Today TNPSC Current Affairs December 10 2019

We Shine Daily News

டிசம்பர் 10

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் 9 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
    • பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • பின்னணி: சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

 

 

  • தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், ஆயுதச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவை திங்கள் கிழமை ஒப்புதல் வழங்கியது.
    • ஆயுதங்கள் சட்டம் 1959-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக மூன்று துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையை இரண்டாகக் குறைப்பது, தனிநபருக்குப் பல ஆயுத உரிமங்கள் அளிப்பதற்குத் தடை விதிப்பது உள்ளிட்டவற்றுக்கு வழிவகை செய்யும் ஆயுதங்கள் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த மாதம் 29-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.
    • செய்தி துளிகள்
      • புதிய திருத்தங்களின்படி, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, ஆயுதங்கள் வைத்துக்கொள்ள சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
      • ஆயுதங்கள் சட்டத் திருத்த மசோதாவில் ஆயுதங்களைச் சட்டவிரோத முறையில் கடத்துவது, திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், வைத்திருப்பவர்கள் ஆகியோரைக் கண்காணிப்பதற்கும் புதிய சட்டத் திருத்தம் வழிவகை செய்யவுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • வடக்கு ஐரோப்பிய நாடான ஃபின்லாந்தில், 34 வயது சன்னா மரீன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (டிச.10) பதவியேற்கவிருக்கும் இவர்தான், உலகின் தற்போதைய பிரதமர்களிலேயே மிகவும் இளைய வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • செய்தி துளிகள்
      • கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சன்னா மரீன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
      • மேலும், ஃபின்லாந்து வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் பிரதமராகப் பொறுப்பேற்பவர் என்ற பெருமையையும், ஃபின்லாந்தின் 3-ஆவது பெண் பிரதமர் என்று பெருமையையும் சன்னா மரீன் பெறுகிறார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை(09.12.19) மகளிர் கால்பந்தில் இந்தியா ஹாட்ரிக் தங்கத்தை கைப்பற்றியது.
    • இந்நிலையில் திங்கள்கிழமை மகளிர் கால்பந்து இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா – நேபாள அணிகள் மோதின.
    • செய்தி துளிகள்
      • மகளிர் கபடி, இறுதிச் சுற்றில் நேபாள அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது இந்தியா.
      • நீச்சல் மகளிர் 100மீ. பிரிவில் வெள்ளி, வெண்கலத்தை கைப்பற்றியது இந்தியா.
      • தெற்காசிய விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டையில் சென்னை இளம் வீராங்கனை கலைவாணி சீனிவாசன் (48 கிலோ) பிரிவில் தங்கம் வென்றார்.
      • தேசிய சாம்பியன் அங்கித் கட்டனா (75 கிலோ), ஆடவர் பிரிவில் வினோத் தன்வர் (49 கிலோ), சச்சின் (56 கிலோ), கௌரவ் சௌஹான் (91 கிலோ), மகளிர் பிரிவில் பர்வீன் (60 கிலோ) தங்கம் வென்றனர்.

 

 

  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) சார்பில் புதிய கிளப் உலகக் கோப்பை போட்டி 2019 வரும் புதன்கிழமை கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்குகிறது.
    • உலகின் தலைசிறந்த 7 அணிகள் பங்கேற்கும் ஆட்டத்தில் அல்சாத் – ஹெய்ன்கேன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐரோப்பிய சாம்பியன் லிவர் பூல், பிரேசிலின் பிளமேங்கோ அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
    • செய்தி துளிகள்
      • பிரான்சின் லியோனில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2019 பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

நியமனங்கள்

 

  • இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அந்த நாட்டு உளவு அமைப்பின் தலைவராக ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • செய்தி துளிகள்
      • இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவு இயக்குநராக பொறுப்பு வகித்த சுரேஷ் சலே, அந்த நாட்டின் உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்புக்கு ராணுவ அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
      • இதுவரை உளவு அமைப்பின் தலைவராக இருந்து வந்த நிலாந்தா ஜெயவர்த்தன, காவல்துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று மனித உரிமை தினம் அனுசரிக்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிசம்பர் 10, 1948 அன்று இந்த நாள் நடைமுறைக்கு வந்தது.
    • இந்த நாள் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில் இது நம் அனைவருக்கும் அதிகாரம் அளிக்கிறது.
    • செய்தி துளிகள்
      • இந்த ஆண்டு இது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 71 வது ஆண்டுவிழாவாகும். “மனித உரிமைகளுக்காக நிற்கவும்” (“Stand Up For Human Rights”) என்ற கருப்பொருளுடன், மாற்றத்தின் ஆக்கபூர்வமான முகவர்களாக இளைஞர்களின் திறனைக் கொண்டாடுவது, அவர்களின் குரல்களைப் பெருக்குவது மற்றும் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பில் உலகளாவிய பார்வையாளர்களின் பரந்த அளவிலான ஈடுபாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் : 43

பால் : அறத்துப்பால்

இயல் : இல்லறவியல்

அதிகாரம் : இல்வாழ்க்கை

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம்:

தென் புலத்தார், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து வகையாளரிடத்தும் செய்ய வேண்டிய அறச் செயல்களைத் தவறாமல் ஒருவன் செய்தல், சிறந்த கடமையாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • MoCA invites bids for the fourth phase of UDAN Scheme.Under the fourth phase, MoCA is to provide additional Viability Gap Funding (VGF) of around 25% to the airlines. Ministry of Civil Aviation (MoCA) has invited bids after the launch of the fourth phase of UDAN in December 2019. It invited bids for 3 unserved airports/airstrips in Andaman & Nicobar Island and 1 underserved airport/airstrip in Lakshadweep Island. The aim is to focus on the connectivity of the Islands under UDAN 4.0.
    • Related keys;
      • UDAN scheme:Launched on: 27 April 2017
      • Located at: Delhi
      • Ministry: Ministry of Civil Aviation (India)

 

 

SCIENCE & TECH UPDATES

  • Israeli students to launch self-made satellite from Sriharikota on 11 December .Three youngsters, Alon Abramovich, Meitav Assulin and Shmuel Aviv Levi, from an Israeli school, will travel to India to launch a satellite, Duchifat 3. The three 17 to 18 years old are the students of Sha’ar HaNegev High school in Israel’s southern region. The satellite was designed and built by the students aboard PSLV C48 from ISRO’s Sriharikota launch site. The satellite is to be launched on 11 December.
    • Related keys;
      • Duchifat 3 is the third satellite made by the Israeli student.
      • The satellite was jointly built by Herzliya Science Center and Sha’ar Hanegev High School students.
      • The satellite was designed to serve children from across the country to observe the Earth.
      • It is an imaging satellite that will be used for ecological research of Earth from space. 
      • The size of the satellite is 10x10x30 cm and weighs 2.3 kg.
      • The satellite will provide good help to agriculturists.

 

 

SPORTS NEWS 

  • WADA bans Russia from all major sporting events. The World Anti-Doping Agency (WADA) banned Russia for a four-year term from all major sporting events. The decision was made at Wada’s executive committee in a meeting in Lausanne, Switzerland. Under the ban, the Russian national flag and anthem will not be allowed at events such as the Tokyo 2020 Olympics and Paralympics and football’s 2022 World Cup in Qatar.
    • Related keys;
      • World Anti-Doping Agency (WADA)
      • Formed on: 10 November 1999
      • President: Sir Craig Reedie
      • Headquarters: Montreal, Quebec, Canada
      • Official language: English, French

 

 

IMPORTANT DAYS

  • Human Rights Day is observed on 10 December. The day aims to recognize and empower human rights. The day includes social, economic, cultural rights and international commitments on civil and political rights.
    • The theme of the 2019 Human Rights Day is Youth Standing Up for Human Rights. The United Nations kept the theme with a belief that the participation of youth is an essential element to achieve sustainable development for everyone.

 

 

WORDS OF THE DAY

  • Articulate – having or showing the ability to speak fluently and coherently.
    • Synonym – eloquent,fluent
    • Antonym – unvocal,hesitant

 

  • Ensconced – placed in a secure environment,settled comfortably
    • Synonym – settled,entrenched
    • Antonym – disarranged,exposed,disordered

 


Get More Info