Today TNPSC Current Affairs December 21 2019

We Shine Daily News

டிசம்பர் 21

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • என்ஆர்சி நடவடிக்கையின் போது, இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம். பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள், அவர்களது பெற்றோர்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்
    • செய்தி துளிகள்
      • இந்திய குடியுரிமைச் சட்டம் 1955ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி – ஐஐ இன் அடிப்படையில் அமைக்கப்பட்டது, அதில் சரத்து 5 முதல் 11 வரையிலானது இந்திய குடியுரிமை பற்றி விளக்கியுள்ளது.
      • இந்த இந்திய குடியுரிமை சட்டம் இதுவரை 9 முறை திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
      • 1987- ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் பிறந்தவர்களும், அவர்களின் வாரிசுகளும் இந்தியக் குடிமக்களாவர். அதே போல் கடந்த 2004-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட நபர்களின் பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்று, பெற்றோர் இருவரும் சட்டவிரோதக் குடியேறிகளாக இல்லாதிருப்பின் அவர்களும் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவர்.
      • இந்தத் திருத்தம் அஸ்ஸாம் மாநிலத்துக்குப் பொருந்தாது

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வழிவகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை(20.12.2019) ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
    • செய்தி துளிகள்
      • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஜுன் 23, 2016 வாக்கெடுப்பில் யு.கே எடுத்த முடிவைக் குறிப்பிடும் Brexit என்பது “பிரிட்டிஷ் வெளியேறுதல்” (“British exit”) என்பதன் சுருக்கமாகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) உலக சாம்பியன் விருதுகள் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டிக்கு வழங்கப்பட்டன.
    • கடந்த 1973-இல் மார்க்ரெட் கோர்ட்டுக்கு பின் பிரெஞ்சு ஒபன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும், கடந்த 1976-இல் எவோன் காவ்லிக்கு பின் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். 2019 டபிள்யுடிஏ பைனல்ஸ் பட்டத்தையும் வென்றார் பர்டி.
    • செய்தி துளிகள்
      • உலகின் நம்பர் ஒன் வீரராக நான்காவது முறையாக சீசனை நிறைவு செய்யும் நடால், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றார். மேலும் டேவிஸ் கோப்பை பட்டத்தை ஸ்பெயின் வெல்லவும் உதவினார். இதற்காக அவருக்கு ஐடிஎஃப்பின் ஸ்டெபான் எட்பர்க் விருது மூன்றாவது முறையாக தரப்படுகிறது. ஏடிபி மீண்டு வந்த வீரர் விருது ஆன்டி முர்ரேவுக்கு வழங்கப்பட்டது

 

 

  • உலக அளவில் சாதனை படைத்த ஆண்டிற்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பெல்ஜியம் ஃபிஃபா ‘ஆண்டின் சிறந்த அணி’ என முடிசூட்டப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலுக்கு முன்னால் உலக சாம்பியனான பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • ஃபிஃபாவின் தலைவர்: கியானி இன்பான்டினோ
    • நிறுவப்பட்டது: 21 மே 1904
    • தலைமையகம் : சூரிச், சுவிட்சர்லாந்து

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

  • மனிதர்களை ஏந்திச் செல்வதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஸ்டார்லைனர்’ விண்கலம் சோதனை முறையில் டிசம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது
    • செய்தி துளிகள்
      • அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது. அந்த விண்கலம் ஃபுளோரிடா மாகாணம் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து யுஎல்ஏ-வி ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. ‘ரோஸி’ எனப் பெயரிடப்பட்ட பொம்மையை ஏந்திச் செல்லும் அந்த விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து 8 நாள்களில் பூமிக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

