Today TNPSC Current Affairs February 11 2020

We Shine Daily News

பிப்ரவரி 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் ஆண்டுதோறும்5 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    • மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் மத்திய – மாநில சுகாதாரத் துறைகள் சார்பில் இந்திரதனுஷ் தடுப்பூசி’ திட்ட இரண்டாம் கட்ட பயிலரங்கம் சென்னையில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது.
    • அப்போது, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சுகாதார அலுவலர் டாக்டர் ஆர்.சதீஷ்குமார் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் முதல் 15 வயதுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • செய்தி துளிகள் :
      • நோய்த்தடுப்பு 1721 இல் லேடி மேரி வோர்த்லே மாண்டேகு மூலம் துருக்கியிலிருந்து இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அதே ஆண்டு பாஸ்டன் நகரில் சப்தியேலின் போய்ல்ச்தனால் பயன்படுத்தப்பட்டது.
      • 1798 ஆம் ஆண்டு எட்வர்ட் ஜென்னர் என்பவரால், கோவ்போக்ஸ் (பெரியம்மை தடுப்பூசி) கொண்ட தடுப்பூசி, ஒரு மிகவும் பாதுகாப்பான செயல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பேரிடர் மேலாண்மையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழக இயக்குநரும், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்தியகோபால் தெரிவித்தார்.
    • இந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டலம், இந்திய வானிலை கழகம் ஆகியன சார்பில், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருடாந்திர கருத்தரங்கம் சென்னையில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது.
    • செய்தி துளிகள் :
      • பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே பேரிடர் மேலாண்மை பணியாகும். பேரழிவுக்கு எதிரான நடவடிக்கை இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் போன்றவையும் இப்பணியில் மேற்கொள்ளப்படுகிறது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பெண்கள் நலனுக்கான சர்வதேச மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது. மியாட் மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில், இலங்கை, வங்கதேசம், பூடான், ஃபிஜி தீவுகள் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும், பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டனர்.
    • சிறப்பு அழைப்பாளர்களாக கருத்தரங்கில் கலந்துகொண்ட ஃபிஜி தீவுகளின் கல்வி அமைச்சர் ரோஸி அக்பர், துவாலு தீவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஐசாயா வைபுனா உள்ளிட்டோர் பெண்கள் நல மருத்துவம் குறித்து உரையாற்றினர்.
    • செய்தி துளிகள் :
      • 1993 ல் இந்தியாவில் குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு கடன் வழங்குவதற்காக, ராஷ்ட்ரீய மஹிலா கோஷ் (மகளிர் தேசிய கடன் நிதி) அமைக்கப்பட்டது.

 

 

விருதுகள்

 

  • ஜோக்கர் படத்தில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக வென்றார். டிசி காமிஸ் புத்தக வில்லன் கதாபாத்திரமான ஜோக்கராக நடித்து ஆஸ்கர் வென்ற இரண்டாவது நடிகர் பீனிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அமெரிக்க நடிகையான ரென்னி ஜெல்வெகர், ஜூடி என்ற படத்தில் நடித்தற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘கோல்ட் மவுண்டெயின்’ என்ற படத்தில் நடித்த இவர், சிறந்த துணை நடிகைக்கான விருதை முதல்முதலில் வென்றார்.
    • செய்தி துளிகள் :
      • ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.
      • அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது.

 

 

நியமனங்கள்

 

  • சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பிப்ரவரி 10 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • இதன் தலைவராக இருந்த மேகாலயா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனாகுமாரி கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) கடந்த பிப்ரவரி 07 அன்று நியமிக்கப்பட்டார்.
    • செய்தி துளிகள் :
      • தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு – 21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 105

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம் : ஒருவர் செய்யும் உதவியின் அளவு, அதன் மதிப்பைப் பொருத்ததன்று செய்யப்பட்டவரின் பண்பினைப் பொருத்ததாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The fifth edition of joint military exercise Ajeya Warrior 2020 between India and United Kingdom will be held at Salisbury Plains in the United Kingdom from February 13 to 26 The exercise is conducted alternatively in United Kingdom and India.
    • The aim of this exercise is to conduct company level joint training with emphasis on counter terrorists operation in Urban and Semi Urban areas.
    • Related Keys
      • Other India and UK Exercise are
      • Konkan exercise naval exercises held from 2004.
      • Indra Dhanush is a joint air-to-air exercise held from 2006.

 

 

  • The 13th Conference of Parties (COP) of the Convention on Conservation of Migratory Species of Wild Animals is to be held in India between February 17, 2020 and February 22, 2020. The Conference is called the CMS-COP-13 in short.
    • The Conference is to be hosted by the Ministry of Environment, Forest and Climate Change on behalf of India
    • Related Keys
      • Ministry of Environment, Forest and Climate Change Founded: 1985
      • Ministry of Environment, Forest and Climate Change Headquarters: New Delhi

 

 

  • A meeting of Bangladesh, Bhutan, India and Nepal on the BBIN MVA (Motor Vehicle Act) was held in New Delhi. The Indian delegation was led by Vikram Doraiswami, Additional Secretary, Ministry of External Affairs.
    • The meeting was held to discuss the passenger and cargo Protocols that are to give effect to the Motor Vehicles Agreement for the Regulation of Passenger, Personal and Cargo Vehicular Traffic between the four countries signed in 2015.
    • Related Keys
      • India proposed a SAARC Motor Vehicle Agreement during the 18th SAARC summit in Kathmandu in November 2014.
      • The BBIN Motor Vehicles Agreement (MVA) was signed on 15 June 2015.

 

 

  • Lieutenant Governor G C Murmu will head 24 members reconstituted Jammu and Kashmir Science Technology and Innovation Council (STIC). Members of the council include five representatives from Jammu and Kashmir government, 10 from universities and research and development institutions and eight from the Science and Technology Department of the Central Government.

 

 

SPORTS

  • On February 9, 2020, Bangladesh won Under 19 Cricket World Cup organized by International Cricket Cup (ICC). The tournament was held in South Africa between January 17, 2020 and February 9, 2020.
    • The Bangladesh team beat India to win the ICC U19 title. Bangladesh won the title for the first time in its history.
    • Related Keys
      • The first U19 world cup was held in 1998.
      • India has so far won the tournament four times.

 

 

WORDS OF THE DAY

  • Ghastly – causing great horror or fear.
    • Similar Words – terrible , frightful , horrible
    • Antonyms – pleasant

 

  • Gibberish – unintelligible or meaningless speech or writing.
    • Similar Words – rubbish , balderdash
    • Antonyms – sense , Meaningful