Today TNPSC Current Affairs December 06 2019

We Shine Daily News

டிசம்பர் 06

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள் 

 

 • தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு மத்திய அரசின் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான விருது டிசம்பர் 18-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழக காவல் துறைக்கு முதல் முறையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களுக்கு உட்பட 1.076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பணியை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் ; (Tamil Nadu Coastal Security Group) செய்து வருகிறது.

 

 

தேசிய நிகழ்வுகள் 

 

 • பெருநிறுவனங்களுக்கான வரியை குறைக்க வகைசெய்யும் ‘வரிகள் சட்டத்திருத்த மசோதா – 2019’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு மாற்றமும் இன்றி அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள் 

 

 • 2019 உலக மலேரியா அறிக்கையானது உலக சுகாதார அமைப்பினால் (WHO – World Health Organization) வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகளவில், 2018 ஆம் ஆண்டில் 228 மில்லியன் நபர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • அதிக எண்ணிக்கையிலான மலேரியா நோய் பாதிப்பானது உலகில் ஆப்பிரிக்கப் பிராந்தியத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பதிவாகியுள்ளன.
  • நைஜீரியாவில் அனைத்து வித மலேரியா நோய் பாதிப்பானது 24% என்ற அளவில் மிக அதிக பாதிப்பு மிக்கதாக உள்ளது

 

 • பள்ளி மாணவர்கள் தங்கள் பாடங்களை சிறந்த திறமையான முறையில் புரிந்து கொள்ள உதவுவதற்காக “மது” என்ற மின்னணு முறையிலான ஒரு கற்றல் கைபேசிச் செயலியை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒடிசாவின் முதலாவது பட்டதாரி மற்றும் வழக்குரைஞரான ‘உத்கல கௌரபா’ மதுசூதன் தாஸ் என்பவரின் நினைவாக இந்த செயலிக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • இவர் “குலாபுருதா” என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஒடிசாவில் இதற்கு மிகவும் மிகவும் மூத்த மனிதர் என்று பொருள்படும்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள் 

 

 • புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) டிசம்பர் 11-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட் ஏவப்பட உள்ளது.
  • ராணுவப் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 செயற்கைக்கோளை கடந்த நவம்பர் 27-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஒரே வாரத்தில் அடுத்த செயற்கைக்கோள் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
  • ரிசாட் 2பி ஆர்1 செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோ அனுப்பும் 50-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள் 

 

 • தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை நிலவரப்படி 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது இந்தியா.
  • நேபாளத் தலைநகர் காத்மாண்டு, பொக்ராவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
  • இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மகளிர் கால்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது இந்தியா.

 

 

திருக்குறள்

குறள் எண்                            : 39

அதிகாரம்                              : அறன் வலியுறுத்தல்

குறள் பால்                           : அறத்துப்பால்

குறள் இயல்        : பாயிரம்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

விளக்கம்    : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS               

 • Chief Minister of Odisha, Naveen Patnaik launched a smart learning phone application “Madhu” app for school children. The app named after Utkal Gourab Madhusudan Das. This app is aimed at helping school students in learning their lessons through videos and tutorials.
  • Related Keys
   • Odisha Capital: Bhubaneswar
   • Odisha Governor: Ganeshi Lal

 

 

 • Vice President M Venkaiah Naidu launched the “Bharatiya Poshan Anthem” which aims at taking the message of making India malnutrition-free by 2022 to all corners of the country.
  • The anthem was conceptualised by the Ministry of Women and Child Development, penned by noted lyricist Prasoon Joshi and sung by Shankar Mahadevan.

 

 

 • The Mumbai Central Terminus of theWestern Railway has been certified as India’s first “Eat Right Station” with a 4-Star rating awarded by the FSSAI.
  • The honour came on the basis of compliance of food safety and hygiene, availability of healthy diet, food handling at preparation, trans-shipment and retail/serving points, food waste management, promotion of local and seasonal foods and creating awareness on food safety and a healthy diet, said Western Railway chief spokesperson Ravinder Bhakar
  • Related Keys
   • FSSAI Founded: August 2011
   • FSSAI Headquarters: New Delhi

 

 

SCIENCE AND TECH UPDATES

 • ISRO has set-up a Space Technology Incubation Centre (S-TIC) at the National Institute of Technology (NIT), Tiruchirappalli. The centre will work with ISRO on the technical problems at hand related to the future Space programmes and shall provide solutions.
  • This S-TIC will cater to the southern region of India, including Andhra Pradesh, Karnataka, Kerala, Tamilnadu, Telangana, the Union Territories of Lakshadweep and Puducherry.
  • Related Keys
   • ISRO Founded: 15 August 1969
   • ISRO Director: Kailasavadivoo Sivan

 

 

SPORTS

 • India captain Virat Kohli regained the top spot in the International Cricket Council’s (ICC) Test rankings in batting.
  • Australian Steve Smith slipped from his 1 spot in the latest list issued in Dubai. Kohli, who had struck a fine 136 in the day-night Kolkata Test against Bangladesh last week, reached 928 points.
  • Related Keys
   • International Cricket Council’s (ICC) Formation          15 June 1909
   • International Cricket Council’s (ICC) Headquarters – Dubai

 

 

IMPORTANT DAYS

 • National Miners Day is celebrated on December 6 every year to recognize their efforts. The Coal Mine Health and Safety Act of 1969 as well as the Federal Mine Safety and Health Act of 1977 were created to oversee the safety and health of all miners.

 

 

WORDS OF THE DAY        

 • Galvanize – shock or excite someone into taking action.
  • Similar Words – vitalize , energize .
  • Antonyms – demotivate .

 

 • Groggy – weak, or unsteady, especially from illness.
  • Similar Words – muddled , confused.
  • Antonyms –  stable, steady.

 

 


FaceBook Updates

Call Us