  • எத்தியோப்பியா தனது முதல் செயற்கைக்கோளை ஏவியது, இது நாட்டின் விண்வெளித் திட்டத்தின் ஒரு முக்கிய சாதனையாகும். இது ஆப்பிரிக்க விண்வெளித் தொழிலுக்கு ஒரு முக்கியமான ஆண்டைக் குறிக்கிறது.
    • எத்தியோப்பியன் ரிமோட் சென்சிங் சேட்டிலைட் (Ethiopian Remote Sensing Satellite (ETRSS) ஏவுதல் சீனாவில் ஒரு விண்வெளி நிலையத்தில் நடந்தது.
    • இந்த ஏவுதல் எத்தியோப்பியாவை விண்வெளியில் செயற்கைக்கோளை வைத்த 11வது ஆப்பிரிக்க நாடாக மாற்றுகிறது.
    • செய்தி துளிகள்
      • 1998 ஆம் ஆண்டில் எகிப்து அதில் முதன்மையானது. எத்தியோப்பியாவின் செயற்கைக்கோள் வழங்கிய தரவு நாட்டின் விவசாயம், வனவியல் மற்றும் சுரங்க வளங்கள் பற்றிய முழுமையான படத்தை வரைந்து, வெள்ளம் மற்றும் பிற பேரழிவுகளுக்கான பதில்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
      • எத்தியோப்பியா தலைநகரம்: அடிஸ் அபாபர் நாணயம் : பிர்ர்

 

 

திருக்குறள்

 

குறள்: 53

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை

விளக்கம்: மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளானால் கணவனிடத்தில் இல்லாதது இல்லை. அவள் அவ்வாறு இல்லாதவளானால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை ஆகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On December 20, 2019, India, Afghanistan and Iran met at New Delhi to discuss the issues in the implementation of Chabahar port in Iran. The port is considered as a gateway of opportunities with Central Asian Nations by all the three countries.
    • Related Keys
      • Chabahar port Opened: 1983
      • The work of the Chabahar port is being conducted by the Port Global Ltd Company and the progress of the project was welcomed by all three countries.

 

 

INTERNATIONAL NEWS

  • The International Astronomical Union (IAU) announced the names of the newly discovered stars and planets, where the name “Sharjah” was chosen for a star with “Barjeel” being the name of one of its planets. The announcement was made during a press conference of the IAU in the French capital, Paris.
    • During the announcement, the organisers lauded the efforts and contributions of the Emirate of Sharjah to the global scientific community.
    • Related Keys
      • International Astronomical Union Headquarters: Paris, France.
      • International Astronomical Union Founded: 28 July 1919.

 

 

  • Donald Trump has become the third US President in history to be impeached by the House of Representatives, setting up a trial in the Senate that will decide whether he remains in office. The House voted on two charges – that the President abused his power and that he had obstructed Congress.
    • Nearly all Democrats voted for the charges and every Republican against.
    • Related Keys
      • Only three U.S. presidents have been formally impeached by Congress so far
      • The three US Presidents are Andrew Johnson, Bill Clinton and Donald Trump.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • India had successfully test-fired two missiles from Chandipur in Odisha. The upgraded version of Pinaka guided rocket system was test-fired from the DRDO’s Proof and Experimental Establishment firing test range. Quick Reaction Surface-to-Air Missile (QR-SAM) tested from a mobile launcher at a launch complex of the Integrated Test Range.
    • Related Keys
      • DRDO Headquarters location: New Delhi
      • DRDO Founded: 1958

 

 

AWARDS

  • Portuguese Prime Minister, Antonio Costa has announced that, Portugal will be launching a Gandhi Citizenship Education Prize, each year inspired by his different thoughts and quotes.
    • The first edition of this prize will be dedicated to animal welfare as Mahatma Gandhi said that the greatness of a nation can be judged by the way its animals are treated.
    • Related Keys
      • The President of India said that the thoughts of Mahatma Gandhi can show the right path on issues like stress and conflict and climate crisis.
      • In 1974, India and Portugal started their diplomatic relations with a new government in Portugal.

 

 

WORDS OF THE DAY

  • Masculine – having qualities or appearance traditionally associated with men.
    • Similar Words – macho , manly.
    • Antonyms – feminine

 

  • Maim – wound or injure (a person or animal) so that part of the body is permanently damaged.
    • Similar Words – hurt , disable.
    • Antonyms – mend, strengthen.