Today TNPSC Current Affairs February 17 2020

We Shine Daily News

பிப்ரவரி 17

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • வாக்காளர்கள் தங்கள் சொந்தத் தொகுதிக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் (ஐஐடி சென்னை) தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அங்கிருந்தபடி மின்னணு முறையில் வாக்களித்தனர். இதனால், இதற்கு முன் ஒற்றை இலக்க சதவீதத்தில் இருந்த வாக்குப்பதிவு 62-ஆக அதிகரித்தது.

 

 

  • திரிபுரா மாநிலப் பழங்குடியினர் பகுதி தன்னாட்சி மாவட்ட மன்றமானது (Tripura Tribal Areas Autonomous District Council – TTAADC) மூன்று பழங்குடி இனங்களின் சட்டங்கள் குறித்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த 3 பழங்குடி இனங்களாவன மிசோஇ கைபெங் மற்றும் மால்சம்
    • ஆறாவது அட்டவணையின்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் தொழில்நுட்ப ரீதியாக மற்ற பகுதிகளிலிருந்து வேறுபடக் கூடிய பழங்குடிப் பகுதிகளைப் கொண்டுள்ளன.
    • செய்தி துளிகள்:
      • அவற்றின் மீது சில சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட மன்றங்கள் மற்றும் பிராந்திய மன்றங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
      • இதன்படி ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தன்னாட்சி மாவட்டமாகும். மேலும் ஆளுநர் அறிவித்தலின் மூலம் அந்த பழங்குடியினப் பகுதியின் எல்லைகளை மாற்ற அல்லது பிரிக்க முடியும்.

 

 

  • கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கோரும் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
    • வாக்களிக்கும் உரிமையானது ஒரு அடிப்படை உரிமை அல்லது பொதுவான சட்ட உரிமை அல்ல. இந்த உரிமையானது சட்டத்தால் மட்டுமே வழங்கப்படுகின்றது.
    • செய்தி துளிகள்:
      • சிறையில் அடைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 62(5) கூறுகின்றது.
      • ஐரோப்பா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நார்வே, டென்மார்க், அயர்லாந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்கனவே கைதிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • குஜராத்தின் காந்திநகரில் 2020 பிப்ரவரி 17 அன்று புலம்பெயர்ந்த இனங்கள் தொடர்பான மாநாட்டின் (CMS COP 13) கட்சிகளின் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கவுள்ளார். புலம்பெயர்ந்த உயிரினங்களின் 13 வது மாநாடு உயிர் பன்முகத்தன்மை குறித்த முதல் சந்திப்பாகும்.
    • கருப்பொருள்: புலம்பெயர்ந்த இனங்கள் கிரகத்தை இணைக்கின்றன, ஒன்றாக நாங்கள் அவர்களை வீட்டிற்கு வரவேற்கிறோம்
    • theme : Migratory Species connect the planet and together we welcome them home
    • செய்தி துளிகள்:
      • 2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகளாவிய குழுக்களால் “சூப்பர் இயர்” என்று பெயரிடப்பட்டது. 21 நிலையான அபிவிருத்தி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) மற்றும் அவற்றின் இலக்குகளை முன்னிலைப்படுத்த இது செய்யப்பட்டுள்ளது. இடம்பெயர்வு இனங்கள் பாதுகாப்பு மாநாட்டோடு இந்தியா “பல்லுயிர் பெருக்கத்தின் சூப்பர் ஆண்டை” குறிக்கிறது.

 

 

  • பிப்ரவரி 17, 2020 முதல் பிப்ரவரி 19, 2020 வரை ஹைதராபாத்தில் பயோ ஆசியா உச்சி மாநாடு 2020 தெலுங்கானா அரசு நடத்துகிறது.
    • வாழ்க்கை அறிவியல் நிறுவனங்களின் திறன்களையும் அவற்றின் முதலீடுகளையும் ஆராய்வதே உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம்.
    • உச்சிமாநாட்டின் கருப்பொருள்: இன்று நாளைக்கானது. The theme of the Summit is : Today for Tomorrow

 

 

  • புது தில்லியில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது தொடர்பான பிம்ஸ்டெக் நாடுகளின் மாநாட்டை இந்தியா முதன்முறையாக நடத்துகின்றது.
    • இந்த மாநாட்டை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்துகின்றது.
    • போதைப்பொருள் கடத்தலால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதில் பங்காற்ற அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதே இந்த மநாhட்டின் நோக்கமாகும்.
    • செய்தி துளிகள்:
      • இது 1986 ஆம் ஆண்டில் போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985இன் கீழ் அமைக்கப்பட்டது.
      • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும்.

 

 

திருக்குறள்

 

குறள் : 111

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

விளக்கம்: பகைவர், நண்பர், அயலார் என்னும் வேறுபாடின்றி எல்லோரிடத்தும் முறைமை தவறாது நடந்தால் அந்நடுவுநிலைமை என்னும் ஓர் அறமே நன்மையைத் தரும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Government of Telangana is hosting Bio-Asia Summit 2020 in Hyderabad between February 17, 2020 and February 19, 2020. The main objective of the summit is to explore the capabilities of Life Science Companies and their investments.
    • The theme of the Summit is Theme: Today for Tomorrow
    • Related Keys
      • India is the third largest biotechnology destination in Asia Pacific.
      • In 2018, the value of biotechnology industry was 51 billion USD.

 

 

  • Arunachal Pradesh Deputy Chief Minister Chowna Mein said that the state government will form a committee on Stilwell Road Development and would appeal Govt. of India for prioritizing on restoration of the road. He said this during a function in Itanagar.
    • Related Keys
      • Arunachal Pradesh Governor B.D. Mishra
      • Arunachal Pradesh – Literacy 66.95%

 

 

  • The year 2020 has been nick named as “Super Year” by global advocacy groups including the United Nations. This has been done to highlight 21 Sustainable Development Goals (SDG) and their targets.
    • India marks the “Super Year of Biodiversity” with the Conservation of Migratory Species Conference of Parties 13.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On February 15, 2020, ISRO published its annual report 2019-20. According to the report, the Indian Space Research Organization will launch 10 Earth Observation Satellites in 2020-21. It includes the first Geo Imaging Satellite, GISAT-1.
    • The report says that 18 communication satellites, 19 national Earth Observation satellites and eight navigation satellites are in service.
    • Related Keys
      • ISRO built India’s first satellite, Aryabhata, which was launched by the Soviet Union on 19 April 1975.
      • In 1980, Rohini became the first satellite to be placed in orbit by an Indian-made launch vehicle, SLV-3.

 

 

SPORTS

  • Indian athletes finished with three medals in different categories in the World SnowShoe Championship at Myoko, Japan.
    • According to a tournament official, Ayan Bin Shahnaz bagged silver, while Zain Ali and Muzamil Hussain Mir, all are from Kashmir, bagged bronze medals in their respective categories.
    • Related Keys
      • World SnowShoe Championship held for the first time in 2006
      • World SnowShoe Championship organised by World Snowshoe Federation.

 

 

WORDS OF THE DAY

  • Malaise – a general feeling of discomfort, illness, or unease
    • Similar Words – unhappiness , restlessness
    • Antonyms – comfort , well-being

 

  • Maverick – an unorthodox or independent-minded person.
    • Similar Words – individualist , nonconformist
    • Antonyms – conformist