Today TNPSC Current Affairs December 15 2019

We Shine Daily News

டிசம்பர் 15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. பேரவைக் கூட்டத்தின் முதல் நாள் ஆளுநர் உரையாற்றுகிறார்.
  •  15-ஆவது சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் ஜனவரி 19-ம் தேதிக்குள் கட்டப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் கூட்டத்தொடரும், பிப்ரவரி மாதம் ஆண்டு நிதி நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரும், ஜீன் மாதம் துறை ரீதியான மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற இரண்டாவது கூட்டத்தொடரும் சட்டமன்ற நிகழ்வுகளாக உள்ளன.
  • செய்தி துளிகள் :
   • ஆளுநர் மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார்.
   • சட்டப்பேரவையில் ஒரு கூட்டத்தொடருக்கும் மற்றொரு கூட்டத்தொடருக்கும் கால இடைவெளி ஆறு மாதங்களை தாண்டி இருக்கக்கூடாது.
   • தமிழ்நாடு சட்டப்பேரவை 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் 1 நியமன (ஆங்கிலோ – இந்தியன்) உறுப்பினரையும் கொண்டுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரதமர் மோடி தலைமையில் கங்கை தூய்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • கங்கை நதியை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட “நமாமி கங்கா” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய கூட்டம் நடைபெற்றது.
  • தேசிய கங்கை பாதுகாப்பு குழுவின் முதல் கூட்டம் இதுவாகும்.
  • செய்தி துளிகள் :
   • தேசிய கங்கை பாதுகாப்பு குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
   • “நமாமி கங்கா திட்டம்” ஜீன் 2014 அன்று தொடங்கப்பட்டது.
   • நமாமி கங்கா திட்டப்பணிகளை ஜல் சக்தி (அமைச்சகம்) மற்றும் நிதி ஆயோக் ஆகியவை கண்காணிக்க வேண்டும்.
   • கங்கை தூய்மைப் பணிக்காக “தூய்மை கங்கை நிதி” என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவராக அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இது, இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள், ஆயுதபரவல் தடுப்பு ஆகிய விவரங்களை கவனித்து கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும்.
  • இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவர்.
  • செய்தி துளிகள் :
   • இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்.

 

 

விருதுகள்

 

 • 2019-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொடர்பு சங்கத்தின் தலைமைத்துவ விருது ஜே.டேனியல் செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • டேனியல் செல்லப்பா பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
  • உள்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்களை அடித்தட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கொண்டு சென்றதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • செய்தி துளிகள் :
   • இந்திய மக்கள் தொடர்பு சங்கம் 1958-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
   • தேசிய மக்கள் தொடர்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

 

 

விளையாட்டுச் செய்திகள்

 

 • தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தென்னாப்பிரிக்க அணியில் 147 டெஸ்ட், 295 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் ஆடி 999 பேரை அவுட்டாக்கியுள்ளார்.
  • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பு இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செய்தி துளிகள் :
   • தென்னாப்பிரிக்க கிரிகெட் சங்க தலைவர் – ஜாக் காலிஸ்தென்னாப்பிரிக்க கிரிகெட் சங்கம் 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 48

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் இயல் : இல்லறவியல்

குறள் பால் : அறத்துப்பால்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

விளக்கம் : தவம் செய்கின்றவரையும் அவர் வழியில் ஒழுகச் செய்து, தானும் அறநெறியில் தவறாது நின்று வாழ்பவனின் இல்வாழ்க்கையானது, தவம் செய்வாரை விட வன்மை உடையதாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Prime Minister Shri Narendra Modi chaired the first meeting of the National Ganga Council in Kanpur, Uttar Pradesh on 14 December.
  • Aim: The first meeting of the Council was aimed to reinforce the importance of a Ganga-centric approach in all departments of the concerned states and relevant Central Ministries.
  • Related Keys:
   • The Council is given overall responsibility for superintendence of pollution prevention and rejuvenation of River Ganga Basin, including Ganga and its tributaries.

 

 

 • Government said that over 1,65,000 lakh farmers across India have been registered on the National Agriculture Market (e-NAM) platform.
  • The announcement was made by the Agriculture and Farmers Welfare Minister Narendra Singh
  • Related Keys:
   • National Agriculture Market or eNAM is an online trading platform for agricultural commodities in India. The market facilitate farmers, traders and buyers with online trading in commodities.

 

 

 • The Ministry of Road Transport and Highways had announced that FASTags will become mandatory for all vehicles, private and commercial from 15 December. Earlier the deadline was set to 1 December 2019.
  • If the vehicle owners do not have a FASTag, they should pay twice the regular amount if you pass a toll booth and your vehicle.incubators that are established by the government or private sector as a startup grant.
  • Related Keys:
   • FASTag is an electronic toll collection system. The prepaid rechargeable tags that employ Radio Frequency Identification (RFID) technology for making toll payments directly from the prepaid or savings account linked to it or directly toll owner.

 

 

APPOINTMENTS

 • The government appointed TV Somanathan as an expenditure secretary in the finance ministry. Somanathan will replace Girish Chandra Murmu, who was named the first lieutenant governor of the Union Territory of Jammu & Kashmir in October.
  • Related Keys:
   • TV Somanathan is a 1987 batch IAS officer from the Tamil Nadu cadre. Somanathan served as a commercial tax commissioner and principal secretary, Planning & Development, in the Tamil Nadu government.

 

 

SCIENCE & TECH UPDATES

 • NASA has finally selected a sample collection site on asteroid Bennu after the arrival of OSIRIS-REx spacecraft in December 2018.
  • The OSIRIS-Rex mission team has selected the site designated Nightingale, which is located in a crater high in Bennu’s northern hemisphere. The team has also selected site Osprey of Bennu as a backup sample collection site.
  • Related Keys:
   • Site Nightingale is located in a northern crater 460 feet wide of the asteroid. As per the observation, Nightingale’s regolith or rocky surface material is dark, and images show that the crater is relatively smooth.

 

 

WORDS OF THE DAY

 • Accrue – accumulation of something
  • Synonym – amass, collect
  • Antonym – disperse,distribute

 

 • Unbridled – uncontrolled; unconstrained
  • Synonym – rampant, unchecked
  • Antonym – controlled, subdued

FaceBook Updates

Call Us