Today TNPSC Current Affairs December 24 2019

We Shine Daily News

டிசம்பர் 24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது.
    • இதன்படி, தமிழகத்தில் தற்பொழுது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்
    • ஆண் வாக்காளர்கள் : 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரம்
      • பெண் வாக்காளர்கள் : 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118
      • மூன்றாம் பாலினத்தவர் : 5 ஆயிரத்து 924
    • செய்தி துளிகள்:
      • வரைவு வாக்காளர் பட்டியலின்படி அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டப்பேரவை தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதி ஆகும்.
      • மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்ட பேரவை தொகுதி சென்னை துறைமுகம் தொகுதியாகும்
      • அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்
    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
    • 81 பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
    • புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை முன்னாள் முதல்வர் ரகுவர் தாஸ் முதல்வராக தொடருவார்.
    • செய்தி துளிகள்
      • ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு ஆவார்.
      • ஜார்க்கண்ட் மாநிலத்pல் 81 பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில்17 சதவீத வாக்குகள் பதிவாகின.
      • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரன்

 

 

  • முதலீடு வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
    • முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழு பிரதமர் மோடியை தலைமையாக கொண்டு புதியதாக உருவாக்கப்பட்டது.
    • குழு உறுப்பினர்கள்: அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல்
    • பொருளாதார வளர்ச்சிக்கான வளர்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் பெரு நிறுவன வரி குறைப்பு, வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அகநிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
    • செய்தி துளிகள்
      • மத்திய நடைமுறை பரிவர்த்தனை விதிகளின் கீழ் மத்திய அரசு 8 அமைச்சரவைக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளது.
      • 8 அமைச்சரவை குழுக்கள் : நியமனங்களுக்கான குழு, குடியிருப்புகளுக்கான குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு, அரசியல் விவகாரங்களுக்கான குழு, பாதுகாப்புக்கான குழு, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான குழு, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான குழு
      • அனைத்து அமைச்சரவைக் குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

நியமனங்கள்

 

  • இந்திய வெளியுறவுச் செயலராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்
    • இவர் தற்பொழுது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ளார்
    • இவர் ஜனவரி 30-ம் தேதி வெளியுறவுச் செயலராக பொறுப்பேற்பார் என்று பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • செய்தி துளிகள்
      • நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்
      • மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்
      • ஷ்ரிங்லா 1984-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய அயல் பணி அதிகாரியாவார்

 

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய விவசாயிகள் தினம் – டிசம்பர் 23
    • காரணம் : “விவசாயிகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த இந்திய முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினம் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில்5 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல அதிவிரைவு ஏவுகணை (கியூ ஆர் – எஸ்ஏஎம்) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
    • ஒடிஸா மாநிலம், பாலாசூர் மாவட்டத்தின் சந்திப்பூர் பகுதியில் சோதனை நிகழ்த்தப்பட்டது.
    • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது.
    • செய்தி துளிகள்
      • தற்பொழுது இந்திய ராணுவத்தில் உள்ள ஸ்பைடர் ரக “கியூ ஆர் -எஸ்ஏஎம் ஏவுகணைகள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
      • டிஆர்டிஒ மூலம் “கியூ ஆர் – எஸ்ஏஎம் ஏவுகணை தயாரிக்க மத்திய அரசு கடந்த 2014 –ம் ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது.
      • கியு ஆர் – எஸ்ஏஎம் 360 டிகிரி சுழன்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 56

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விளக்கம் : கற்பிலிருந்து தவறாமல் தன்னைக் காத்தும், தன் கணவனைப் பாதுகாத்தும் இருவரிடத்தும் புகழ் நீங்காமல் காத்தும், தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே சிறந்த பெண்ணாவாள்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Integral Coach Factory (ICF) of Indian Railways, Chennai has produced its 3000th coach of the year in less than nine months. This would help in meeting the growing demand for coaches.
    • The number of working days to achieve the above figure has been reduced from 289 days in the last year to 215 days in the current year.
    • Related Keys
      • Integral Coach Factory (ICF) Founded: 1955
      • Integral Coach Factory (ICF) Headquarters Chennai, Tamilnadu, India.

 

 

  • The 40-day harshest winter period in Kashmir, known in the local parlance as ‘Chillai-Kalan’, began with the upper reaches of the valley receiving snowfall.
    • Chillai-Kalan begins from December 21 and ends on January 31 next year. It is followed by a 20-day long Chillai-Khurd that occurs between January 31 and February 19 and a 10-day long Chillai-Bachha which is from February 20 to March 2.

 

 

  • On December 23, 2019, Ministry of Railways announced that Indian Railways is set to receive modern signaling systems. According to the ministry, it is one of the most ambitious projects of Indian Railways. This is because the project improves safety, line capacity allowing trains to run at higher speeds.
    • The plan will be implemented after approval from NITI Aayog, CCEA (Cabinet Committee on Economic Affairs) and Extended Board of Railways.
    • Related Keys
      • Ministry of Railways Founded: 16 April 1853.
      • Ministry of Railways Headquarters: Rail Bhavan, New Delhi.

 

 

  • On December 23, 2019, Ministry of Housing and Urban Affairs announced that urban areas of 35 states ( which also includes union territories ) have been declared Open Defecation Free. It includes 4,167 cities. The target has been achieved through third party verification.
    • According to the ministry, the target has been achieved by constructing 65.81 lakh household toilets as against the target of 59 lakhs.
    • Related Keys
      • Ministry of Housing and Urban Affairs Founded: 1952
      • Ministry of Housing and Urban Affairs Headquarters: New Delhi

 

 

INTERNATIONAL NEWS

  • External Affairs Minister was on a two-day visit to Iran between December 22-23, 2019. During his visit he chaired the 19th Joint Commission Meeting with his Iranian Counterpart Mohammad Javad Zarif.
    • The leaders at the Joint Commission Meeting agreed to Strengthen and accelerate Chabahar project.
    • Related Keys
      • Iran Capital: Tehran
      • Iran President: Hassan Rouhani
      • Iran Currency: Iranian rial

 

 

SPORTS

  • Qatar Football Association signed an agreement with the Confederation of African Football (CAF) stipulating that Doha will host the African Super Cup for the next three years. The African Super Cup in Doha with the next edition will be held on February 14, 2020 .
    • At the beginning of this year, Qatar hosted the African Super Cup for the first time.
    • Related Keys
      • Qatar Football Association Founded: 1960
      • Qatar Football Association President: Hamad Bin Khalifa Bin Ahmed Al-Thani


WORDS OF THE DAY

  • Livid – furiously angry.
    • Similar Words – fume , infuriate
    • Antonyms – friendly, happy.

 

  • Luminary – An inspiring or influential person.
    • Similar Words – leader , expert , master.
    • Antonyms – pleb