Today TNPSC Current Affairs April 02.04.2020

We Shine Daily News

ஏப்ரல் 02

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  •   கொரோனா பாதிப்பினை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    • கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனார்.
    • செய்தி துளிகள்:
      •  பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பிலும், பொது மக்களிடம் இருந்தும் மார்ச் 31-ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ஆகும். நன்கொடை அளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீதுகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நிகழ்வுகள்

 

  •   நாட்டில் உள்ள 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக புதன்கிழமை (01.04.2020) முதல் செயல்படத் தொடங்கின.
    • இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. இந்த இணைப்பு மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுத்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000-க்கும் மேற்பட்ட கிளைகளும், 13,000-க்கு மேற்பட்ட ஏடிஎம்களும் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
        ழ கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன.
      • யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.

உலக நிகழ்வுகள்

 

  •   கொரோனா நோய்த்தொற்று, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் பேரிடர் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
    • செய்தி துளிகள்:
      •  ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த அமைப்பு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னையாக கொரோனா நோய்த்தொற்று ஆகியுள்ளது.
      • அந்த நோய்த்தொற்று காரணமாக நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் ஆகியவை காரணமாக, இது மாபெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  •    கொரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போர் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இது முதல் முறையாக இருக்கும்.
    • செய்தி துளிகள்:
      • உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  •    கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தொற்று கழிவுகளை சேகரிப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய இரண்டு ரோபாக்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
    •  இந்த பணியில் தற்சமயம் ஈடுப்பட்டு வரும் ஐஐடி குவஹாத்தியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைகளைச் சேர்ந்த குழு இந்த நடவடிக்கை தனிமைப் படுத்தப்பட்ட வார்டுகளில் மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும் என்று நம்புகிறது.
    • செய்தி துளிகள்:
      • தற்போது இரண்டு ரோபாக்கள் உருவாக்குவதில் பணி நடைபெறுகிறது என்றும், ஒன்று மருந்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு உணவு வழங்கல்,இது மருத்துமனையின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இரண்டாவது ரோபோ குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து நச்சு மற்றும் தொற்று கழிவுகளை சேகரிப்பதற்காக இருக்கும்

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • ICCR United Against Corona Express through Art.
    • ICCR (Indian Council For Cultural Relations) launched a competition titled “United Against corona Express through Art the art in the time of Corona. The aim of the competition is to unite the citizens across the world.
    • The competition was announced by the ministry of External Affairs (MEA) and this soft power initiatives is being organized by ICCR
    • Related Keys:
      • Indian Council for cultural relations
      • Head quarters –        New Delhi
      • Founder –        Maulana Abdul Kalam Azad
      • President –        Vinay Sahasrabuddhe

 

 

 

INTERNATIONAL NEWS

  • World will go into recession except India and China due to COVIND-19 USD 2.5 million rescue package needed .
    • According to new analysis from United nations Conference on Trade and Development (UNCTAD) titled “The Covind-19 shock to developing countries towards a whatever it takes programme for the two thirds of the world’s recession, many developing countries due to Covind-19 pandemic with an exception to India and China.
    • Related keys :
      • About UNCTAD
      • Establishment -1964
      • head quarters – Gerova Switerland

 

 

 

  • Poverty to Increase by it in best Asia and Pacific due to COVID – 19 world bank April 2020 update.
    • World Bank in its April 2020 Economic update for east Asia and Pacific (EAP) titled “East Asia and Pacific in the time of COVID-19” has stated that if the economic situation become worsen further due to COVID – 19 Consequences then to poverty is estimated to increase by about 11 million people in EAP Region
    • Related Keys:
      • About World Bank
      • Establishment –        1944
      • President –        David R.Malpass
      • Headquarters –        Washington, D.C. U.S

 

 

APPOINTMENTS AND RECOGNITIONS

  • Lakminarayanan appointed as MD of Sundaram Home Finance.
    • Lakshminarayanan whole – time director of Sundaram Finance Limited, was appointed as the MD of its wholly owned home finance subsidiary Sundaram Home Finance. He was took charge on April 1st 2020 and will replaced Srinivas Achaiya.
    • The company has posted a total income of Rs. 1006 core and a net profit of Rs. 145 core . For the financial year 2019.
    • Related Keys:
      • About Sundaram Finance Limited
      • Chairman -T.T.Srinivasaragavan
      • Head quarters -Chennai, Tamil nadu

 

 

  • Acquisitions & mergers Hindustan Unilever completes India.
    • On April 1st 2020 Hindustan Unilever (HUL).  India’s largest fast moving consumer goods (FMCG) company, has completed the merger of Glaxo Smithklino Consumer Healthcare Limited with itself
    • This merger, announced on December 3, 2018 is one of the biggest deals in the FMCG Field and it will result in better value creation for all stakeholders of the firm.
    • Related Keys:
      • About Hindustan Unilever
      • Head quarters Located in- Mumbai, Maharashtra
      • Chairman and managing director – Sanjiv Mohta

 

 

WORDS OF THE DAY

  • Impinge -To haave a noticeable effect on something especially a bed one
    • Similar words -Influence affects Disturb
    • Antonyms -Protect guard defend
  • Instigate-to make something start to happen
    • Similar words -Provoke stimulate motivate make
    • Antonyms -Halt, Dissaude.