Today TNPSC Current Affairs December 28 2019

We Shine Daily News

டிசம்பர் 28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க மத்திய சுங்கவரி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
  • மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில் பல நிறுவனங்கள் ஜி.எஸ்.டி கணக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தாமல் இழுபறி செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பினாலும் அலட்சியமாக நிறுவனங்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.
  • செய்தி துளிகள்
   • சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax, GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியா – அருண் ஜெட்லியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை0%> 5%> 12%> 18%> 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 • ஏடிஎம்.மில் பணம் எடுக்கும்போது ஒருமுறை மட்டும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் OTP எண் வழங்கும் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. ஏடிஎம் மையங்களில் நடைபெறும் மோசடி மற்றும் முறைகேடுகளை இந்த புதிய திட்டம் குறைக்க உதவும்.
  • செய்தி துளிகள்
   • மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் பொதுத்துறை வங்கியும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. எனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரும் 2020ஆம் ஆண்டு புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து, அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களிலும் ஒன் டைம் பாஸ்வோர்ட் முறை அமல்படுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

 

 

 

 • ஐநா சபை உலகில் பிரபலம் வாய்ந்த பாகிஸ்தான் இளம்பெண்ணை தேர்வு செய்துள்ளது.
  • மலாலா யூசுப்சாயின் கடுமையான உழைப்பு, சமூகத்தின் மீதான பற்று போன்ற கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
  • செய்தி துளிகள்
   • கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது.
   • 2014-ம் ஆண்டு மலாலா யூசுப்சாக்கு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் ஒன்றாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார்.

 

 

 

 • நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் ஜனவரி 15ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • அதற்காக முதற்கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், மாதிரி ரேஷன் அட்டை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
  • செய்தி துளிகள் :
   • ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் அனைவரும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலிருந்தும் தங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்தி பொருள்களைப் பெறமுடியும்.
   • ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 15ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • மெக்சிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான, மாயன் நாகரிகத்தை சேர்ந்த பழம்பெரும் மாளிகை ஒன்றின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • யுகாடன் மாகாணத்தில் உள்ள குலுபா என்ற பழமையான நகரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.
  • செய்தி துளிகள்
   • மாளிகை என்று கருதப்படும் அக்கட்டிடம் 20 அடி உயரமும், 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது.
   • ஸ்பெயின் இப்பிராந்தியத்தை கைப்பற்றும் முன்புவரை அங்கு மாயன் நாகரிகமே இருந்து வந்தது. அந்த காலத்தில் மாயன்கள் தற்போது இருக்கும் குவாடமாலா, தென் மெக்சிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டூரஸ் ஆகியவற்றின் பெரும் பகுதிகளை ஆண்டுவந்தனர்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட உள்ளது.
  • 2019ம் ஆண்டிற்கான கிரிக்கெட் துறை சார்ந்த சாதனையாளர்களுக்கான விருதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஜனவரி 12ம் தேதி வழங்க இருக்கிறது. அதில் ஸ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது
  • செய்தி துளிகள்:
   • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி
   • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகம்: மும்பை
   • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

 

 

திருக்குறள்

 

குறள்: 60

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

குறள்:

                மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

                நன்கலம் நன்மக்கட் பேறு

விளக்கம்:  மனைவியும் நற்குண நற்செய்கைகளே இல்வாழ்க்கைக்கு மங்கலம் (நன்மை) என்பர். நல்ல மக்களைப் பெறுதல் அம்மங்கலத்திற்கு அழகு என்றும் அறிவுடையோர் கூறுவர் 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The 2019 edition of National Tribal Dance Festival has begun in Raipur, the capital of Chhattisgarh. The three-day dance fest will be held from 27-29 December 2019. The festival was inaugurated by Congress leader Rahul Gandhi and the inaugural function was presided over by Chhattisgarh Chief Minister Bhupesh Baghel.
  • Over 1300 participants from 25 states & Union Territories (UT) of India are participating in this national event.
  • Related Keys
   • The National Tribal Dance Festival is an annual festival celebrated by the aborigines and tribal of India in the National Capital Region, of India.

 

 

 • Ministry of Women and Child Development has invited applications for Nari Shakti Puraskar for the year 2019. The National Award is given annually to individuals, groups, institutions in recognition of their exceptional work towards the cause of women empowerment, especially for vulnerable and marginalized women.
  • Nearly 40 Nari Shakti Puraskar will be given on International Women’s Day observed on 8th March 2020.
  • Related Key
   • Ministry of Women and Child Development Founded: 30 January 2006
   • Ministry of Women and Child Development Headquarters: New Delhi.

 

 

 • Telangana government has decided to raise the retirement age of employees of the Road Transport Corporation, RTC to 60 from the current age 58.
  • The decision will be applicable to all cadres of employees of the state-owned RTC.
  • Related Keys
   • Telangana Capital: Hyderabad
   • Telangana Governor: Tamilisai Soundararajan

 

 

INTERNATIONAL NEWS

 • Russia is the only country in the world that has hypersonic weapons- weapons that travel faster than Mach5 and have the capability to manoeuvre during the entire flight.
  • Putin has said that the missile flies 10 times faster than the speed of sound, has a range of more than 2,000 kilometers (1,250 miles) and can carry a nuclear or a conventional warhead.
  • Related Keys
   • Russia Currency: Russian ruble.
   • Russia Capital: Moscow.

 

 

AWARDS

 • Hyderabad Opthalmologist Dr Santosh G Honavar conferred Life Achievement honour by American Academy of Ophthalmology . He is the first Indian chosen for the honour. The award was formally presented to Dr Honavar recently at the Annual Meeting of the American Academy of Ophthalmology held in San Francisco.

 

WORDS OF THE DAY

 • Raffish – unconventional and slightly disreputable, especially in an attractive way.
  • Similar Words – dashing , sporty ,flashy
  • Antonyms – clumsy, lumpish.

 

 • Ramble – talk in a confused way and at length.
  • Similar Words – chatter ,babble.
  • Antonyms – course, speed, hasten.

FaceBook Updates

Call Us