Today TNPSC Current Affairs February 03 2020

We Shine Daily News

பிப்ரவரி 03

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்திய கடற்படை சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு தனித்துவமான கடலோர பாதுகாப்புப் பயிற்சியைத் தொடங்கியது. உள்ளுர் சமூகத்திற்கு கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவிற்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான சர்வதேச வர்த்தக நெறிமுறை வழியில் ஹேம்நகர் வரை சுந்தர்பானில் இருந்து இரண்டு கடற்படை படகுகள் கொடியிடப்பட்டன.
  • செய்தி துளிகள்:
   • யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் கீழ் நான்கு சுந்தர்பான்ஸ் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
   • இதில் சுந்தர்பன்ஸ் தேசிய பூங்கா, சுந்தர்பன்ஸ் தெற்கு, சுந்தர்பன்ஸ் மேற்கு மற்றம் சுந்தர்பன்ஸ் கிழக்கு ஆகியவை அடங்கும்.

 

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • சமீபத்தில் மேற்கு ஆசிய அமைதித் திட்டமானது அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் வெளியிடப்பட்டது.
  • இது இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிறுத்தப்பட்ட இரு நாட்டுப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடரத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் படி ஜெருசேலம் ஒன்றிணைந்ததாகவும் இஸ்ரேலின் தலைநகராகவும் இருக்க வேண்டும்
  • மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங்கள் எதையும் அகற்றக் கூடாது.
  • செய்தி துளிகள்:
   • 1967 ஆம் ஆண்டுப் போரில் இஸ்ரேல் நாட்டினால் கைப்பற்றப்பட்ட நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜெருசலேமின் கோயிலான மவுண்ட் ஃஅல் – ஹராம் அல் – ஷெரீப் வளாகத்தைப் பாதுகாக்கப்பட வேண்டும்
   • இணைக்கப்படாத மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் காசா ஆகியவற்றிற்கு இடையே போக்குவரத்து இணைப்புகள் நிறுவப்பட வேண்டும்.
   • பாலஸ்தீனிய மற்றும் அண்டை அரபு அரசு பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 50 பில்லியன் டாலர் முதலீட்டு நிதி உருவாக்கப்பட வேண்டும்.

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தாய்லாந்த ஐடிஎப் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றார்
  • பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சோல் பாக்கியட்டை 6-3 7-5 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் அங்கிதா
  • செய்தி துளிகள்:
   • இரட்டையர் இறுதிப் போட்டியில், நெதர்லாந்தின் பிபியன் ஸ்கூஃப்ஸூடன் நம்பர் – 1-ம் நிலை வீராங்கனையான அங்கிதா, தாய் வைல்ட் கார்டில் நுழைந்தவர்களான சுபாபிட்ச் குயெரம் மற்றும் மனஞ்சயா சவாங்க்கேவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

 

 

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செர்பிய வீரர் நோவக்ஜோகோவிச்.
  • டென்னிஸ் உலகின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போர்னில் நடைபெறுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ராட்லேவர் மைதானத்தில் நடைபெற்றது.
  • 16 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச்சை எதிர்கொண்டார் உலகின் 5-ஆம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக்தீம்.
  • 16 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த ஜோகோவிச் இந்த வெற்றி மூலம் பெறும் 17-வது சாம்பியன் பட்டமாகும்.
  • செய்தி துளிகள்:
   • ஆஸி. ஓபன் பட்டத்தை கைப்பற்றியதின் மூலம் ஏடிபி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜோகோவிச்இ தற்போது மீண்டும் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். நடால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெடரர் அதே மூன்றாவது இடத்தில் உள்ளார்.

 

 

 

நியமனங்கள்

 

 • ஈராக்கின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி என்பவரை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.
  • முன்னாள் பிரதமர் அடில் அப்துல் மஹ்தி நவம்பர் மாதம் பதவி விலகியதை அடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சரான முகமது தவுபிக் அலாவியைப் புதிய பிரதமராக அறிவித்தார்.
  • செய்தி துளிகள்:
   • தொடர் போர்கள், நாட்டின் பொரளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் என அரசாங்கத்துக்கு எதிராக ஈராக்கில் கடந்த நான்கு மாதங்களாகப் போராட்டங்கள் அரங்கேறிவருகின்றன.

 

 

 

திருக்குறள்

 

குறள் : 97

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: இனியவை கூறல்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்

விளக்கம்: பிறருக்கு நன்மையைக் கொடுத்து, இனிமைப் பண்பிலிருந்து நீங்காத சொல், நேர்மையான வாழ்க்கையையும், நல்வழியில் நடப்பதால் உண்டாகும் பயனையும் கொடுக்கும்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Budget 2020-21 that was presented by the finance Minister Nirmala Sitaraman in the Parliament increased the import duty of green energy equipment like cells by 20%. This is being implemented to drive local manufacturing of the equipment and lowering the import of low-quality Chinese equipment.
  • The step is being introduced to protect the local companies and to boost Make in India strategy.
  • Related Keys
   • Finance Ministry Founded: 29 October 1946
   • Finance Ministry Headquarters: New Delhi

 

 

INTERNATIONAL NEWS

 • Pakistan which is facing the worst locust attacks in decades has declared National Emergency. The emergency was declared to tackle the insects that are destroying crops in Punjab province, the main region of agricultural production.
  • The locusts are currently in the India-Pakistan border along Cholistan.
  • Related Keys
   • Pakistan Capital: Islamabad
   • Pakistan Currency: Pakistani rupee

 

 

 • The Maldives has once again become a member of the Commonwealth of nations. President Ibrahim Mohamed Solih made the announcement, fulfilling one of his key presidential pledges.
  • The president said that the Commonwealth Secretary-General, Patricia Scotland, confirmed Maldives’ reinstatement into the organization as its 54th member state.
  • Related Keys
   • Maldives Currency: Maldivian rufiyaa
   • Maldives Capital: Malé

 

 

SCIENCE AND TECH UPDATES

 • The Indian Space Research Organisation (ISRO) has announced that it is preparing low-cost satellite launch vehicles costing around 30-35 crores rupees each, which can put into orbit satellites weighing 500 kgs.
  • The first such launch is expected to take place in the next four months from the country.
  • Related Keys
   • ISRO Founder: Vikram Sarabhai
   • ISRO Founded: 15 August 1969

 

 

APPOINTMENTS

 • Lieutenant General YK Joshi took over as General Officer Commanding-in-Chief of Northern Command at Udhampur. Before assuming the charge, he visited “Dhruva War Memorial”.
  • He paid tribute to martyrs who have sacrificed their lives under the Northern Command since 1972.

 

 

WORDS OF THE DAY

 • Barren – too poor to produce much or any vegetation.
  • Similar Words – unproductive , infertile
  • Antonyms – fertile , productive

 

 • Beseech – ask for or request earnestly
  • Similar Words – implore , entreat
  • Antonyms – insist, demand.

 


FaceBook Updates

Call Us