Daily Current Affairs 13 September 2021

  • 0

Daily Current Affairs 13 September 2021

Daily Current Affairs in Tamil

செப்டம்பர் 13

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலகின் முதல் முற்றிலும் பெண்களே இயக்கும் ஆலை: 10,000 பெண்களுக்கு வேலை வழங்கும் ஓலா
    • ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிவிப்பு வெளியானது முதலே பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதற்கேற்ப, இ-ஸ்கூட்டரின் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது. தற்போது மற்றொரு நற்செய்தியை ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை. ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
    • அதில், ஓலாவின் ஃப்யூச்சர் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் என்றும் இங்கு 10,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

  • வங்கிகள், ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர் விவரங்களை 3-வது முறையாக வழங்குகிறது சுவிஸ் அரசு
    • சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் விவரங்களை 3-வது முறையாக மத்திய அரசிடம் வழங்க உள்ளது அந்நாட்டு அரசு. குறிப்பாக முதன் முறையாக ரியல் எஸ்டேட் சொத்து விவரங்களையும் வழங்க உள்ளது.
    • ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து கருப்பு பண முதலீட்டாளர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் தங்கள் கருப்பு பணத்தை (கணக்கில் காட்டாமல்) சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்வது வழக்கம்.
      இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு முதலீட்டாளர்களின் விவரங்களை பெறுவதற்காக சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர் இதன்படி இந்த ஒப்பந்தத்தின்படி சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை ஏற்கெனவே 2 முறை மத்திய அரசிடம் சுவிஸ் அரசு வழங்கியது. அதில் 100-க்கும் மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
    • இந்நிலையில், 3-வது முறையாக கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை இந்த மாதத்துக்குள் மத்திய அரசிடம் சுவிஸ் அரசு வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது

தேசிய செய்திகள்

  • குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதற்கு புபேந்திர படேலுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து
    குஜராத்தின் புதிய முதல்வராக புபேந்திர படேல் பதவியேற்றுள்ளார் இதற்கு முன் குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புபேந்திர படேல் புதிதாக குஜராத் முதல்வராக
    Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

 


Leave a Reply