Today TNPSC Current Affairs August 23 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 23

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • டாக்டர் அஜய் குமார் பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சஞ்சய் மித்ராவுக்கு பதிலாக டாக்டர் குமார் நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது. டாக்டர் குமாருக்குப் பதிலாக சிறப்புச் செயலாளர் (பாதுகாப்பு) செயலாளராக (பாதுகாப்பு உற்பத்தி) ஸ்ரீ சுபாஷ் சந்திராவை நியமிப்பதையும் ஏ.சி.சி அனுமதித்துள்ளது.

 

 

 • மத்திய மின் மற்றும்; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (ஐ.சி) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங், மாநில கூரை சூரிய கவர்ச்சிக் குறியீட்டை – சரலை (State Rooftop Solar Attractiveness Index – SARAL) டெல்லியில் தொடங்கினார். கூரை சூரிய வரிசைப்படுத்தலை எளிதாக்குவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநில அளவிலான நடவடிக்ககைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் SARAL அதன் முதல் குறியீடாகும்.
  • இந்த குறியீட்டில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரா முறையே 2, 3 மற்றும் 4 வது இடங்களைப் பெற்றுள்ளன.

 

 

 • மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெறும் விழாவில் ‘மனு காந்தியின் டைரி’ (1943 – 44) புத்தகத்தை வெளியிடுவார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் உடன் இணைந்து மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய தேசிய ஆவணக்காப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

 

 

 • 22 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய ராணுவம் (Army Welfare Housing Organisation(AWHO)) மற்றும் டாடா ரியால்டி ரூ ஹவுசிங் (Tata Reality & Housing) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.
  • குருக்ராம், சென்னை, பெங்களுரு, புனே உள்ளிட்ட 10 நகரங்களில் பரவியுள்ள டாடா ரியால்டி திட்டங்களில் 13 ‘நகரத் தயார்’ (‘Ready to Move in’) திட்டங்களில் வசிக்கும் வீடுகளை இந்திய ராணுவ வீரர்களுக்கு உடனடியாக கையகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுகிறது. 11மூ முதல் 27மூ வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

 • ஆகஸ்ட் 22, 2019 அன்று, உலகம் முதன்முறையாக ‘மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களின் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை அனுசரித்தது.
  • பெரும்பாலும் மறந்துபோன அவமானகரமான செயல்களில் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் கௌரவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

 • சந்திராயன் – 2 திட்ட வெற்றிக்குப் பின்னர் நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திராயன் – 3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறினார். செப்டம்பர் 7 ஆம் தேதி விண்கலம் நிலவின் பரப்பில் தரையிறங்கும்.

 

 

 • விண்வெளிக்கு முதல் முறையாக இயந்திர மனிதனை அனுப்பி ரஷியா சாதனை புரிந்துள்ளது. சராசரி மனிதனின் உடல் அளவு கொண்ட இயந்திர மனிதனை ஏற்றிக் கொண்டு, ரஷியாவின் சோயுஸ் எம்எஸ் – 14 ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ஃபெடார்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர மனிதன்தான், விண்வெளிக்கு ரஷியா அனுப்பும் முதல் இயந்திர மனிதன் ஆகும்.
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வரும் சனிக்கிழமை சென்றடையவிருக்கும் அந்த இயந்திர மனிதன், அங்கு 10 நாள்கள் தங்கியிருந்து அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு உதவிகள் புரிவதற்கான பயிற்சியை மேற்கொள்ளும்.

 

 

விருதுகள்

 

 • அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த விருதானது ரூ.5 லட்சம் காசோலைஇ 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன அடங்கியதாகும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Union Minister of State for Power and New & Renewable Energy (IC) and Skill Development & Entrepreneurship, RK Singh launched the State Rooftop Solar Attractiveness Index-SARAL on 21 August 2019.
  • The State of Karnataka has been placed at the first rank in the Index that evaluates Indian states based on their attractiveness for rooftop development. 

 

 

 • MoU have Signed between Indian Army and Tata Realty & Housing on 22 Aug 2019. The MoU enables the personnel of Indian Army to immediately take over dwelling units in 13 ‘Ready to Move in’ projects of Tata Realty pan India spread over 10 cities including Gurugram, Chennai, Bengaluru, Pune among others at a discount ranging from 11% to 27%.

 

 

 • On August 22, 2019,The world observed ‘International Day Commemorating the Victims of Acts of Violence Based on Religion or Belief’ for the 1st  time.It aims to honor the victims and survivors of disgraceful acts who often remain forgotten.

 

 

SCIENCE AND TECH UPDATES

 • Russia on 22, August 2019, launched an unmanned rocket carrying a humanoid robot that will spend 10 days learning to assist astronauts on the International Space Station.
  • The Robot is named as fedor Named Fedor, this is the first ever robot sent up by Russia.

 

 

 • After the Successful launch of Chandrayaan 2, ISRO Chairman reported that ISRO have planned to launch Chandrayaan 3 to take the lunar research to the next level.
  • Chandrayaan 2 will reach the Moon’s Surface on September 7th, 2019.

 

 

APPOINTMENTS

 • Ajay Kumar was appointed as the new Defence Secretary. He will replace Sanjay Mitra whose term ends on August 23, according to the Prime Minister-headed Appointments Committee of the Cabinet. 

 

 

AWARDS

 • On 22nd August 2019, ISRO Chairman K Sivan was honoured with the Tamil Nadu government’s Dr APJ Abdul Kalam Award by Chief Minister K Palaniswami.
  • The award was earlier announced in recognition of Sivan’s stellar work in the promotion of science and technology.

 

 

BOOKS

 • On 22nd August 2019, Our Culture and Tourism Minister Prahlad Singh Patel launched the book titled- the Diary of Manu Gandhi’ at a function held at New Delhi .
  • The book has been brought out by National Archives of India, on the occasion of 150th anniversary of Mahatma Gandhi in collaboration with Oxford University Press.

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube