POCSO Act
Protection Of Children from Sexual Offences (POCSO) Act, 2012 |
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012 |
The Act deals with sexual offences against persons below 18 years of age, who are deemed as children. | சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கின்றது. 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்படுபவர். |
The Act is a comprehensive law to provide for the protection of children from the offences of sexual assault, sexual harassment and pornography. |
சட்டமானது பாலியல் வன் கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் போன்ற குற்றங்களிலிருந்து குழந்தைகளை அல்லது சிறார்களை பாதுகாக்கின்றது. |
The Act incorporates child friendly procedures for reporting recording, investigation and trial offences. |
மேலும் இச்சட்டம் குழந்தைகளிடம் வாக்கு மூலம் வாங்கும் போது, விசாரணை நடத்தும் போது, அதனை பதிவு செய்யும் போது அவர்களுக்கு உகந்த சூழல் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. |
Salient Features | சிறப்பியல்புகள் |
1) National Commission for Protection of Child Right (NCPCR) is mandated under Sec.44 of POCSO Act to monitor the implementation of the provisions of the Act. | 1) இச்சட்டம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குகின்றது. இச்சட்டத்தில் உள்ள விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவதை இவ்வாணையம் கண்கானிக்கிறது. |
2) It prescribes punishment to the people who traffic children for sexual purposes | 2) பாலியல் நோக்கத்தோடு குழந்தைகளை கடத்தும் நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிறது. |
3) The media is barred from disclosing the identity of the child unless permitted by the court. |
3) நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் குழந்தைகளை பற்றிய அடையாளங்களை ஊடகம் வெளியிடுவதை தடை செய்கிறது. |
4) In keeping with the best International Child Protection Standards. | 4) இச்சட்டம் சர்வதேச குழந்தை பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உகந்ததாக உள்ளது. |
5) Prescribes stringent punishment graded as per the gravity of the offence with a maximum term of rigorous imprisonment for life, and fine. | 5) சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையாக அதிகபட்சமாக கடுமையான ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றது. |
Further Information | கூடுதல் தகவல் |
Conflict between POCSO Act and IPC Section 375 | போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 375 இடையே உள்ள வேறுபாடு. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here