Today TNPSC Current Affairs February 19 2020

We Shine Daily News

பிப்ரவரி 19

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • 15வது நிதி ஆணையமானது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு நிதியளிப்பதற்கான ஒரு தனிப்பட்ட முறையின் அவசியத்தை ஆராய்வதற்காக 5 உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
    • இந்த குழுவானது 15வது நிதி ஆணையத்தின் தலைவரான நந்த் கிஷோர் சிங் என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.

 

 

  • பஞ்சாப் மாநிலக் காவல்துறைப் பொது இயக்குநர் ‘பாராட்டு மற்றும் பரிந்துரை’ என்ற ஒரு திட்டத்தைப் பஞ்சாபில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
    • இது சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளின் நம்பிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பாகப் பணியாற்றும் காவல் துறையினருக்கு ஒவ்வொரு மாதமும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
    • செய்தி துளிகள்
      • இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்குள் பல்வேறு மாவட்டங்களின் காவல்துறைத் தலைவர்களிடமிருந்து சிறந்த காவல் துறையினருக்கான பரிந்துரைகள் கோரப்படும்.
      • இந்தப் பரிந்துரைகள் மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவால் ஆராயப்பட்டு, விருது பெறும் காவல் துறையினரின் பெயரானது ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.

 

 

  • IFAD ன் 43வது நிர்வாகக் குழு கூட்டமானது இத்தாலியின் ரோம் நகரில் “2030 ஆம் ஆண்டிற்குள் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நீடித்த உணவு முறைகளில் முதலீடு செய்தல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
    • வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியமானது (International Fund for Agricultural Development – IFAD) காலநிலை மாற்ற நிகழ்வுகளும் விவசாயத்தின் மீதான அவற்றின் தாக்கங்களும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 100 மில்லியன் மக்களை வறுமை நிலைக்குள் தள்ளும் என்று கூறியுள்ளளது.

 

 

  • இந்திய விமானப் படை அதிகாரியின் தலைமையில் வான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டகம்” (Air Defence Command – ADC) என்று அழைக்கப்படும் முதலாவது ஒருங்கிணைந்த முப்படைக் கட்டுப்பாட்டகத்தை நிறுவ இருப்பதாக இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள்
      • ADC ஆனது இராணுவம், விமானப் படை மற்றும் கடற் படையின் வான் பாதுகாப்பு மற்றும் அவற்றிற்குச் சொந்தமான பொருள்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு வான் பாதுகாப்பை வழங்க இருக்கின்றது.
      • இவர் கூட்டுத் தீபகற்பக் கட்டுப்பாட்டகம் மற்றும் ஒரு தளவாடக் கட்டுப்பாட்டகம் ஆகியவற்றை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

 

 

  • இந்திய அரசானது தேசிய கரிம உணவுத் திருவிழாவை புது டெல்லியில் நடத்த உள்ளது.
    • இந்தத் திருவிழாவானது இந்தியாவின் கரிம வளச் சந்தைக்கான சாத்தியக் கூற்றை ஊக்கப்படுத்து” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற இருக்கின்றது.
    • செய்தி துளிகள்
      • 3 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது கரிமப் பொருட்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் கரிமப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறையில் பெண்கள் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காகவும் முதன்முறையாகக் கொண்டாடப்படுகின்றது.

 

 

விருதுகள்

 

  • விளையாட்டின் சிறந்த தருணம்” (2000 – 2020) என்ற பிரிவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு விருது வழங்கப்பட்டது.
    • புகழ்பெற்ற லாரியஸ் விருது வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் இவரே.
    • லாரியஸ் விருதுக்கான சிறந்த வீரர் 2020 : லீவிஸ் ஹாமில்டன் மற்றும் மெஸ்ஸி
    • செய்தி துளிகள்
      • சிறந்த வீராங்கனை 2020 : ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பில்ஸ் (USA)
      • சிறந்த அணி: கடந்த ஆண்டு ரக்பி உலக கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்க அணி
      • அதிக முறை லாரியஸ் விருது வென்றவர் : ரோஜர்ஃபெடரர் (சுவிட்சர்லாந்து)

 

 

திருக்குறள்

 

குறள்: 113

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய  விடல்

விளக்கம்: தீமையைத்தராது நன்மையே தருவதானாலும் நடு நிலை தவறுவதால் உண்டாகின்ற செல்வத்தை அப்பொழுதே கைவிட வேண்டும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The ambitious Soil Health Card Scheme is completing its five years on 19 February 2020. The scheme was launched in 2015 to assess the nutrient status of every farm holding in the country.
    • The objectives of the scheme are to issue Soil Health Cards to farmers every two years so as to provide a basis to address nutritional deficiencies in fertilization practices.
    • Related Keys
      • From 2015 to 2017, over 10 crores Soil Health Cards were distributed to farmers in the first phase. In the second phase, over 11 crore cards have been distributed to farmers across the country.

 

 

  • Kerala Chief Minister Pinarayi Vijayan launched “Yodhav” (Warrior) mobile app (application) at Kochi, Kerala. Through this app, the public can inform police about drug abuse and its distribution.
    • The application was introduced by the Kochi city police and the informer’s identity could be kept secret.
    • Related Keys
      • Kerala Capital: Thiruvananthapuram
      • Kerala Governor: Arif Mohammad Khan

 

 

  • On February 18, 2020, 50-metre high foundation stone for a lighthouse was laid at Dhanushkodi in Rameswaram. This is the fifth lighthouse in the region.
    • The light house is to be built at a cost of Rs 8 crore rupees. The lighthouse is to be located opposite to the old church .
    • Related Keys
      • Dhanushkodi is an abandoned town at the south-eastern tip of Pamban Island of Tamil Nadu
      • The town was destroyed during the 1964 Rameswaram cyclone and remains uninhabited.

 

 

SPORTS

  • Greco Roman wrestler Sunil Kumar opened India’s medal account in the Asian Wrestling Championships at New Delhi by winning a Gold.
    • The seasoned grappler beat Azat Salidinov from Kyrgyzstan in the final of the 87 kg

 

 

  • India will host 2020 Junior Men’s World Cup. The International Hockey Federation (FIH) announced this at Lausanne in Switzerland.
    • This is the second time that India will be hosting the prestigious tournament, having staged it in Lucknow, Uttar Pradesh in 2016.
    • Related Keys
      • International Hockey Federation Founded: 7 January 1924
      • International Hockey Federation Headquarters: Lausanne, Switzerland

 

 

WORDS OF THE DAY

  • Obdurate – stubbornly refusing to change one’s opinion or course of action.
    • Similar Words – stubborn , obstinate
    • Antonyms –  amenable , compliant

 

  • Obfuscate – make obscure, unclear, or unintelligible
    • Similar Words – confuse, blur
    • Antonyms – clarify