Today TNPSC Current Affairs April 14 2019

We Shine Daily News

ஏப்ரல் 14

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி – 2019ல் (ADIBF – 2019) இந்தியாவானது கௌரவ நாடு விருந்திரனராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த புத்தக கண்காட்சியானது அரபு நாடுகளின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய வெளிப்பாட்டை காட்சிபடுத்துகிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பங்குகளின் மதிப்பில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக ஹாங்காங்கின் பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சக்தி வாய்ந்த கணினி ஒப்புருவாக்கத்தை (Computer Stimulation) பயன்படுத்தி உருகிய சங்கிலி நிலை (Chain – Melted State) என்ற புதிய பருப்பொருளின் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
    • உருகிய சங்கிலி நிலையின் போது, அணுக்கள் – ஒரே நேரத்தில் திட மற்றும் திரவமாக இருக்கும். சோடியம் மற்றும் பிஸ்மத் உள்ளிட்ட கூறுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியப் பெண்ணான “தீபா மாலிக்” – கிற்கு நியூசிலாந்து பிரதம அமைச்சரின் 2019ம் ஆண்டிற்கான எட்மண்டு ஹில்லாரி தோழமை விருதைப் பெற்றுள்ளார்.
    • இவர் 2016ம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

  • ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இந்திய குடியரசிற்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக சிறப்பான சேவையை அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான “செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் ஆர்டர்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • இஸ்ரேலின் தேசியத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 5வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • நெதன்யாகு மிக நீண்ட காலம் பதவிலிருக்கும் பிரதமராக சாதனை படைக்கவுள்ளார். “நெஸட்” என்பது இஸ்ரேலின் பாராளுமன்றம் ஆகும்.

 

TNPSC Current Affairs: April 2019 – Appointment News Image

 

புத்தகங்கள்

 

  • ‘அரசியலமைப்பு சட்டமன்றத்தில் டாக்டர். பீமராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்’ (Selected Speeches of Dr. Bhimrao Ambedkar in the Constituent Assemble) என்ற புத்தகத்தை “A.சூர்ய பிரகாஷ்” என்பவர் வெளியிட்டுள்ளார்.
    • இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர். அம்பேத்கர் ஆவார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Books News Image