Today TNPSC Current Affairs December 09 2019

We Shine Daily News

டிசம்பர் 09

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் அனைத்து மகளிர் அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்னை நகர மண்டலத்தின் கீழ் இரண்டாவது அனைத்து மகளிர் அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த அலுவலகம் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • உலகின் மிகப்பெரிய அஞ்சல் நெட்வொர்க் கொண்ட அமைப்பாக இந்திய அஞ்சல் துறை விளங்குகிறது.
      • இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் அஞ்சல் அலுவலகம் தில்லி சாஸ்திரி பவன் அஞ்சல் நிலையத்தில் 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
      • சென்னை நகர மண்டலத்தின் முதல் அனைத்து மகளிர் அஞ்சல் நிலையம் சென்னை எத்திராஜ் சாலையில் 2013-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பைகா கிளர்ச்சி நினைவிடத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
    • ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
    • கஜபதி பேரரசின் ஆட்சி காலத்தில் 1817-ம் ஆண்டு பிரிட்டிஷார் ஒடிஸாவில் நில அபகரிப்பு செய்த போது பைகா சமூகத்தினர் கிளர்ச்சி செய்தனர்.
    • செய்தி துளிகள்
      • பக்ஷி ஜகபந்து என்பவர் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
      • பைகா கிளர்ச்சியின் 200-ஆவது ஆண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
      • ஒடிஸா மாநில – ஆளுநர் – கணேஷிலால்

 

 

  • நாடு முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில் 57% குப்பைகள் மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பபடுவதாக மத்திய அரசு தகவல்.
    • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
    • தினமும்48 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • செய்தி துளிகள்
      • நாடு முழுவதும் மொத்தம் 84,000 நகராட்சிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
      • இந்தியாவில் மொத்தம் 79,000 நகராட்சிகளில் “தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
      • தூய்மை இந்தியா திட்டம் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • சீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இணையவழி நீதிமன்றங்கள், செயற்கை நுண்ணறிவு நீதிபதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • முதல் கட்டமாக 12 மாகாணங்களில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • சீனாவின் பிரபலமான வீ-சாட்” சமூக வலைதளம் மூலம் இணைய வழி நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • செய்தி துளிகள்
      • சீனக் குடியரசின் தண்டனைச் சட்டம் 1935-ம் ஆண்டு ஹோ டாங் சான் என்பவரால் வெளியிடப்பட்டது.
      • சீன அதிபர் – ஜீ ஜிம்பிங்
      • சீனா ஒரு கட்சி அமைப்பு கொண்ட நாடாகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ரோஜர் பெடரருக்கு ஸ்விட்சர்லாந்து அரசு வெள்ளி நாணயம் வெளியிட்டுள்ளது.
    • 2020 ஆம் ஆண்டு மே மாதம் 50 பிராங்க் மதிப்பு கொண்ட பெடரின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.
    • உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.
    • செய்தி துளிகள்
      • ரோஜர் பெடர் மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
      • ஸ்விஸ் மிண்ட் எனப்படும் வெள்ளி நாணயத்தில் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
      • ஸ்விஸ் நாட்டு பணத்தின் பெயர் ஸ்விஸ் பிராங்க் என அழைக்கப்படுகிறது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • டிசம்பர் -9 சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
    • 2003-ம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் டிசம்பர் 9-ஆம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • 2018-ம் ஆண்டு இந்தியா ஊழல் ஒழிப்பு நாடுகளின் பட்டியலில் 78-ஆவது இடத்தை பெற்றது.
    • டென்மார்க் முதலிடத்திலும், சோமாலியா 180-ஆவது இடத்திலும் உள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 42

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

விளக்கம் : துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • In Karnataka, Human Library, a concept which seeks to replace books with humans, will be held in the City of Palaces, Mysuru.
    • In a statement, Ms K Pavithra, founder of Human Library, Mysuru said, the first event of Human Library aims to break past long-standing prejudices and stereotypes by creating a safe framework for conservation by using a library analogy of lending people rather than books.
    • Related Keys
      • Karnataka Chief minister: B. S. Yediyurappa
      • Karnataka Capital: Bengaluru

 

 

  • Aiming to control the human-elephant conflicts, the Assam government launched Anti-Depedration Squads of the state forest department. The squad would be stationed at 15 major human-wildlife conflict districts in order to mitigate the problem and to ensure the safety of both humans and wildlife.
    • The state forest department engaged specially trained 50 frontline staff to handle conflict situations.
    • Related Keys
      • Assam Capital: Dispur
      • Assam Literacy (2011): 72.19%

 

 

INTERNATIONAL NEWS

  • The 34-year-old Sanna Marin, was selected by her Social Democratic party of Finland to become the country’s youngest prime minister ever, taking over after resignation of outgoing leader. Sanna who will now be youngest head of government in the country’s history, has earlier served as transport minister of Finland.
    • Finland’s Parliament is expected to formally swear in the new prime minister on 10 December 2019.
    • Related Keys
      • Finland Capital: Helsinki
      • Finland Currency: Euro

 

 

APPOINTMENTS

  • Girish Chandra Chaturvedi, the former petroleum secretary, was appointed chairman of the National Stock Exchange (NSE). The appointment comes within weeks of him joining the NSE board as a public interest director.
    • The chairman’s post was vacant since January, following Ashok Chawla’s resignation amid CBI-related developments in the Aircel-Maxis case. Girish also serves as non-executive chairman of ICICI Bank.
    • Related Keys
      • National Stock Exchange Founded: 1992
      • National Stock Exchange Location: Mumbai, India

 

 

IMPORTANT DAYS

  • The International Day of Anti-Corruption is marked by the United Nations every year on December 9 since 2003. This year the day is being marked by the organization all over the world on the following theme
    Theme: United Against Corruption

 

 

WORDS OF THE DAY

  • Imminent – about to happen
    • Similar Words – impending , at hand
    • Antonyms – remote

 

  • Inane – lacking of sense or meaning.
    • Similar Words – foolish , fatuous.
    • Antonyms – intelligent , sensible.

.