Today TNPSC Current Affairs February 20 2020

We Shine Daily News

பிப்ரவரி 20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • அரசு இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும் போது அவர்களுக்கு ரூ.2லட்சம் நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
    • பெண் குழந்தைகளுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையை நினைவுகூரத்தக்க வiயில், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.
    • செய்தி துளிகள்:
      • ஜெயலலிதாவின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக 5 புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
      • அதன்படி, அரசு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும் போது, அவர்களுக்கு தலா ரூ.2லட்சம் அவர் தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

 

 

  • கீழடியில் மேற்கொள்ளப்படவுள்ள ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 19 அன்று தொடக்கி வைத்தார்.
    • அதன்படி, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தமிழக அரசின் தொல்லியல் துறையின் மூலம் அகழாய்வு செய்யப்பட உள்ளன.
    • தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல் அகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • செய்தி துளிகள்:
      • மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளவும், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வு மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை பிப்ரவரி 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.6,865 கோடி நிதியை ஒதுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்தது.
    • எஃப்.பி.ஓ என்ற வேளாண் உற்பத்தி அமைப்பிற்கு வேளாண் உற்பத்தி உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு அமைப்பு என்று பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று நாடு முழுவதும் 10,000 அமைப்புகள் உருவாக்கப்படும்.
    • பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தற்போது உள்ள சவால்களை எதிர்கொள்ள பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பி.எம்.எஃப்.பி.ஒய்) திட்டத்தை வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டு திட்டமாக மறுசீரமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

 

 

  • காசி மகாகல் விரைவு ரயில் எனப் பெயரிடப்பட்ட இந்திய ரயில்வேயின் மூன்றாவது “தனியார்” ரயிலானது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • இது வாரணாசி மற்றும் இந்தூர் ஆகியவற்றிற்கு இடையே ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான ஐஆர்சிடிசியினால் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்பட இருக்கின்றது.
    • செய்தி துளிகள்:
      • இது ஓம்காரேஷ்வர் (இந்தூருக்கு அருகில்), மகாகாலேஷ்வர் (உஜ்ஜைன்) மற்றும் காசி விஸ்வநாத் (வாரணாசி) ஆகிய மூன்று ஜோதிர்லிங்க மையங்களை இணைக்க இருக்கின்றது.

 

 

  • உள்ளுர் செய்திகளையும், பாடல்களையும் பரப்புவதற்காக அசூர் பழங்குடியினர் நடமாடும் வானொலியைப் பயன்படுத்துகின்றனர். இது அழிந்து வரும் பழங்குடியின மொழியைப் புதுப்பிக்க உதவுகின்றது.
    • அசூர் பழங்குடியினர் இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் வாழும் ஒரு ஆஸ்ட்ரோ ஆசியாடிக் இனக் குழுவினர் ஆவர்.
    • இவர்கள் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups – PVTG’s) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • செய்தி துளிகள்:
      • சர்ஹீல், பாகுவா, நவகான் ஆகியவை இந்தப் பழங்குடியினரின் முக்கியமான திருவிழாக்களாகும்.

 

 

  • “நாட்டு” (பூர்வீக) மாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக SUTRA PIC என்ற ஒரு திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
    • SUTRA PIC ஆனது “ஆராய்ச்சி வளர்ச்சியின் மூலம் அறிவியல்சார் பயன்பாடு – நாட்டுப் பசுக்களிடமிருந்து பெறப்படும் முக்கியமான பொருள்கள்” (Scientific Utilisation Through Research Augmentation – Prime Products from Indigenous Cows) என்பதைக் குறிக்கின்றது.
    • செய்தி துளிகள்:
      • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றம் தொழில்நுட்பத் துறையானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
      • இந்திய நாட்டு மாடுகளிலிருந்துப் பெறப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் முழுமையான தன்மை குறித்த அறிவியல் ஆராய்ச்சியே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

 

 

நியமனங்கள்

 

  • அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ சீனிவாசன் (52) நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் தெற்காசிய நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள்: 114

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்

விளக்கம் : ஒருவர் நடுவுநிலையுல்லவர் அல்லது இல்லாதவர் என்பதை, அவருக்குப்பின் நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The 22nd edition of the world language database Ethnologue stated Hindi is the 3rd most spoken language of the world in 2019 with 615 million speakers. In Which English at the top of the list with 1,132 million speakers. Chinese Mandarin is at the second position with 1,117 million speakers.
    • Related Keys
      • The other Indian Languages in the top 20 are Bengali in 7 position, Marathi in 15th position , Telugu in 16th position and Tamil in the 19th position.

 

 

  • On February 20, External Affairs Minister Dr S Jaishankar will inaugurate Indian Pavilion at 70th Berlin International Film Festival in The festival will be held till 1st of March. India Pavilion will provide a platform to popularize Indian cinema in the overseas market and facilitate new business opportunities.
    • Information and Broadcasting Ministry in collaboration with Confederation of Indian Industry, CII is participating in the event.
    • Related Keys
      • Confederation of Indian Industry Formation – 1895
      • Confederation of Indian Industry Headquarters – New Delhi.

 

 

  • On February 19, 2020, the Union Cabinet approved to set a technology group. The 12-member group will provide scientific advice on mapping of technologies, commercialization of dual use technologies and develop a road map on selected key technologies.
    • The group will provide three major pillars of support namely Policy support, research and development proposals and procurement support.

 

 

INTERNATIONAL NEWS

  • A sub-group of the global terror financing watchdog FATF today recommended the continuation of Pakistan in the ‘Grey List’ for its failure to check terror funding.
    • The decision was taken at the meeting of the FATF’s International Co-operation Review Group (ICRG), held at the ongoing Paris plenary.
    • Related Keys
      • Financial Action Task Force FATF Formation – 1989; 31 years ago
      • Financial Action Task Force FATF Headquarters – Paris, France

 

 

  • Bangladesh and Nepal have agreed to sign a Free Trade Agreement to enhance trade between the two countries. Bangladesh has also agreed to allow Nepal to use it Saidpur airport located in its northernmost district of Nilphamari close to Nepal.
    • Bangladesh exports commodities worth $38 million to Nepal and imports goods worth around 18 million dollars.
    • Related Keys
      • Bangladesh Capital: Dhaka
      • Bangladesh is the world’s 8th-most populous country
      • Nepal Capital: Kathmandu
      • Nepal Currencies: Nepalese rupee, Indian rupee

 

 

WORDS OF THE DAY

  • Peruse – read something in a thorough or careful way.
    • Similar Words – inspect , examine.
    • Antonyms – neglect , overlook.

 

  • Pervasive – spreading widely throughout an area or a group of people.
    • Similar Words – prevalent , penetrating
    • Antonyms – collective