Today TNPSC Current Affairs February 14 2020

We Shine Daily News

பிப்ரவரி 14

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா தயாராகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டு, அதற்கான சட்ட மசோதா நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • வேளாண் மண்டலம் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்கள் ககன் தீப் சிங் பேடி, ஆணையர் தட்சிணா மூhத்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • செய்தி துளிகள் :
      • சட்ட மசோதா தயார் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்த தனிச் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாடு சிறப்பு வேளாண்மை மண்டல பாதுகாப்புச் சட்டம் 2020’ (TAMILNADU SPCIAL AGRICULTURE ZONE PROTECTION ACT – 2020) என்ற பெயரில் சட்டம் இயற்றப்பட உள்ளது.
      • முன்னதாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) புத்தகத்தில் வெளியிடப்பட உள்ளது.

 

 

  • பெண் பயணிகள், குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் இ.டாய்லெட்கள்’ அமைக்கப்படவுள்ளன. இதன்படி, 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகிலும் இ.டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபடவுள்ளனர்.
    • செய்தி துளிகள் :
      • சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.
      • இந்நிலையில், 30 மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இ.டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபடவுள்ளனர்.
      • நிர்பயா நிதியின் கீழ், இந்தக் கழிவறைகளை அமைப்பதற்கான நிதியை பெருநிறுவன சமுதாய பொறுப்பு (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

 

 

  • வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 14 அன்று தாக்கல் செய்கிறார்.
    • இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளை உயர்த்தவும், கடன் அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.
    • 15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை, அதிமுக அரசு தாக்கல் செய்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
    • செய்தி துளிகள் :
      • கடந்த அறிக்கை : 2019-2020 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையில் மாநிலத்தின் சொந்த வருவாய் வரவுகளை உயர்த்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. அப்போது நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகம், இப்போது தலைமைச் செயலாளராகி உள்ளார். மேலும், வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த எஸ்.கிருஷ்ணன், நிதித்துறை செயலாளராக பதவியேற்றுள்ளார். நிதியமைச்சரின் ஆலோசனைப்படி அவர் தயாரிக்கும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார்,சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுமதியளித்துள்ளது.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2018 – ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இவர்கள் 9 பேரையும் நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
      • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் கொலீஜியத்தின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

 

 

  • வெளிநாடுவாழ் இந்தியர்களை இணைக்கும் கலாசார மையமான பிரவஸி பாரதிய கேந்திராவுக்கும், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு சேவைகள் நிறுவனத்துக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பெயர் வைக்கப்பட்டது.
    • தலைநகர் தில்லியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் சுஷ்மா ஸ்வராஜின் பிறந்த தினத்தையொட்டி பிப்ரவரி 14 அன்று அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • நாட்டின் முதல் இளம் கேபிட் அமைச்சர், தில்லியின் முதல் பெண் முதல்வர், தேசியக் கட்சி ஒன்றின் (பாஜக) முதல் பெண் செய்தித் தொடர்பாளர் என பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை முதன்முறையாக வென்ற இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் கேப்டன் மன்ப்ரீத் சிங்.
    • சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள், விருதுகள் இணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஏற்கனவே வளரும் வீரர், வீராங்கனை விருதுகளை இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத், லால்ரேமி சியாமி ஆகியோர் வென்றனர்.

 

 

நியமனங்கள்

 

  • ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராக ராஜீவ்பன் சால் 2-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டது.
    • ஏர் இந்தியா தலைவராக அஷ்வனி லோவானி சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நிறைவு செய்த நிலையில், தற்போது அந்தப் பதவிக்கு ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்த சில நாள்களில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் : 108

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

விளக்கம்: ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The Government of India is to host National Organic Food Festival at the National Capital between February 21, 2020 and February 23, 2020. The festival is first of its kind. Around 150 women entrepreneurs are to participate in the festival. This 3 day Festival was organized by Ministry of Food Processing
    • Theme: Unleashing India’s Organic Market Potential
    • Related Keys
      • Ministry of Food Processing Founded: 1988
      • Ministry of Food Processing Headquarters: New Delhi

 

 

  • On February 13, 2020, President Ram Nath Kovind presented the President’s Colours Awards to INS Shivaji. The Indian Naval Station Shivaji has completed 75 years of service. Last year, the award was given to Indian Naval Academy.
    • The award was presented to the Indian Naval Station at Lonavala.
    • Related Keys
      • There are three premier institutions at INS Shivaji. It includes Centre of Excellence, Centre of Marine Engineering and Nuclear, Biological and Chemical Defence School.

 

 

  • Taking a unique initiative to solve the queries of students ahead of the Board Examinations starting next week, Uttar Pradesh Government has launched toll-free helpline numbers. AIR correspondent reports that The helpline numbers will remain active from 8 am to 8 pm.
    • Experts of different subjects including English, life sciences, geography, general science, Hindi, Sanskrit, chemistry will be available on call on these numbers.
    • Related Keys
      • Uttar Pradesh Governor: Anandiben Patel
      • Uttar Pradesh Capital: Lucknow

 

 

SPORTS

  • On February 13, 2020, the International Hockey Federation named the Indian Hockey captain Manpreet Singh as Player of the Year, 2019. He is the first Indian to win the title.
    • Manpreet Singh is the Indian National Hockey team captain since 2017.
    • Related Keys
      • International Hockey Federation Founded: 7 January 1924
      • International Hockey Federation Headquarters: Lausanne, Switzerland

 

 

BANKING NEWS

  • One rupee currency note is signed by the Finance Secretary while the other notes are signed by the Governor of the Reserve Bank of India.
    • The new Re 1 note will come with the words ‘Bharat Sarkar’, above the words ‘Government of India’.
    • Related Keys
      • RBI was set up in 1935 under the Reserve Bank of India Act,1934.
      • The RBI has four regional representations: North in New Delhi, South in Chennai, East in Kolkata and West in Mumbai.

 

 

WORDS OF THE DAY

  • Jaded – bored or lacking enthusiasm
    • Similar Words – exhausted, blunt.
    • Antonyms – fresh , enthusiastic.

 

  • Kindle – set (something) on fire.
    • Similar Words – light , ignite
    • Antonyms – extinguish , put out