Daily Current Affairs 16 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 16
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார்.
- இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
- இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன.
- அந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது.
- 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.
- இஸ்ரேலின் 13வது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றார். புதிய அரசில் 27 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள்.
.
- கம்போடியாவில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக புதிய எலிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.- இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால் அவற்றை அகற்ற கம்போடியா அரசு முடிவு செய்தது.
- இந்த பணியில் விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளை கொண்டு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
- இந்த பணியில் மகாவா என்ற எலி 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்பாக பணியாற்றியது.
கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட இந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது. - இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது.
- அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெறுவது இதுவே முதன்முறை.
தற்போது மகாவா எலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கண்ணி வெடிகளை அடையாளம் காண புதிய எலிகள் குழு கம்போடியா அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. - கண்ணி வெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது.
- தான்சானியாவை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு எலிகளுக்கு பயிற்சி வழங்கி, அதில் சிறப்பாக இருக்கும் எலிகளுக்கு ‘ஹீரோ ராட்’ என்ற சான்றிதழையும் வழங்குகிறது.
- தற்போது உருவாக்கப்பட்ட புதிய குழுவில் 21 ஆப்ரிக்க வகை பெரிய எலிகள் உள்ளன.
- உலகின் மிக நீளமான கடலுக்கடியில் கேபிளை கூகுள் உருவாக்குகிறது.
கூகிள் ஒரு திறந்த சப்ஸீகேபிளை அமைப்பதன் மூலம் அமெரிக்காவை தென் அமெரிக்க நாடுகளுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது.- பிரேசிலின் 1வது கவிஞர் ‘மரியா பிர்மினா டோஸ் ரெய்ஸை’ கௌரவிக்கும் வகையில் ‘ஃபிர்மினா’ என்று சப்ஸீ கேபிள் பெயரிடப்பட்டது.
- இது உலகின் மிக நீளமான சப்ஸீ கேபிள் ஆகும். இது ஒரு மின் மூலத்தின் மூலம் முழுமையாக இயங்க கூடியது.
- உலகின் மிகப்பெரிய கடலுக்கடியில் உள்ள கேபிளான ஃபிர்மினியா, தென் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலைRead More…