Today TNPSC Current Affairs December 25 2019

We Shine Daily News

டிசம்பர் 25

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • 166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டில் (2019-20) பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக, கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக மிக உயர்ந்த தரத்தை பின்பற்றுவது குறித்து மத்திய அரசிடம் தில்லி உயர்நீதிமன்றம் அறிக்கை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    • செய்தி துளிகள் :
      • இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது. 16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர்.
      • இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.

 

 

  • நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில், அடல் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தை (அடல் பூஜல் யோஜனா) பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (25.12.19) தொடக்கி வைத்தார்
    • முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-ஆவது பிறந்த தினமான புதன்கிழமை, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    • செய்தி துளிகள் :
      • 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்பு
      • 1961 முதல் 10 முறை லோக்சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
      • இரண்டு முறை இராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
      • லக்னோவில் உள்ள லோக்பவனில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

 

 

  • மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி மேம்பாட்டு நிதி நிறுவனம் (எப்.ஐ.டி.எப்.) நபார்டு வங்கி மூலம் மாநில அரசுகளுக்கு மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் அமைத்தல், மீன் பண்ணைகளை நவீனமயமாக்குதல், மீன் சந்தைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கான நோய் ஆராய்ச்சி மையங்கள் போன்றவை அமைப்பதற்கு கடன் வழங்குகிறது.
    • இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங் முன்னிலையில் மத்திய மீன்வளத் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, நபார்டு வங்கி ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.
    • செய்தி துளிகள் :
      • மீன் உற்பத்தியைப் பெருக்குவதாலும் வேலை வாய்ப்பு அளிப்பதாலும் உள்நாட்டு மற்றும் கடல் மீன் வளம் மீன்துறையில் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. இம்மாநிலம் 1000 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டிருக்கின்றது. அதில்3 இலட்சம் மக்கள் தொகையும் 442 மீனவ கிராமங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவர்களில் 2.52 இலட்சம் மீன்பிடி தொழிலில் நேரடியாக ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் 25,000 கட்டு மரங்களையும், 13724 வள்;ளங்களையும், 8230 விசைப்படகுகளையும், 6800 இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளையும் இயக்குகின்றனர். உள்நாட்டு மீன்வளம் சம அளவில் முக்கிய பங்காற்றுகின்றது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றார்.
    • போபாலில் நடந்த 63வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரியானாவை சார்ந்த 17 வயதான பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றார். தனிநபர் மட்டுமின்றி அணிகள் பிரிவிலும் மனு பாக்கருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
    • செய்தி துளிகள்:
      • தேசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அஞ்சும் (50 மீ., ‘ரைபிள்-3’) தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வென்றார். இவர், தொடர்ந்து 3வது ஆண்டாக இப்பிரிவில் தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
      • அடுத்த இரண்டு இடங்களை முறையே தமிழகத்தின் காயத்ரி, ஹரியானாவின் நிஷ்சல் கைப்பற்றினர்.

 

 

நியமனங்கள்

 

  • இந்திய மகளிர் குத்துச்சண்டை அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக தமிழகத்தின் வி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சீனாவின் வுஹானில் வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள முதல் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டிக்கான மகளிர் அணியை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரும், தெற்கு ரயில்வே விளையாட்டு அலுவலருமான வி.தேவராஜன் ஆவார்

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 57

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

குறள் :

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

விளக்கம் : மகளிரைக் காவல் வைத்துக் காத்தலால் பயனில்லை : அவர்கள் தம் ஒழுக்கத்தால் தம்மைக் காத்துக் கொள்கிற காவலே சிறந்தது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On December 25, 2019, Government of India launched Good Governance Index. Tamil Nadu topped in Good Governance Index. The States and Union Territories were divided into 3 groups namely Big states, North East and hill states and union territories.
    • Tamil Nadu topped in Good Governance Index in the “Big States” category. It was followed by Maharashtra, Karnataka, Chhattisgarh and Andhra Pradesh.
    • Related Keys
      • In Agricultural and allied ranking, the best performing states were Madhya Pradesh, Mizoram and Daman and Diu.

 

 

  • NITI Aayog, the policy think tank of Government will launch the second edition of Sustainable Development Goals (SDG) India Index and Dashboard 2019–20 on 30 December 2019 at NITI Aayog, New Delhi. The first edition of SDG India Index was launched in December 2018.
    • It was the first tool developed by any large country to monitor progress towards achieving SDGs at sub-national level.
    • Related Keys
      • SDG India Index and Dashboard 2019–20 Developed by Union Ministry of Statistics and Programme Implementation (MoSPI) in collaboration with United Nations in India, and Global Green Growth Institute.
      • Index and Dashboard 2019 covers 16 out of 17 SDGs and a qualitative assessment on Goal 17.

 

 

  • On December 25, 2019, Union Minister of Communication and IT Shri Ravi Shankar Prasad inaugurated “Digital Village Guruwara”. During the launch, it was announced that the Government has planned to offer free Wi-Fi services to all villages till March 2020.
    • The Government of India has so far connected 1,30,000-gram panchayats through Bharatnet.
    • Related Keys
      • The GoI in June 2018 announced that all gram panchayats will receive broadband connectivity by 2020.
      • Bharathnet initiative was launched in 2011.

 

 

  • The Cabinet Committee On Security (CCS) chaired by the Prime Minister Narendra Modi has approved the creation of a Chief of Defence Staff (CDS) post that will function as a single point of contact for different branches of armed forces.
    • CCS also approved the report of a high-level committee headed by National Security Advisor Ajit Doval, which finalised responsibilities and framework for operation of CDS.
    • Related Keys
      • A CDS would be a four-star general- from either of the Indian Armed Forces- the Army, the Air Force or the Navy and will be payable to a salary equal to a service chief.

 

 

INTERNATIONAL NEWS

  • Union Cabinet has given its approval for signing of Memorandum of Understanding (MoU) between Republic of India and Federative Republic of Brazil on Bioenergy Cooperation.
    • In 2016, during the meeting between Prime Minister Narendra Modi and President of Brazil in India, the two sides agreed to cooperate on research and development (R&D) of renewable energies, and in field of 2nd-generation biofuels.
    • Related Keys
      • Brazil is one of the most important trading partners of India in entire Latin America and Caribbean (LAC) region.
      • Brazil is currently world’s 2nd largest producer and consumer of biofuels.

 

 

WORDS OF THE DAY

  • Obdurate – stubbornly refusing to change one’s opinion or course of action.
    • Similar Words – unbending , inflexible
    • Antonyms – amenable , compliant

 

  • Oblique – not expressed or done in a direct way.
    • Similar Words – indirect , inexplicit
    • Antonyms – straightforward.