Today TNPSC Current Affairs December 03 2019

We Shine Daily News

டிசம்பர் 03

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ல் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவித்தது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.
    • 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும், 12524 கிராம ஊராட்சி தலைவர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
    • கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் கட்சி அடிப்படையில் இல்லாமல் நடைபெறும்.
    • மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறும்.
    • செய்தி துளிகள்:
      • உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
      • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி ஆவர்.
      • உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரம் இந்திய அரசியலமைப்பு அட்டவணை 9-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      • அரசியலமைப்பு ஷரத்து 243 K உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முறை பற்றி விவரிக்கிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் முதல் திருநங்கை அரசு செவிலியராக அன்பு ரூபி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
    • மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.
    • செய்தி துளிகள்:
      • ஜோயிட்டா முண்டால் – இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி
      • மு. பிரித்திகா யாசினி – இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்
      • ஷப்நம் மௌசி – இந்தியாவின் முதல் திருநங்கை சட்டமன்ற உறுப்பினர்.

 

 

  • இந்தியா-ஸ்வீடன் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
    • துருவப்பகுதி ஆய்வு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி, கடல்சார் விவகாரங்கள் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
    • இந்த ஒப்பந்தங்கள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் மற்றும் ஸ்வீடன் மன்னர் கார்ல் கஸ்தாஃம் இடையே நடைபெற்றன.
    • செய்தி துளிகள்:
      • ஸ்வீடன் மன்னராட்சி முறை கொண்ட நாடாகும்.
      • உலகெங்கிலும் 44 நாடுகளில் மன்னராட்சி முறை பின்பற்றப்படுகிறது.
      • குடியரசு தலைவர் அல்லது அதிபராட்சி கொண்ட நாடுகள் உலகெங்கிலும் 90 நாடுகள் உள்ளன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • தெற்காசிய விளையாட்டு போட்டியில் ரன்களை விட்டு கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் அஞ்சலி சந்த்.
    • இவர் நேபாள நாட்டு மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஆவார்.
    • இதற்கு முன் பாலத்தீவு வீராங்கனை மாஸ் எலிஸா 3 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை சாதனையாக இருந்தது.
    • செய்தி துளிகள்:
      • தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாள தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்று வருகிறது.
      • 8 ஆண்டுகளுக்கு பின் தெற்காசியப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • முப்படை தளபதிக்கான பொறுப்புகள் குறித்த அறிக்கையை அரசிடம் சமர்பித்தது உயர்நிலை குழு.
    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
    • முப்படைகளுக்கும் இடையே இணைப்பு பாலமாகச் செயல்படுவது, அந்தந்தப் படைகளுக்கான தேவைகளை ஒதுக்கீடு செய்வது போன்றவை முக்கிய பணிகளாக இருக்கும்.
    • செய்தி துளிகள்:
      • கார்கில் மறு ஆய்வுக் குழு கடந்த 1999-ம் ஆண்டு முப்படை தளபதி பதவியை உருவாக்க பரிந்துரைத்தது.
      • கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முப்படை தளபதி பதவி உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
      • இந்திய அரசியலமைப்பு ஷரத்து 53 இந்திய குடியரசு தலைவர் முப்படைகளின் தலைவராவர் என்று தெரிவிக்கிறது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3
    • மையக்கரு – “மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் தலைமையின் பங்களிப்பை ஊக்குவித்தல்”
    • செய்தி துளிகள்:
      • இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு, முழுப் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிக்க 1955-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டது.
      • 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 2 கோடியே 60 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.
      • உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி 10 கோடி பேர் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

 

 

திருக்குறள்

 

குறள் எண்          : 36

அதிகாரம்                              : அறன் வலியுறுத்தல்

குறள் பால்                           : அறத்துப்பால்

குறள் இயல்        : பாயிரம்

அன்றறிவாய் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுகால் பொன்றாத் துணை

விளக்கம் : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.    

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS               

  • Centre is launching nationwide vaccination drive to prevent eight diseases under Intensified Mission Indradhanush 2.0 across the country. The government’s flagship scheme is aimed at immunizing children under the age of 2 years and pregnant women against eight vaccine preventable diseases. The IMI 2.0 will be carried out between December 2019 and March 2020.

 

 

INTERNATIONAL NEWS

  • India and Japan on Saturday held their inaugural foreign and defence ministerial dialogue . Rajnath Singh and S Jaishankar led the Indian delegation while the Japanese side was headed by Toshimitsu Motegi and Taro Kono
    • The meeting also deliberated on various key facts of India-Japan defence and security cooperation
    • Related News
      • Japan Capital: Tokyo
      • Japan Currency: Japanese yen.

 

 

ECONOMY

  • GST collections crossed the Rs 1 lakh crore mark after a gap of three months in November, growing by 6 per cent to Rs 1.03 lakh crore aided by festival demand.
    • After two months of negative growth, GST revenues witnessed an impressive recovery with a positive growth of 6 per cent in November 2019 over November 2018 collections.
    • Related News
      • GST came into effect from July 1, 2017.
      • GST is meant to replace a slew of indirect taxes with a federated tax and is therefore expected to reshape the country’s 2.4 trillion dollar economy.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The first night trial of long-range nuclear capable Agni-III surface-to-surface Ballistic Missile was carried out at Integrated Test Range (ITR) at APJ Abdul Kalam Island off Odisha coast. However, the Agni-III missile’s maiden night trial ended in ‘failure’.
    • It is not the first failure of Agni series missile as in the past, two other variants of missile, Agni-I and Agni-II, have failed during both development and user trials.
    • Related Keys
      • Agni-III developed by Defence Research and Development Organisation.
      • It has already been inducted in Indian armed forces in 2011.

 

 

IMPORTANT DAYS

  • International Day of Persons with Disabilities is observed on December 3rd which is an international observance promoted by the United Nations since 1992. It is observed to raise awareness and develop an understanding to accept people with disabilities by the United Nations.

 

 

WORDS OF THE DAY

  • debacle – a sudden and ignominious failure
    • Similar Words – disaster , disintegration
    • Antonyms – Accomplishment , Create .

 

  • disperse – distribute or spread over a wide area.
    • Similar Words – scatter ,disseminate
    • Antonyms – gather