• உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
• கடந்த ஆண்டே தீர்மானிக்கப்பட்டபடி, உலக சுகாதார அமைப்பில் இந்தியா சார்பில் ஹர்ஷவர்தனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் ஹர்ஷவர்தன் முறைப்படி பதவியேற்பார்.
செய்தி துளிகள்:
• உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
• இந்தக் குழுவின் தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி இருந்து வருகிறார்.