போத்காட் பாசன திட்டத்துக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • சத்தீஸ்கரில் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் போத்காட் பாசன திட்டத்துக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  • தெற்கு பஸ்தர் பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள போத்காட் பாசன திட்டம் ரூ.22,653 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தந்தேவாடா, சுக்மா, பிஜாபூர் மாவட்டங்களில்66 லட்சம் ஹெக்டோ விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர 300 மெகாவாட் நீர்மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், தந்தேவாடா மாவட்டத்தின் பர்சுர் கிராமத்தில் உள்ள இந்திராவதி நதியில் அணை கட்டப்படவுள்ளது.

 

Get More Info

செய்தி துளிகள்:

  • சத்தீஸ்கர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர்.

 


Get More Info