Today TNPSC Current Affairs February 21 2020

We Shine Daily News

பிப்ரவரி 21

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையான ரூ.19,950 கோடியை மத்திய அரசு வழங்கியது.
    • மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.19,950 கோடியை மத்திய நிதி அமைச்சகம் பிப்ரவரி 17 அன்று விடுவித்தது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.1,20,498 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • செய்தித் துளிகள்
      • கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

 

 

  • அனல்மின் உற்பத்தியில் மத்திய பிரதேச மாநிலம் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.
    • மாநிலத்தின் அனல்மின் உற்பத்தி கடந்த ஆண்டு மார்ச் 25ல் 1,074.5லட்சம் யூனிட்டுகளை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு பிப்ரவரி 18-இல் 1,099.7 லட்சம் யூனிட் அளவுக்கு அனல்மின் உற்பத்தி செய்து புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனல்மின் உற்பத்தியில் மத்திய பிரதேச மாநிலம் தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
    • செய்தித் துளிகள்
      • இப்புதிய சாதனையின்போது, சாஷயில் உள்ள அமர்கந்தாக் அனல் மின் நிலையத்தில்6 லட்சம் யூனிட்டுகளும், பிர்சிங்பூரில் உள்ள சஞ்சய் காந்தி அனல் மின் நிலையத்தில் 289.6 லட்சம் யூனிட்டுகளும் உற்பத்தி செய்யப்பட்டன.
      • மேலும், சர்னியல் உள்ள சாத்புரா அனல் மின் நிலையம் மற்றும் கந்த்வா ஸ்ரீ சிங்காஜி அனல் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் முறையே8 லட்சம் யூனிட்டுகள் மற்றும் 497.7 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டன என்றார் அவர்.

 

 

  • தில்லியில் நிலவும் காற்று மாசுவைத் தடுப்பதற்கு செயல் திட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
    • தில்லியில் காற்று மாசு பிரச்சினை ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் மாசு அளவு மிகவும் கடுமையான பிரிவில் இருந்து வருகிறது.
    • தில்லியில் காற்று மாசுவைக் குறைப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள தில்லி சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் பிப்ரவரி 20 அன்று அமைச்சக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • செய்தித் துளிகள்
      • தில்லியில் நிலவும் காற்று மாசுவைக் குறைப்பதில் ஆம் ஆத்மி அரசு தீர்மானமாக உள்ளது. இதற்கான வழிமுறைகள் பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டன. மேலும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தில்லி அரசு சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், நிபுணர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

 

 

  • உத்திரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.
    • சுமார் 20 ஆண்டுகள் சந்தேகத்தையடுத்து மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • செய்தித் துளிகள்
      • இதில் சோன்பத்ராவில் 2,700டன் மற்றும் ஹர்தியில் 650டன் என மொத்தம் 3,350டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.
      • இந்த சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல நடவடிக்கைகளை கவனிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் உள்பட 1 வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
    • புது தில்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே 1 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா.
    • இந்நிலையில் பிப்ரவரி 20 அன்று மகளிர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிர் 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்ரன் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் நாருஷா.
    • செய்தித் துளிகள்
      • 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிங்கி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் மங்கோலியாவின் போலோர்மாவையும், 59 கிலோ எடைப்பிரிவில் சரிதா மோர் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் மங்கோலியாவின் பேட்செட்டைகையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர்.
      • 50 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் நிர்மலா ஜப்பானின் மிஹோ இகாரஷியிடம் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண்                  : 115

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள அதிகாரம்    : நடுவு நிலைமை

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் : தாழ்வும், உயர்வும் ஒருவர் வாழ்வில் இல்லாதவை அல்ல. அவரவர் வினைகளால் வரும் என்பதை அறிந்து நடுவுநிலை தவறாதிருத்தல் அறிவால் நிறைந்தவர்க்கு அழகாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Economic Intelligence Unit recently published the Worldwide Education for the Future Index for the year 2019. India has jumped by five ranks and currently holds rank 35. This Year Finland Topped the List.
    • The ranking is provided based on the ability of a country to equip their students in skill-based education. India ranked 35th with an overall score of 53
    • Related Keys
      • In 2018, India ranked 40th with an overall score of 41.2.
      • In 2018, Finland stayed on the top followed by Switzerland.

 

 

  • India has emerged as the fifth-largest world economy in 2019, overtaking the UK and France, as per a report by US-based think tank World Population Review. India’s economy is the fifth-largest in the world with a gross domestic product (GDP) of $2.94 trillion, overtaking the UK and France in 2019 to take the fifth spot.
    • The size of the UK economy is $2.83 trillion and that of France is $2.71 trillion.

 

 

AWARDS

  • World champion shuttler P V Sindhu won the ESPN’s Female Sportsperson of the Year award for a third consecutive time while young shooter Saurabh Chaudhary bagged the honour in the male category.
    • Sprinter Dutee Chand became the first winner of the Courage award for being inspirational both on and off the field.
    • Related Keys
      • Shuttler P V Sindhu won this award for a third consecutive time.

 

 

SPORTS

  • On 20, February 2020, Divya Kakran won a gold medal at the Asian Wrestling Championships after a dominant show in which she won all four bouts in the five-wrestler 68kg category.
    • Divya Kakran became the second Indian woman to win a gold medal in the event defeating junior world champion Naruha Matsuyuki in New Delhi.
    • Related Keys
      • Asian Wrestling Championships is organized by the Asian Associated Wrestling Committee.
      • The men’s tournament began in 1979 and The women’s tournament was first staged in 1996

 

 

IMPORTANT DAYS

  • International Mother Language Day (IMLD) is a worldwide annual observance held on 21 February. The day is observed every year to promote awareness of linguistic and cultural diversity and to promote multilingualism.
    • The day was proclaimed by the General Conference of the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) in November 1999.

 

 

WORDS OF THE DAY

  • Quandary – a situation from which extrication is difficult
    • Similar Words – dilemma , predicament.
    • Antonyms – clear sightedness, resolution.

 

  • Quell – put an end typically by the use of force.
    • Similar Words – crush , squash
    • Antonyms – bring about , prompt