s cleanest petrol and diesel from April 1 as it leapfrogs straight to Euro-VI emission compliant fuels from Euro-IV grades This has been achieved in just three years and not seen in any of the large economies around the globe.
    • India will join the select league of nations using petrol and diesel containing just 10 parts per million of sulphur as it looks to cut vehicular emissions that are said to be one of the reasons for the choking pollution in major cities.

 

 

  • Council of Scientific and Industrial Research (CSIR) ranked first in the Nature Ranking Index 2020. All the institutions are ranked on the basis of total research output from december 01, 2018 to 30th November , 2019.
    • Indian Institute of Science (IISc), Bangalore, has been ranked second.
    • Related Keys
      • Council of Scientific and Industrial Research (CSIR) Director General- Dr Shekhar Mande
      • Council of Scientific and Industrial Research (CSIR) Location- New Delhi

 

 

SPORTS

  • The first Khelo India University Games is to be held in Bhuwaneshwar, Odisha. The game is to be launched by PM Modi through video conferencing.
    • More than 3400 athletes in 17 disciplines and from 159 Universities are to participate in the game. On the whole, 17 sports are to be conducted.
    • Related Keys
      • Khelo India is a National Programme for Development of Sports.
      • The Khelo India University Games are being launched for the first time , Khelo India School games were launched in 2018

 

 

AWARDS

  • RailMadad, the grievance redressal portal of Indian Railways, has been awarded Silver under Category II of the National e-Governance Awards – ‘Excellence in providing Citizen-centric Delivery.’ This award was conferred during the 23rd National Conference on e-Governance which was held in Mumbai on 7 & 8 February.
    • Related Keys
      • The Ministry of Railways has released the mobile app “Rail MADAD
      • Rail MADAD registers a complaint with minimum inputs from passenger(option of photo also available), issues unique ID instantly and relays the complaint online to relevant field officials for immediate action.

 

 

WORDS OF THE DAY

  • Reticent – not revealing one’s thoughts or feelings readily.
    • Similar Words – withdrawn , introverted
    • Antonyms – expansive , garrulous

 

  • Retrogression – the process of returning to an earlier state, typically a worse one.
    • Similar Words – reversion, devolution
    • Antonyms – advance, get along