Today TNPSC Current Affairs February 05 2020

We Shine Daily News

பிப்ரவரி 05

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிப்ரவரி 4 அன்று அறிவித்தார்.
  • ஆனால், 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் 3 பருவத்துக்குரிய புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.
  • இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அதை கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
  • செய்தி துளிகள் :
   • செப்.13- பொதுத் தேர்வு நடத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
   • நவ.28- 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
   • 2020 ஜன.21- அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு நடைபெறும் – பள்ளிக் கல்வித் துறை
   • பிப்.4- 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

 

 

 • தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 4 அன்று வழங்கினார்.
  • ஸ்லோவேகியா நாட்டின் ரூசும்பெரோக்கில் நடந்த தனிநபர் சதுரங்கப் போட்டியில் கே.ஜெனிதா ஆண்டோ தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு ரூ.20 லட்சத்துக்கான ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.
  • கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த குழு நீச்சல் போட்டியில் விக்காஸ் மற்றும் டி.ஆதித்யா ஆகியோரும், ஏ.வி.ஜெயவீணாவும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது.
  • செய்தி துளிகள் :
   • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 19-வது விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • ஆந்திரத்தில் தெலுங்கு புத்தாண்டான மார்ச் மாதம் 25-ஆம் தேதி, நிலமில்லாத 25 லட்சம் பேருக்கு வீட்டுமனைகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மாநில அரசு வழங்கவுள்ளது.
  • இதற்கு சுமார் 40,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு வழங்க 27,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், தனியாரிடம் இருந்து மேலும் 15,000 ஏக்கர் நிலம் பெறப்பட வேண்டியுள்ளது.
  • சில மாவட்டங்களில் தொழில் மேம்பாட்டுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களும் இந்த திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  • செய்தி துளிகள் :
   • இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஆந்திரப் பிரதேச பரப்பளவின் படி நாட்டின் 8வது பெரிய மாநிலம் ஆகும்.
   • 2011 கணக்கெடுப்பின் படி இது இந்தியாவின் 10வது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும்.
   • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • மகளிர் ஹாக்கி தொடரின் ஒரு பகுதியாக ஆக்லாந்தில் பிப்ரவரி 4 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிட்டனை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
  • நியூஸிலாந்து ஜூனியர் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் வென்ற இந்திய அணி, அடுத்து சீனியர் அணியுடன் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டது.
  • 47-ஆவது நிமிடத்தில் கேப்டன் ராணி ராம்பால் அற்புதமாக கோலடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது. பின்னர் இறுதிவரை கோலடிக்க பிரிட்டன் தரப்பு மேற்கொண்ட முயற்சியை இந்திய தற்காப்பு வீராங்கனைகள் தடுத்தனர்.
  • செய்தி துளிகள் :
   • இரண்டு போட்டிகளின் கோல் கணக்கையும் சேர்த்து இந்தியா 6-5 என்ற அளவில் முன்னிலை பெற்றது.
   • மாஸ்கோவில் 1980ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016இல் ரியோவில் விளையாட தகுதி பெற்றது. தற்போது 2020 ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது.

 

 

 • தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு.
  • கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் பிப்ரவரி 4 அன்று மகளிர் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 88 கிலோவும், ஜெர்க்கில் 115 கிலோ என மொத்தம் 203 கிலோவை தூக்கி தனது முந்தைய சாதனையை தகர்த்தார். கடந்த செப்டம்பரில் தாய்லாந்தில் நடந்த உலகப் போட்டியில் 201 கிலோ தூக்கி இருந்தார் மீரா.
  • செய்தி துளிகள் :
   • 203 கிலோ எடை தூக்கியதின் மூலம், ஜியாங் ஹியுவா 212 கிலோ, ஹோஸிஹ{ய் 211 கிலோ (சீனா), ரி சோங் 209 கிலோ (தென் கொரியா) ஆகியோருக்கு அடுத்து 4-ஆம் இடத்தில் உள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 99

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : இனியவை கூறல்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது?

விளக்கம் : இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • President Ram Nath Kovind opened the annual Udyanotsav of Rashtrapati Bhavan. The Mughal Gardens at Rashtrapati Bhavan will be opened for the general public .
  • The gardens will remain open till the 8th of next month and people can visit between 10:00 AM to 4:00 PM. The gardens will be closed for visitors on Mondays, on account of maintenance.
  • Related keys
   • Rashtrapati Bhavan Opened – 1931;
   • Rashtrapati Bhavan Location – Rajpath, New Delhi

 

 

 • On February 3, 2020, the Western Railways launched out branding of electric locomotives for the first time. This will help the Railways earn additional l revenue of 1.05 crores of rupees.
  • Around 10 locomotives have been branded so far. Railways has earned 223.53 crores of rupees from non-fare revenues.

 

 

INTERNATIONAL NEWS

 • The World Health Organization on February 4, 2020 announced that the Corona virus disease has not yet become pandemic. The disease has so far killed 425 people and has infected more than 20,000. Hong Kong recently reported death due to the virus.
  • It is the first country outside China to report death
  • Related keys
   • World Health Organization Founded: 7 April 1948
   • World Health Organization Headquarters: Geneva, Switzerland

 

 

 • The United Arab Emirates announced the discovery of a new natural gas field containing 80 trillion standard cubic feet of gas in the cross-border area of the Emirates of Abu Dhabi and Dubai.
  • A press statement by the Government of Dubai stated that the discovery of the Jebel Ali gas field will contribute to achieving gas self-sufficiency for the nation and support the next phase of its major development projects in line with the nation’s strategic development plan for the coming 50 years.
  • Related keys
   • United Arab Emirates Capital: Abu Dhabi
   • United Arab Emirates President: Khalifa bin Zayed Al Nahyan

 

 

 • Somalia has declared a national emergency following locust infestation sweeping the Horn of Africa, as insects devastate food supplies in one of the poorest and most vulnerable regions in the world. Agriculture Ministry said food sources for people and their livestock are at risk.
  • Experts say the locust swarms are the result of extreme weather swings.
  • Related keys
   • Somalia Capital: Mogadishu
   • Somalia Currency: Somali shilling 

 

 

WORDS OF THE DAY

 • Dauntless – showing fearlessness and determination.
  • Similar Words- resolute , indomitable
  • Antonyms – cautious, cowardly

 

 • Deduce – arrive at (a fact or a conclusion) by reasoning
  • Similar Words- conclude , reason , work out
  • Antonyms – premise, hazard

 


FaceBook Updates

Call Us