Today TNPSC Current Affairs December 12 2019

We Shine Daily News

டிசம்பர் 12

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • 2011 கணக்கெடுப்பின்படி பதவிகளுக்கான சுழற்சி, இடஒதுக்கீடு இரண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • 9 மாவட்டங்களை தவிர்த்து பிற கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • செய்தி துளிகள் :
      • அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியலமைப்பு விதி 40 குறிப்பிடுகிறது.
      •   தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்ஜியம் வேண்டும் என வலியுறுத்தியவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார்.
      • அக்டோபர் 02, 1959 பண்டித ஜவஹர்லால் நேரு ராஜஸ்தான் மாநிலம் நகவூரில் பஞ்சாயத்து ராஜ்-க்கான அடிக்கல்லை நாட்டினார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • நுழைவு அனுமதி படிவம் (இன்னர் லைன் பெர்மிட்) மணிப்பூருக்கும் நீட்டிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
    •  இந்த வசதியை பெற்றுள்ள மாநிலங்களுக்கு மற்ற மாநிலத்தவர்கள் செல்லும்போது முறையான அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.
    • மேலும், அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது நிலம், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
    •  செய்தி துளிகள் :
      •  அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு நுழைவு அனுமதிப் படிவம் வசதி வழங்கப்பட்டுள்ளது.
      • கடந்த 1873 – ஆம் ஆண்டு முதல் நுழைவு அனுமதிப படிவம் வசதி நடைமுறையில் உள்ளது.
      • அரசமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படும் மாநிலங்கள் மற்றும் நுழைவு அனுமதிப் படிவத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் மாநிலங்களுக்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், அதிபர் மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
    •  அப்போது, உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று லாவ்ரோவிடம் டிரம்ப் வலியுறுத்தினார்.
    • மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதற்காக ரஷியா எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று டிரம்ப் எச்சரித்தார்.
    • செய்தி துளிகள் :
      • ஊலகம் தழுவிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவிப்பதாக லாவ்ரோவிடம் தெரிவித்த டிரம்ப், அத்தகைய ஒப்பந்தத்தில் அமெரிக்காவையும், ரஷியாவையும் தவிர, சீனாவும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
      • ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ரஷியா ஆதரவு தர வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • பி.எஸ்.எல்.வி – சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
    • புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் இஸ்ரோவின் ரிசாட் – 2பி ஆர் 1 செயற்கைக்கோள் உள்பட 10 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • இஸ்ரோவின் மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட விண் வாகனமாகத் திகழ்ந்து வரும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் 50வது முறையாக விண்ணில் ஏவப்பட்டது.
      • பி.எஸ்.எல்.வி ராக்கெட் 26 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
      • பி.எஸ்.எல்.வி ராக்கெட் 1.9டன் எடை கொண்ட செயற்கைக்கோளை தாங்கி செல்லும் திறன் கொண்டது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • சர்வதேச கூடைப்பந்து நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்த துரைராஜ் ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக 2021 வரை பணியாற்ற முடியும்.
    • 10வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் நடுவராக பணியாற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவில் இருந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு நடுவராக பணியாற்றினார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 45

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் இயல் : இல்லறவியல்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

விளக்கம் : ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியர்க்கு இடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The fourth edition of International Seminar cum Exhibition on Naval Weapon Systems ‘NAVARMS-19’ is scheduled at Institute for Defence Studies and Analysis, Development Enclave, New Delhi on 12-13 Dec 19.
    • The theme of this day is to “Make in India – Fight Category: Opportunities and Imperatives”.
    • Related Keys
      • The 3rd edition of NAVARMS held in 2013 was the biggest conference of its kind.
      • Over 300 delegates interacted with senior officers of Indian Navy.

 

 

  • India, for the first time, ranks among the top 10 in this year’s Climate Change Performance Index (CCPI) released at the COP25 climate summit in Spanish capital Madrid. The current levels of per capita emissions and energy use in India ranked 9th in the high category showing that emissions are still comparatively low.
    • Related Keys
      • India’s 2030 renewable energy target is rated very high for its well-below 2 degrees Celsius compatibility.

 

 

  • The Union Cabinet on December 11, 2019 approved Aircraft (Amendment) bill, 2019 to amend the Aircrafts act, 1934. The main objective of the bill is to fulfill the safety requirements of International Civil Aviation Organization (ICAO).
    • The Bill intends to regulate the areas of air navigation. It enhances the punishment from 10 lakh rupees to 1 crore rupees for those failings.

 

 

  • Odisha Government has decided to set up 45 fast track courts in the State, to expedite the trial of cases relating to women and children. The State government’s action comes after Centre has decided to formulate a scheme for setting up 1,023 fast track special courts for expeditious trial and disposal of rape cases.
    • Related Keys
      • Odisha Capital: Bhubaneswar
      • Odisha Governor: Ganeshi Lal

 

 

INTERNATIONAL NEWS

  • Signifying the start of the electric aviation age, the world’s first fully-electric commercial aircraft took its inaugural test flight, in Vancouver, Canada. The technology would mean significant cost savings for airlines, not to mention zero emissions.
    • The range is enough to start the revolution, adding that batteries and electric motors will eventually be developed to power longer flights.
    • Related Keys
      • Canada Capital: Ottawa
      • Canada Currency: Canadian dollar.

 

 

WORDS OF THE DAY

  • Kinship – blood relationship.
    • Similar Words – being related , family ties.
    • Antonyms – variability, variance.

 

  • Laconic – using very few words.
    • Similar Words – brief , concise.
    • Antonyms – verbose , long-winded