- இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, ‘பிரிக்ஸ்’ நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
- இவ்வங்கியின் துணை தலைவர், ஜியான் ஜு கூறியதாவது:கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு காலங்களில், அவசர உதவி கடன் திட்டத்தின் கீழ், உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவுக்கு,கொரோனா பரவல் தடுப்பு, நிவாரணம், சமூக, பொருளாதார திட்டங்களுக்கு, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்
செய்தி துளிகள்:
கடந்த, 2014ல், பிரேசில், ரஷ்யா. இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய, ‘பிரிக்ஸ்’ நாடுகள் இணைந்து, புதிய வளர்ச்சி வங்கியை துவக்கின.சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் தலைவராக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைவர், கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, பிரிக்ஸ் வங்கி கடன் வழங்கி வருகிறது.