Today TNPSC Current Affairs February 02 2020

We Shine Daily News

பிப்ரவரி 02

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியம் சார்பில் 43-வது கடலோரக் காவல் படை தினம் பிப்ரவரி 1 அன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள் :
      • கடற்படையிலிருந்து இந்திய கடலோரக் காவல் படை தனியாகக் கட்டமைக்கப்பட்டு பிப்ரவரி 1, 1977-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1 கடலோரக் காவல்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

  • நாட்டின் பொருளாதாரம், சரிவைச் சந்தித்துள்ள இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் 2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்தார்.
    • வருமான வரி விதிப்பில் புதிய வழிமுறை, வரி விகிதம் குறைப்பு, வேளாண்துறைக்கு கூடுதல் நிதி, உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஊக்குவிப்பு, சுகாதாரத்துறை திட்டங்கள் ஆகிய அம்சங்கள் மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • செய்தி துளிகள் :
      • வேளாண் துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
      • குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெறுவதற்கான கால வரம்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 1 அன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் 928 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
    • ஆஸி. அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித் அவரை விட 17 புள்ளிகள் பின் தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    • 791 புள்ளிகளுடன் புஜாரா 6-ஆவது இடத்தில் உள்ள நிலையில், ரஹானே 9-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
    • செய்தி துளிகள் :
      • விராட் கோலி 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது.
      • 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது.
      • 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது பெற்றுள்ளார்

 

 

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பைன் முகுருஸாவை 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்க இளம் வீராங்கனை சோபியா கெனின்.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2008-இல் மரியா ஷரபோவா 20 வயதில் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றிருந்தார்.
      • அவருக்கு பின் தற்போது 21 வயது 80 நாள்களில் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் சோபியா.

 

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச ஈரநில  தினம்  பிப்ரவரி  2ம் தேதியன்று  கொண்டாடப்படுகிறது.
    • இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் உலகில் உள்ள ஈரநிலங்களை பாதுகாத்து, அவற்றை சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் பேணுவது மட்டுமன்றி அவற்றின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 96

குறள் பால்   : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : இனியவை கூறல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

விளக்கம் : நன்மையைத் தரும் சொற்களை ஆராய்ந்து ஒருவன் இனிமையாகச் சொல்வானானால் தீமைகள் கெட்டு அறம் வளரும்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • President of India, Shri Ram Nath Kovind will visit Telangana on February 1 and 2, 2020 to inaugurate the new global headquarters Kanha Shanti Vanam of Shri Ram Chandra Mission in Rangareddy District on February 2, 2020.
    • Related Keys:
      • Kanha Shanti Vanam is the global headquarters of the Heartfulness Institute.
      • It is located in Kanha village, Ranga Reddy district, about 50 km from Hyderabad, India.

 

 

INTERNATIONAL NEWS

  • USA declared a public health emergency over the spread of the coronavirus. Foreign nationals who have visited China in the past two weeks.
    • US citizens returning from Hubei province, where the outbreak started, will be quarantined for 14 days. World Health Organization (WHO) declared a global health emergency over the new virus.
    • Related Keys:
      • The novel coronavirus known as the Wuhan coronavirus, It is a contagious virus that causes respiratory infection identified as the cause of the ongoing 2019–20 Wuhan coronavirus outbreak.

 

 

BANKING & FINANCE

  • Finance Minister Nirmala Sitharaman that union government plans to sell a partial stake in LIC through IPO or an initial public offer. The union budget she proposed that the government will sell its stake in IDBI Bank to private investors and also amend the Banking Regulation Act to strengthen co-op banks.
    • The finance minister that the deposit insurance coverage against bank failure will be increased to Rs.5 lakh from Rs.1 lakh.

 

 

APPOINTMENTS

  • Lieutenant General Yogesh Kumar Joshi assumes charge of GOC-in-C, Northern Command in Jammu and Kashmir’s Udhampur. K Joshi was commissioned into 13 JAK RIF on 12 June 1982 and later commanded the same unit.
    • The general officer is an alumnus of the National Defence Academy, Khadakwasla, and a postgraduate from the Defence Services Staff College, Wellington. He commanded 13 JAK RIF in Operation Vijay and Parakram.
    • Related Keys:
      • YK Joshi served as Director-General, Infantry, and was instrumental in catalyzing the modernization drive of the Infantry.
      • He was the Chief of Staff, Northern Command, before taking over as Army Commander of the Northern Command.

 

 

SPORTS

  • Olympian Ayonika Paul won the women’s 10m Air Rifle T1 event Vijayveer Sidhu won the men’s 25m Pistol T2 event in the National Shooting trials at Thiruvananthapuram.
    • She came to a quality eight-woman field, which had the likes of Tokyo 2020 quota holders Apurvi Chandela and Anjum Moudgil among competitors. Chandigarh’s Vijayveer won the junior men’s 25m Pistol with an aggregate score of 585. The three inner 10s, more than second-placed Rajkanwar Singh Sandhu of Punjab.
    • Related Keys:
      • Ayonika Paul (born 23 September 1992) is an Indian shooter who competes in the 10 metre air rifle event.
      • She won the silver medal in the 2014 Commonwealth Games in Glasgow.

 

 

WORDS OF THE DAY

  • Vivid : producing powerful feelings or strong, clear images in the mind
    • Synonyms : animated , lively , lifelike
    • Antonyms : bland , boring , gloomy , dull , dreary , obscure

 

  • Zenith : the time at which something is most powerful or successful
    • Synonyms : apex , crown , culmination , crown , eminence
    • Antonyms : bottom , depth , base