Today TNPSC Current Affairs December 01 2019

We Shine Daily News

டிசம்பர் 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழக தொழில்துறை சார்பில் தொழில் வளர் தமிழ்நாடு” முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாடு சென்னையில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் ரூ.5,027 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
    • தொழில் நிறுவனங்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ; “Biz buddy” என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார்.
    • செய்தி துளிகள் :
      • தமிழக அரசால் கடந்த ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.
      • கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக “யாதும் ஊரே”இ “தொழில் தோழன்” உள்ளிட்ட திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்தார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • முதன்முறையாக இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான “ 2 + 2” பேச்சுவார்த்தை டில்லியில் நடைபெற்றது.
    • இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • இந்தியக் குழுவிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமை தாங்கினார்.
    • பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா – ஜப்பான் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
    • செய்தி துளிகள் :
      • “தர்மா கார்டியன்” என்ற பெயரில் இந்தியா – ஜப்பான் இடையே கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
      • ஜப்பான் பிரதமர் ஷின் அபே தாராளவாத ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்

 

 

விருதுகள்

 

  • உடல் உறுப்பு தானம் – சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழக அரசு பெற்றது.
    • தில்லியில் நவம்பர் 30ம் தேதி அன்று 10வது இந்திய உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது.
    • உடல் உறுப்பு தானத்தை சிறப்பாக செயல்படுத்தும் சிறந்த மருத்துவமனைக்கான விருது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • உடல் உறுப்பு தானத்துக்கான விருதை தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக பெறுகிறது.
      • ரத்ததானம், கண்தானம் ஆகிய பிரிவுகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
      • தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அதிகபட்சமாக தமிழக அரசு ரூ.22 லட்சம் வரை வழங்குகிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 2019 டிசம்பர் 1 அன்று தொடங்குகிறது.
    • நேபாள தலைநகர் காத்மாண்டுவில் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • தெற்காசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவுகள் ஆகிய 7 நாடுகள் கலந்து கொள்கின்றன.
    • தற்போது 3வது முறையாக நேபாளத்தில் நடைபெற உள்ளது.
    • செய்தி துளிகள் :
      • 1984ம் ஆண்டு காத்மாண்டுவில் முதல் தொற்காசிய போட்டிகள் நடைபெற்றன.
      • 14 முறை இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
      • முதன் முறையாக பாரா கிளைடிங், கோல்ப், காரத்தே ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1
    • மையக்கரு = “சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்”.
    • எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 1988ம் ஆண்டு முதல் ஐ.நா.சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • எய்ட்ஸ் HIV என்ற வைரஸ் மூலம் பரவுகிறது.
    • 1981ம் ஆண்டு எச்.ஐ.வி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 34

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள்பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

விளக்கம் :ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லதவனாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே, மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The 2nd Annual India-Bhutan Development Cooperation Talkshave held New Delhi. The talks aimed at renewing India’s commitment to supporting projects under Bhutan’s ongoing twelth five-year plan, that is from 2018-23. 
    • Aim: The bilateral mechanism aims to review the entire gamut of India’s development partnership with Bhutan

 

 

  • Maharashtra’s Savitribai Phule Pune University (STPU)and Qatar’s Milestone International Education signed a memorandum of understanding (MoU) to enable the University to set up its campus in Doha. 
    • The aim of the agreement is to provide opportunities in higher education to around 8 million Indian diaspora based in Qatar.

 

 

INTERNATIONAL NEWS

  • Reliance Industries (RIL) chief Mukesh Ambani ranked as the9th richest person globally in the Real-Time Billionaires List of Forbes. His net worth was $60 billion.
    • Ambani made it to the daily list of the top 10 richest people in the world. Also, he became the first Indian firm to hit the Rs.10 lakh crore market valuation mark.
    • Related Keys:
      • Top 3 in the list:
        ♦ The list was topped by Amazon Founder and CEO Jeff Bezos with a net worth of $113 billion 
        ♦ Microsoft co-founder Bill Gates ranked second with a net worth of $107.4 billion
        ♦ Bernard Arnault & family Chairman and CEO, LVMH Moet Hennessy Louis Vuitton ranked third with a net worth of $107.2 billion

 

 

SCIENCE &TECH UPDATES

  • Indian Navy successfully test-fired the 290 km strikerange Brahmos supersonic cruise missile. The supersonic cruise missile was test-fired in the Arabian Sea. 
    • Related News:
      • BrahMos is a medium-range supersonic cruise missile 
      • It can be launched from ships, aircraft, or land. 

 

 

IMPORTANT DAYS 

  • World AIDS Day is observed on 1 December every year. The day aims to raise public awareness about AIDS. The day aims to motivate the people who are infected by the fatal disease. 
    • The theme of the 2019 World AIDS Day is Communities Makes The difference.

 

 

WORDS ODF THE DAY

  • Meticulous : showing great attention to detail; very careful and precise.
    • Synonym : conscientious, diligent, ultra-careful
    • Antonym : careless, sloppy, slapdash

 

  • Reclusive : avoiding the company of other people
    • Synonym : solitary, secluded, withdrawn
    • Antonym : gregarious, sociable