இந்தியதொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு 2020 ஒத்திவைக்கப்பட்டது.
என்.டி.ஏ- கோவிட்-19 என்ற தொற்றின் காரணமாகஇந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு மெயின்ஸ் 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய சோதனை நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்ச் 31 அன்று என்.டி.ஏவின் அதிகாரப்பூர்வ சுற்ற அறிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5, 7, 8 மற்றும் 11 ஆம்தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ள இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த இந்த ஆண்டு மேமாத கடைசி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான தேதிகள் அதிகாரத்தால் அறிவிக்கப்படவில்லை. தேதிகள் விரைவில் அதிகாரபூர்வஇணையதளத்தில் புதுப்பிக்கப்படும் இந்த தேர்வுக்கான அட்மிட்கார்டு ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப்பிறகு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த தொற்று நிலைமை கட்டுபாட்டுக்குள்வந்தவுடன் தேதிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்பதால், தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் தங்கள் இணையதளத்தில் புதுப்பிப்புகளை சரிபார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.