Today TNPSC Current Affairs February 13 2020

We Shine Daily News

பிப்ரவரி 13

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய உச்ச நீதிமன்றமானது சரத்து 16 (4)ன் கீழ் இடஒதுக்கீடானது ஒருவர் அரசாங்கப் பணியில் சேரும் போது மட்டுமே வழங்க முடியும் என்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
    • இந்திரா சவ்ஹானி (எதிர்) இந்திய அரசு மற்றும் எம்.நாகராஜ் வழக்கு (1992)
    • செய்தி துளிகள்:
      • நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் மாநிலங்கள் கட்டாயம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவசியமில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
      • பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு அளிப்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • மீன்வளத் துறையில் இந்தியாவுக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • உள்நாட்டு மீன்வளத்தை மேம்படுத்துவதற்காக 2019 செப்டம்பரில் நாடுகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
    • செய்தி துளிகள்:
      • இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது.
      • பொருளாதார கணக்கெடுப்பு 2020 இன் படி, விவசாயம் மற்றும் வனவியல் ஆகியவற்றுடன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்58% மீன்வள பங்களிப்பு செய்கிறது. 2018-19ஆம் ஆண்டிற்கான கடல் பொருட்களின் ஏற்றுமதி 13.92 லட்சம் டன்.

 

 

  • இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட DTAA (Double Taxation Avoidance Agreement) (இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்) திருத்துவதற்கான நெறிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • நிதி ஏய்ப்பு தடுப்பு தொடர்பாக DTAA திருத்தப்பட வேண்டும்.

 

 

  • சியாரா புயல் வடக்கு ஐரோப்பாவைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய புயலாகும். இந்தப் புயலானது இப்பகுதியில் போக்குவரத்திற்கும் பொது நிகழ்வுகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றது.
    • ஐக்கிய இராஜ்ஜியத்தில்சியாரா’ என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயுலானது அயர்லாந்து, பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    • செய்தி துளிகள்:
      • ஜெர்மனியில் இது சபின்’ என்று குறிப்பிடப்படுகின்றது.
      • வானிலை நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு இன்னும் ஒரு முழு அளவிலான ஐரோப்பிய அமைப்பு இல்லாத காரணத்தால் இந்த புயலுக்கு இரண்டு பெயர்கள் உள்ளன.

 

 

  • அஜயா வாரியர் – 2020’ என்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியின் ஐந்தாவது பதிப்பானது ஐக்கிய இராஜ்ஜியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடத்தப்பட இருக்கின்றது.
    • அஜயா வாரியர் ஆனது இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே நடத்தப்படும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
    • இது முதல் முறையாக 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
    • செய்தி துளிகள்:
      • நகர்ப்புற மற்றம் நகர்ப் புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, படைப் பிரிவு அளவிலான கூட்டு பயிற்சியை நடத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குள் டிஜிட்டல் பண வழங்கீட்டுக் குறியீட்டை உருவாக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
    • நாட்டில் பணப் பரிமாற்றங்களின் டிஜிட்டல் மயமாக்கத்தைக் கண்காணிப்பதே இந்தக் குறியீட்டு உருவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
    • செய்தி துளிகள்:
      • டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை கண்காணிப்பதற்காக மத்திய வங்கியானது டிஜிட்டல் பண வழங்கீட்டுக் குறியீட்டை வெளியிட இருக்கின்றது.
      • இந்தக் குறியீட்டில் வகைப்பாட்டை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் : 107

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

விளக்கம்: நல்லவர், தம் துன்பத்தை நீக்கியவரின் நட்பை தொடர்ந்து வருகின்ற ஏழுவகைப் பிறப்புகளிலும் மறவாது நினைப்பர்.

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On February 12, 2020 the Union Cabinet approved the Memorandum of Understanding signed between India and Iceland in the field of fisheries. The countries had signed agreements in September 2019, to develop inland fisheries.
    • Related Keys
      • According to the Economic Survey 2020, fisheries contribute to 6.58% of India’s GDP along with agriculture and forestry.
      • GoI in 2018-19 allocated Rs 7,522 crores of rupees towards Fisheries and Aquaculture Development Fund (FIDF).

 

 

  • The State of the World’s Children Report 2019 stated more than 8 lakhs under 5 Mortality Rate in India. The report was released by the United Nations Children’s Fund is a United Nations agency (UNICEF).
    • The report has ranked countries in the order of ‘highest burden of death among children of under-5’ to the ‘lowest burden Of death among children Of under-5’.Z
    • Related Keys
      • To address the malnutrition changes in the Country . GoI has launched Prime Minister Overarching Scheme for Holistic Nourishment (POSHAN).

 

 

  • The US removed India from its list of developing countries that are exempt from investigations into whether they harm American industry with unfairly subsidised exports.
    • The US removed India from the list on account of it being a G-20 member and having a share of 0.5% or more of world trade.
    • Related Keys
      • India’s share in global exports was 1.67% in 2018. In global imports, it was 2.57%.
      • Capital of the USA: Washington, D.C.
      • President of USA: Donald Trump.

 

 

SPORTS

  • World-famous Ski destination Gulmarg is all set to host a five-day national winter games event from 7th March under the banner of Khelo India.
    • Khelo India is an initiative of the Government of India to strengthen the sports ecosystem by encouraging mass participation and promotion of excellence.
    • Related Keys
      • The event will witness 30 events under four disciplines including snowboarding, snow skiing, cross country, and snow show.

 

 

IMPORTANT DAYS

  • World Radio day is observed on 13 February every year . Proclaimed in 2011 by the Member States of UNESCO, and adopted by the United Nations General Assembly in 2012 as an International Day.
    • On World Radio Day 2020 (WRD 2020), UNESCO calls on radio stations to uphold diversity, both in their newsroom and on the airwaves.

 

 

WORDS OF THE DAY

  • Inimical – tending to obstruct or harm.
    • Similar Words – harmful , injurious
    • Antonyms – friendly , warm

 

  • Inept- having or showing no skill; clumsy
    • Similar Words – incompetent , unskillful
    • Antonyms – competent