Daily Current Affairs 21 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 21
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு கவனம் பெற்றுள்ளது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்க காப்பால் செய்யப்பட்ட கண் கண்ணாடியை பரிசளித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
- பல்வேறு முக்கியத் தலைவர்களுடான சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம்.
- புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- ‘லாம்ப்டா’ என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது.
- இந்த வகையான லாம்ப்டா வைரஸ் 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.
- குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது.
- உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்பா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும் போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ்களுக்கு பெயரையும் வெளியிட்டது.
- இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸீக்கு லாம்ப்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- கடற்கொள்ளை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஐரோப்பிய யூனியன் நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றின் கடற்படையுடன் இணைந்து ஜீன் 18ல் கூட்டு போர்ப் பயிற்சியை தொடங்கியது.
- இந்த பயிற்சி ஏடன் வளைகுடா பகுதியில் 2 நாள்கள் நடக்கிறது.
- இதில் 4 நாடுகளை சேர்ந்த 5 போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன.
- இத்தாலி கடற்படை கப்பல் ஐடிஎஸ் கராபினெரி, ஸ்பெயின் கடற்படை கப்பல் இ எஸ்பிஎஸ் நவாரா, பிரான்ஸ் கடற்படையின் 2போர் கப்பல்கள், எப்எஸ்டானெரி மற்றும் எப்எஸ்சர்கஃப் ஆகியவை இந்த பயிற்சியில்Read More…