Today TNPSC Current Affairs February 16 2020

We Shine Daily News

பிப்ரவரி 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25-ஆம் தேதி தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தில் நடைபெறவுள்ளது.
    • தில்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள நீர் வள ஆணைய வளாகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 25-ஆவது கூட்டம், குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்றது.
    • இதில் காவிரி நதி நீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களைச் சமர்ப்பித்தனர்.
    • செய்தி துளிகள் :
      • தமிழகத்துக்கு காவிரியில் ஓர் ஆண்டுக்கு மொத்தம்25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

 

  • ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக தில்லி முதல்வராக பிப்ரவரி 16 அன்று பதவியேற்கிறார்.
    • இதற்காக ராம் லீலா மைதானத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை பிப்ரவரி 16 அன்று ஏற்கவுள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • ‘கடந்த 5 ஆண்டுகளில் தில்லியின் வளர்ச்சிக்கு உதவிய, முதல்வர் கெஜ்ரிவால் சிறப்பாக ஆட்சி செய்ய உதவிய ஆசிரியர்கள், டாக்டர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல் அதிபர் மார்சேலோ ரெபேலோ டிசௌசா ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 14 அன்று கையெழுத்தாகின.
    • வர்த்தகம், முதலீடு, கல்வி ஆகிய துறைகள் இவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடித்தது.
    • அறிவுசார் சொத்துரிமை, துறைமுகங்கள், போக்குவரத்து, கலாசாரம், தொழில், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் நோக்கில் 7 ஒப்பந்தங்கள் இரு தலைவர்களின் முன்னிலையிலும் கையெழுத்தானது.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 15 ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, இரு நாடுகளிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.
      • பிரதமர் மோடி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் போர்ச்சுகல் சென்றிருந்தார். அப்போது, விண்வெளி, இரட்டை வரிவிதிப்பை தவிர்த்தல், நானோ தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், உயர் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அளிக்க 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தேசிய சீனியர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
    • சென்னை ஐஎஸ்ஏ அகாதெமியில் 77-ஆவது தேசிய சீனியர் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் நடப்பு சாம்பியன் ஜோஷ்னா சின்னாப்பா, ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சௌரவ் கோஷல் 13-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

 

 

  • ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டி ஆடவர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
    • பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தோனேஷியாவை எதிர்கொண்டது இந்தியா. இறுதியில் 3-2 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2016-இலும் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது.

 

 

திருக்குறள்

 

குறள் : 110

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்: எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் பாவத்திலிருந்து நீங்கும் வழி உண்டு. ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து உய்யும் வழி இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Indian Railways will operate a new train based on Ramayana theme which will take pilgrims to locations associated with Lord Rama. The new Ramayana circuit train will start operating from the last week of March.
    • The theme of this train will be based on Ramayana. Pictures, thoughts, and poems related to Ramayana will be displayed on coaches outside and pictures related to the epic and music will also be played inside.” Earlier, the Railways ran a special train named after Lord Ram, Shri Ramayana Express, which began its services in November last year.
    • Related Keys:
      • Indian Railways Founded in : 16 April 1853 (166 years ago)
      • Indian Railways Headquarters : Newdelhi, India

 

 

  • Prime Minister Narendra Modi visiting his parliamentary constituency Varanasi to inaugurate several development projects, including flagging-off ‘Mahakal Express,’ expected to link the holy cities of Varanasi, Ujjain, and Omkareshwar.
    • Prime Minister Narendra Modi to inaugurate 34 projects worth Rs 1,000 crore on occasion. A 63-foot tall statue of Deendayal Upadhyay, which was completed by more than 200 artisans.

 

 

  • India and Portugal signed 14 agreements to boost cooperation in a range of areas, including defense, investment, transport, ports, culture, and industrial and intellectual property rights and yoga.
    • The agreements were signed after extensive talks between Prime Minister Narendra Modi and Portuguese President Marcelo Rebelo de Sousa in New Delhi.
    • Related Keys:
      • The word Portugal derives from the Roman-Celtic place name Portus Cale
      • Portugal Prime Minister : António Costa

 

 

  • Airports Authority of India (AAI) signed three concession agreements with Adani Enterprises for operations, management, and development of Ahmedabad, Lucknow and Mangaluru airports.
    • The agreements were signed on Friday with the group’s subsidiary companies, namely Adani Ahmedabad International Airport Ltd, Adani Lucknow International Airport Ltd, and Adani Mangaluru International Airport Ltd. The concessionaires are required to take-over the three airports after fulfilling certain conditions precedents within 1 80 days from February 14.
    • Related Keys:
      • Airports Authority of India Founded : 1 April 1995
      • Airports Authority of India Headquarters : Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport, New Delhi

 

 

INTERNATIONAL NEWS

  • Asia One Magazine and URS Media organized a Networking Meet called India-Thailand: Today, Tomorrow, Together collaboration with the India Thai Chamber of Commerce (ITCC) at their premises at Sathon, Bangkok, The exclusive networking saw the presence of eminent dignitaries such as Abhisit Vejjajiva, the former Prime Minister of Thailand and Suchitra Durai, the Ambassador of India to the Kingdom.
    • The 13th Asian Business and Social Forum and attempted to highlight the fact that India and Thailand share a strong historical and cultural connection.
    • Related Keys:
      • Thailand Currency: Baht
      • Thailand Capital : Bangkok

 

 

WORDS OF THE DAY

  • Vinaceous: of the color of wine
    • Similar Words: ruby, cardinal  
    • Antonyms: achromatic, neutral

 

  • Infantilize: To treat or condescend to as if still a young child
    • Similar words : adolescent,   babyish,   childish,   immature  
    • Antonyms :adult,  grown-up,   mature