Daily Current Affairs 12 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 12
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அங்கீகரித்துள்ளது.
- இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- எல் சால்வடாரின் பொருளாதாரம் அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாக சார்ந்துள்ளது.
- இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
- அந்தமான் கடல்பகுதியில் இந்தியா – தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை ஜீன் -9ல் தொடங்கியது.
- இந்திய கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் பிராந்திய கடல் பகுதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து க்வாட் கூட்டமைப்பை உருவாக்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டுப்போர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
- அதன் ஒரு பகுதியாக, சாகர் திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டு கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
- க்யூஎஸ் (Quacquarelli Symonds) உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
- க்யூஎஸ் உலக பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியல் 2022 ல், 3 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.ஆராய்ச்சி பிரிவில், உலகளவில் முதலாவது இடத்தில் பெங்களுர் ஐஐஎஸ்சி உள்ளது.
- மும்பை ஐஐடி 117வது இடத்தையும், டெல்லி ஐஐடி 185வது இடத்தையும், பிடித்துள்ளன.உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்டஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுRead More…