Daily Current Affairs 26 July 2021
Daily Current Affairs in Tamil
ஜூலை 26
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்
- ரஷ்யாவில் 325வது கடற்படை தினத்தை முன்னிட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல்கள், கண்காணிப்பு கப்பல்கள், நீர் மூழ்கிகள் மற்றும் கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
- நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டார்.
- ரஷ்ய கடற்படை தின கொண்டாட்ட அணிவகுப்பில் 40 போர் கப்பல்கள், 45 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
- அமெரிக்காவில் 38 ஆவது வெப்பக் காற்று பலூன் திருவிழா
- நியூஜெர்சியில் உள்ள ரிடீங்டன் பகுதியில் வெப்ப காற்று பலூன் திருவிழா 37 ஆண்டாக நடைபெற்று வந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 38 ஆவது ஆண்டாக இம்முறை உற்சாகத்துடன் நடைபெற்றது.
- வியாழன் கோளில் உள்ள 80 நிலவுகளில் ஒன்றாக இருக்கும் யூரோப்பாவில் ஆராய்ச்சி செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
- அதாவது யூரோப்பா மனிதர்கள் வாழ ஏற்ற இடமா? என்பதை ஆராய வரும் 2024 ஆம் வருடத்தில் ஆய்வுகலனை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் கனரக ராக்கெட் உபயோகப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஃபால்கன் ராக்கெட் 23 அடுக்குகளை உடையது. மேலும், உலகிலேயே இரண்டாவதாக உபயோகிக்க கூடிய வகையில் தற்போதைக்கு செயல்பாட்டில் உள்ள அதிக சக்தியுடைய ராக்கெட்டும் இது தான் என்றுRead More…