fundamental rights in the indian constitution Tamil

Fundamental rights in the Indian Constitution

அடிப்படை உரிமை

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (ஐஐஐ) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.
  • அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.
  • முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது.
  • சரத்து (12): அரசு என்பதனை விளக்குகிறது. இதன்படி அரசு
  • என்பது
  • இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்
  • மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்
  • இந்திய எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளுர் அமைப்புகள்
  • இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அனைத்து அதிகார அமைப்புகள்.
  • சரத்து (13):
  • அடிப்படை உரிமைகளுக்கு முரணாக உள்ள சட்டங்கள் அனைத்தும்
  • இல்லாத நிலையென இப்பிரிவின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதாவது உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிப்புனராய்வு
  • செய்வதற்கு வகைசெய்கிறது.
  • சமத்துவ உரிமை (சரத்து 14 முதல் 18 வரை):
  • சரத்து (14):
  • சட்டத்தின் முன் சமத்துவம். சட்டமே முதன்மையானது ஒருவன் எந்த நிலையில் இருந்தாலும் சட்டத்திற்கு மேற்பட்டவனல்ல. இது இங்கிலாந்திலிருந்து எடுக்கப்பட்டது.
  • சட்டத்தின் சமபாதுகாப்பு அமேரிக்காவிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரே மாதிரியான சூழ்நிலையில் அனைவரையும் ஒரே மாதிரியாக நடந்த வேண்டும்.
  • சிறப்பு உரிமைகள் வழங்குவது இரு வேறுபட்ட அமைப்புகளிடையே இருக்கலாம். ஆனால் ஒரே அமைப்புக்குள் இருக்கக் கூடாது
  • சரத்து (15): சாதி சமய இன பால் பிறப்பு வேறுபாடுகள் காட்டத் தடை.
  • சரத்து (16): வேலைவாய்ப்புகளில் அனைவரும் சம உரிமை.
  • சரத்து (16.4): அரசு வேலைகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையினருக்கு முன்னுரிமை.
  • சரத்து (17): தீண்டாமை ஒழிப்பு தீண்டாமைச் சட்டம் (1955), பின்னர் இதுவே சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்ம் (1976) என மாற்றப்பட்டது.
  • ரத்து (18): பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் தந்த பட்டங்கள் ஒழிப்பு இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூசன் போன்ற பட்டங்களும், இராணுவ பட்டங்களான பரம்வீர் சக்ரா போன்ற பட்டங்கள் இருக்கலாம்)
  • சரத்து (19 19(i) 19(ii)):
  • பேச்சு மற்றும் கருத்துரிமை, ஆயுதமின்றி கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, இந்தியாவில் எங்கும் செல்ல உரிமை, இந்தியாவில் எங்கும் வசிக்க உரிமை, எந்தத் தொழிலையும் செய்ய உரிமை, கூட்டுறவு சங்கம் அமைக்கும் உரிமை ஆகியன. தற்போது தனிமனித சுதந்திர உரிமைகள் 6 வகையாக உள்ளது
  • சரத்து (20): குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.
  • சரத்து 20 (1): முன்மேவு சட்டங்களை இயற்றத் தடை. இவ்வாசகம், பின்னர் இயற்றப்படும் சட்டத்தின் முன் மேவுத்தன்மை பற்றியது. ஒரு செயல் குற்றமென தண்டிக்கக்கூடிய தென்றால் அப்போது செயலிலுள்ள சட்டத்தை மீறினால் அன்றி தண்டிக்கப்பட கூடாது.
  • சரத்து 20 (2): இரட்டை இடர்பாடு (னுழரடிடந துநழியசனல): ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை தண்டிக்ககூடாது.
  • சரத்து 20 (3): தன்செயலால் தானே குற்றச்சாட்டிற்கு உட்படுத்லுக்கான தடை
  • சரத்து (21): உயிர் வாழ்தல் மற்றும் தனிநபர் சுதந்திரம்.
  • சரத்து 20 மற்றும் 21 ல் உள்ளவைகளை அவசர நிலையின் போதும்கூட பிரிவு 359ன் படி ஒர் ஆணை மூலம் இந்தி உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது
  • சரத்து (21யு): 6 முதல் 14 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்குதல் (86 வது சட்டத்திருத்தின்படி)
  • சரத்து (22): கைது செய்து காவலில் வைத்திலிருந்து பாதுகாப்பு.
  • ஒருவரிடம் கைதுக்கான காரங்களை தெரிவிக்கவேண்டும்.

 

 


Get More Info