Today TNPSC Current Affairs February 09 2020

We Shine Daily News

பிப்ரவரி 09

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை இணைந்து தைத்திருவிழா தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் துவங்கியது.
  • விழாவை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். இரண்டாவது நாளாக நேற்று மலர் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில், 25 ஆயிரம் செடிகள், மலர்கள் மற்றும் காய்கறி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

 

 • சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 09 அன்று திறந்து வைத்தார்.
  • இந்த புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநருமான ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 • யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நகரமாக புதுச்சேரியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக யுனெஸ்கோ இயக்குநர் எரிக் ஃபால்ட் தெரிவித்தார்.
  • புதுவை அரசின் நகரம் – கிராம திட்டமிடல் துறையும், கலை, கலாசார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளையும் இணைந்து “புதுச்சேரி பாரம்பரிய பாதுகாப்பு – யுனெஸ்கோ நியமனத்துக்கான பாதை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை புதுச்சேரியில் பிப்ரவரி 08 அன்று நடத்தியது.
  • புதுவை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அரசு செயலர் மகேஷ் வரவேற்றார். தலைமைச் செயலர் அஸ்வனி குமார் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார். இதில், சிறப்பு விருந்தினராக யுனெஸ்கோ இயக்குநர் எரிக் ஃபால்ட் கலந்து கொண்டு, உலகப் பாரம்பரிய நகர நியமனத்துக்கான வழிமுறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
  • செய்தி துளிகள் :
   • இந்தியாவில் 38 இடங்கள் யுனேஸ்கோவால் பாரம்பரிய நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

 

 • லக்னோவில் 11-ஆவது ராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை கண்காட்சி கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தித் திறனை உலகுக்கு பறைசாற்றும் நோக்கில் நடைபெறும் இக்கண்காட்சியில், பாதுகாப்புத் துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்புத் தளவாடங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்நிலையில், இக்கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு பிப்ரவரி 08 அன்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட திரண்டனர். ராணுவ தளவாடங்கள் அருகே நின்று, கைப்படம் எடுத்துக் கொண்டனர்.
  • செய்தி துளிகள் :
   • லக்னோ தலைநகர்  இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசம்

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் எஸ்எஸ்.ராஜன் கோப்பை மாவட்டங்களுக்கு இடையிலான டி20 போட்டியில் கோயம்புத்தூர் சாம்பியன் பட்டம் வென்றது.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 08 அன்று மதுரை-கோவை மாவட்ட அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன் கோப்பையை டிஎன்சிஏ துணைத் தலைவர் டாக்டர் பி.அசோக் சிகாமணி வழங்கிப் பாராட்டினார்.
  • செய்தி துளிகள் :
   • சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் (எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
   • இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஏ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
   • சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் தேர்வுப் போட்டி நடை பெற்றது.

 

 

திருக்குறள்

 

குறள் எண்                  : 103

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : செய்ந்நன்றி அறிதல்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

விளக்கம் : இன்னபயன் கிடைக்கும் என்று கருதாது ஒருவர் செய்த நன்மையின் பெருமையை ஆராய்ந்தால், அது கடலைவிடப் பெரியதாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • In Madhya Pradesh, the state government has decided to use drones for mapping villages. So far, land survey work is being done either manually or with the help of satellite images in Madhya Pradesh.
  • 55 thousand villages of the state have been selected for mapping.
  • Related Keys
   • Madhya Pradesh Capital: Bhopal
   • Madhya Pradesh Chief minister: Kamal Nath

 

 

 • On February 8, 2020, Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy inaugurated the first Disha Police Station. The police stations are first of their kind in the state and will deal with crimes against women.
  • The Andhra Pradesh Government is to inaugurate 18 Disha Police Stations by the end of February 2020.
  • Related Keys
   • In December 2019, the Andhra Pradesh Government passed the Disha Bill, 2019. The bill aims to complete investigation of cases related to crimes against women.

 

 

 • The Society of Indian Defence Manufacturers (SIDM) and UK India Business Council (UKIBC) signed Memorandum of Understanding to bring upon closer defence ties between the countries. The agreement was signed at DefExpo that is being held in Lucknow.
  • The MoU was signed to build partnership between Aerospace and Defence sector of the countries.
  • Related Keys
   • India is the third largest foreign investor of UK.
   • UK is the strong supporter of India in development of future fighter jet engine.

 

 

 • The Ministry of External Affairs along with FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) recently launched the India-Central Asia Business Council.
  • They were joined by 5 countries namely Tajikistan, Uzbekistan, Turkmenistan, Kazakhstan and Kyrgyz Republic. The Council will act as a common platform for the businesses of Central Asia and India.
  • Related Keys
   • Ministry of External Affairs Founded: 2 September 1946
   • Ministry of External Affairs Headquarters: New Delhi

 

 

INTERNATIONAL NEWS

 • An official reported that Nepal’s upcoming national census will for the first time count the LGBT population in the Himalayan nation in order to better allocate government jobs and education set aside for minority groups.
  • The LGBT community in Nepal has long demanded that the census taken every 10 years include a count of sexual minorities.
  • Related Keys
   • Nepal Capital: Kathmandu
   • Nepal Prime minister: KP Sharma Oli

WORDS OF THE DAY

 • Endurance – the ability to endure an unpleasant or difficult situations.
  • Similar Words – bearing , tolerance
  • Antonyms – fleetingness, shortening.

 

 • Emancipate – set free from slavery, legal, social, or political restrictions.
  • Similar Words – liberated , independent.
  • Antonyms – enslave.

 


Call Us